திருப்பரங்குன்றம் மலையில் ஆக்கிரமிப்பு முஸ்லிம் களை எதிர்த்து இந்து முன்னணி பிஜேபி மற்றும் முருக பக்தர்கள் கூடிய கூட்டம் திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

பிப்ரவரி 06, 2025 • Makkal Adhikaram

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று . இது மிகப்பெரிய பழமை வாய்ந்த முருகன் கோயில். இந்த கோயிலுக்குள் மலைமீது நவாஸ் கனி எம் பி பிரியாணி சாப்பிட்டு இது வக்ஃபு வாரிய சொத்து என்று தெரிவித்திருக்கிறார். ஒரு எம்பிக்கு மற்ற மதத்தினரின் மத உணர்வுகளை புண்படுத்தக் கூடாது என்பதை கூட தெரியாமல், அங்கே வந்து பிரியாணி சாப்பிட்டுவிட்டு போனது எவ்வளவு பெரிய தவறு? இதற்கு எம்பி பதவியே காலி செய்து இருக்க வேண்டும். இவர் மீது இந்து அமைப்புகள் வழக்கு தொடர்ந்து எம்பி பதவியை காலி செய்ய வேண்டும். 

மேலும், இந்துக்கள் ஒற்றுமை இல்லாமல் அரசியல் கட்சிகளால் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற ஒரு அரசியல் தெரிந்துதான் மற்ற மதத்தினரான முஸ்லிம்களும் ,கிறிஸ்தவர்களும் இப்படி இந்துக்களின் தெய்வங்களை அவமதிக்கும் வகையில் திமுக ஆட்சி, அதிகாரத்தை வைத்து மலையை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பு வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதையும் இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. 

இவர்கள் வீட்டில் எல்லா கோயிலுக்கும் போவார்கள் ,யாக பூஜை நடத்துவார்கள், ஆனால், இதுபோன்ற பிரச்சனைகள் கோயிலுக்கு ஏற்படும்போது துர்கா ஸ்டாலின் எங்கே போய்விட்டார்? சபரீசன் எங்கே போய்விட்டார்? சாமி கும்பிடும் போது மட்டும் இருக்கின்ற பக்தியா? இந்தக் கோயிலில் முஸ்லீம்கள் வந்து ஆக்கிரமிப்பு செய்து அங்கே பிரியாணி சாப்பிடுவது இவர்களுக்கு தெரியாதா? தொடர்ந்து இந்துக்களை ஏமாற்ற முடியாது. அரசியலில் ஆட்சி அதிகாரத்திற்காக இந்துக்களின் ஓட்டை வாங்குவதற்காக இவர்கள் சாமி கும்பிட்டு இருக்கிறார்களா? அல்லது வெளிவேஷம் போடுகிறார்களா? இந்துக்களின் கேள்வி? மேலும்,

திமுக அரசு உங்களுடைய அதிகாரத்தை முருகனிடம் காண்பித்தால், முருகன் அசுரர் கூட்டத்தை வதம் செய்த தேவர்கள் தலைவன் இங்கே வைத்துக் கொண்டீர்களா ஆனால், உங்கள் ஆட்சியும் இருக்காது..கட்சியும் இருக்காது. இவ்வளவு கூட்டத்தை கூட்டம் முடியாது என்று எதிர்பார்த்த திமுக அரசுக்கு, இது ஒரு அதிர்ச்சி தான். இங்கே லட்சக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி ஒரு கூட்டத்தை கூட்டத்தைக் கூட்டி திமுக அரசுக்கு எதிரான கண்டனத்தை சவாலாக செய்திருக்கிறார்கள்.இது முருகனின் சக்தியால், நடந்திருக்கிறது. 

மேலும், இந்த மலையின் புனிதத்தை கெடுக்க நினைத்தாலும், இந்து மதத்திற்கு எதிரான செயல்களில் தொடர்ந்து செய்கின்ற கொடுமைகளுக்கு திமுக அரசு மறைமுக ஆதரவாக இருந்தால்! இது நிச்சயம் இந்துக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது மட்டுமல்ல, இந்த அரசுக்கு எதிராக இவ்வளவு பெரிய கூட்டத்தை, பல தடைகளை மீறி, கூட்டத்தை நடத்தி கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்கள் என்பது சாதாரண வேலை அல்ல.. இதில் முருகன் மீதுள்ள பக்தியால், இந்து உணர்வாளர்களின் போராட்டத்தின் வெற்றி. 

இனி திமுக அரசு! இப்ப பிரச்சனையில் அலட்சியம் காட்டினால், நிச்சயம் இந்துக்களின் போராட்டம் தொடரும் என்பது உறுதியாக தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *