பெரியாரை பற்றி சீமான் அவதூறாக பேசிவிட்டார் என்று அவர் மீது வழக்கு பதிவு செய்வதே காவல்துறை தவறு . சட்டம் இதை அனுமதிக்கிறதா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜனவரி 10, 2025 • Makkal Adhikaram

பெரியார் சொந்தக்காரர்களோ, பிள்ளையோ ,பேரனும் வந்து தான் அந்த புகார் கூட அளிக்க முடியும். எவனோ ஒருத்தன்  பெரியாரை சீமான் தவறாக பேசி விட்டான். என்று புகார் கொடுக்க, அந்த புகாரை காவல்துறை பதிவு செய்வது சட்டப்படி தவறானது. சட்டம் என்பது பொதுவானது. பெரியாருக்கு ஒரு சட்டம் சாதாரண மனிதனுக்கு ஒரு சட்டமா? பெரியார் உயிரோடு இல்லை. அவர் இறந்து எத்தனையோ ஆண்டுகள் கடந்து விட்டது. 

அவரைப் பற்றி வாழ்கின்ற மக்களை முட்டாளாக்கி ஏமாற்றிக் கொண்டிருப்பது பகுத்தறிவா? இல்ல பைத்தியமா? அப்பா, ஆத்தா செத்துட்டாவே மறந்து போறாவனுங்க, பெரியார் செத்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. மேலும், இவர் ஒரு பெரிய சுதந்திரத் தியாகியும் இல்லை. பெரியார் மண் இப்படி எல்லாம் பேசுவது அதிகாரத்தில் ஆட்டம் போட்டு கொண்டு, எப்படி பேசினாலும் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பது மக்களுடைய ஏமாளித்தனம். 

ஏற்றுக்கொள்வது அவரவர் சுதந்திரம். அதில் யாருக்கும் உரிமை இல்லை. அப்படி இருக்கும்போது, அடுத்தவர்கள் மீது கருத்து திணிப்பு தேவையற்ற ஒன்று. உங்களுக்கு பெரியாரை பிடித்தால் உங்கள் முதுகிலோ மார்பிலோ வரைந்து கொள்ளுங்கள். அதற்காக இந்த மக்களிடம் இவ்வளவு வலுப்படுத்துகிறீர்கள்? உங்களுடைய நோக்கம் என்ன?மக்கள் வாழ்வதற்கு வழி செய்ய வக்கில்லை .வாயிலே பேசி, உழைப்பவனை சோம்பேறிகள் முட்டாள் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் அரசியலா?மேலும், இந்த விஞ்ஞான உலகத்தில் வாழ்கின்ற மக்களுக்கு தேவையற்ற ஒன்று. 

பெரியார் வாழ்ந்த காலத்தில் இருந்த வாழ்க்கை நடைமுறைகள் இல்லை. எல்லாமே மாறிவிட்டது. இப்போது போய் பெரியார் ,பெரியார் என்று பேசிக் கொண்டிருப்பது பித்தலாட்ட அரசியல் வேலை. 50 ஆண்டு காலத்திற்கு முன் வாழ்ந்த காலத்தில் வாழ்கிறார்களா? இல்லை இப்போது வாழ்கின்ற காலத்தில் வாழ்கின்றார்களா? எந்த காலத்தில் இவர்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? காலம் எவ்வளவு மாற்றங்களை கொண்டு வந்து விட்டது. 

இப்போது போய் பெரியார், சிரியார் என்று பேசிக் கொண்டு ,இந்த சமூகத்தை ஏமாற்றும் அரசியல் வேலை அது. இன்றைக்கு என்ன தேவை? மக்களுக்கு எப்படி வாழலாம்? என்று வாழ்க்கையை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கும் மக்களுக்கு! பெரியாரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் கூட்டங்களுக்கும் சரி, சீமானுக்கும் சரி இது தேவையற்ற வேலை. தேவையற்ற பேச்சு.

 நீ அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறாய்? என்ன செய்து கொண்டிருக்கிறாய்? எதை செய்தாய்? இதை மட்டும், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் சரி, அரசியல் கட்சியினரும் சரி ,இதைப் பற்றி மட்டும் நினைத்தால் போதும், வேறு தேவையற்ற பேச்சும் ,தேவையற்ற கருத்துக்களும், உங்களிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கவில்லை. இன்றைய காலத்திற்கு மக்களுக்கு தேவையானது பெரியார் அல்ல,

ஊழல்வாதிகளை ஒழிப்பவர்களும், தேசவிரோதிகளை ஒழிப்பவர்களும், தேச விரோத சக்திகளை ஒழிப்பவர்களும், இந்து மதத்திற்கு எதிரானவர்களை ஒழிப்பவர்களும் தான் தேவை. பெரியார் தேவையில்லை. அவர் வாழ்ந்து முடிந்த காலம் போய்விட்டது.பெரியாரைப் பேசிக் கொண்டிருந்தால் எனக்கு சோறு கிடைக்காது என்ற நிலைமைக்கு இளைய தலைமுறைகள் இருந்து வருகிறார்கள்.

 அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது? என்றால், நான் எப்படி வாழ்வது? நான் எப்படி சமூகத்தில் முன்னேறுவது? இதுதான் அவர்களுடைய மனநிலை. ஆனால் ,இந்த அரசியல் கட்சி தலைவர்கள் தமிழ்நாட்டில் ஒருவர் கூட இந்தியாவின் முன்னேற்றத்தை பற்றியோ, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றியோ சிந்திக்காமல், இவர்களுடைய சுயநலத்திற்கு எதையோ ஒன்று பேசிக்கொண்டு, தமிழக மக்களை முட்டாளாக்கும் அரசியல் தேவைதானா?

 உயிரோடு வாழப்பவனுக்கு சமாதி கட்டிக்கொண்டு, செத்தவனுக்கு புகழ் பாடும் வேலை, முட்டாள்களின் வேலை.அறிவுள்ளவன் சிந்தனை இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *