பிப்ரவரி 08, 2025 • Makkal Adhikaram
ஆளுநர் ஆர். என். ரவிக்கும்,தமிழக அரசுக்கும் மோதல் போக்கு இருப்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா? நிச்சயமாக இல்லை. மேலும், ஆளுநர் அரசியல் செய்கிறார் என்று திமுக அரசு குற்றம் சாட்டுகிறது. இதுவும் இல்லை. அவருக்கு கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் உண்டு. அந்த கருத்து யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.
மேலும், ஆளுநர் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சனையைப் பற்றி எடுத்துரைக்கிறார். தவிர, செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுத்திருப்பது பற்றி பொதுமக்களே பேசுகின்ற அளவில்தான் இப் பிரச்சனை இருக்கிறது. இதை திமுக அரசு கண்டு கொள்ளக் கூடாது என்கிறார்கள். அதேபோல், பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தலையிடக்கூடாது. எங்களுடைய தனிப்பட்ட அதிகாரத்தில் அவர்களை நியமிப்போம் என்கிறார்கள். இதுவும் தவறு.
பல ஆண்டுகளாக ஆளுநர் தான் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமனம் செய்து வருகிறார்கள். அதில் அந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தகுதியின் அடிப்படையில், திறமையின் அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டிய ஒன்று. அடுத்தது, தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் சர்வ சாதாரணமாக இருப்பதால் ,அந்தப் பிரச்சனை பற்றியும் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவிக்கிறார். இது திமுக அரசுக்கு எதிர்த்து அரசியல் செய்வது போல் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என். ரவி இல்லையென்றால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை இன்னும் மோசமாகத்தான் இருந்திருக்கும் அதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஏனென்றால், அவர் மத்திய உளவுத்துறையில் பணியாற்றிய முன்னாள் டிஜிபி அதிகாரி என்பதை நாம் மறுக்க முடியாது. இவ்வளவு பிரச்சனைகள் தமிழ்நாட்டில் முக்கிய பிரச்சனைகளாக இருக்கும் போது, மத உணர்வுகளை தூண்டும் விதமாக நவாஸ்கனி எம்பி திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கன் பிரியாணி சாப்பிட்டு செல்கிறார். இதை எதிர்த்து கேட்டால், இந்து முன்னணியும், பிஜேபியும், ஆர்எஸ்எஸ்-ம் ,தமிழ்நாட்டில் மத கலவரத்தை தூண்டுகிறார்கள் என்கிறார்கள் .
அப்படியென்றால் முஸ்லிம்கள் அந்த மலையை வக்ஃபு வாரிய சொத்து என்று சொல்வார்கள் .அதையும் இந்துக்கள் வேடிக்கை பார்க்க வேண்டும். அதற்கு கண்டனம் தெரிவித்தால், அது மத கலவரம். மேலும், இதை விட சமூக கொடுமைகள் தனிப்பட்ட பொதுமக்களுக்கும், பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கும் நடக்கின்ற பாலியல் தொந்தரவுகள், இதைப் பற்றியும் கவர்னர் பேசக்கூடாது. கவர்னர் என்றால் ரப்பர் ஸ்டாம்ப் என்று நினைக்கிறார்கள் .அது தவறு. சட்டத்தை பாதுகாக்க கூடிய முழு அதிகாரம் கவர்னரிடம் உண்டு.
அதனால்தான் எந்த ஒரு சட்டம் கொண்டு வந்தாலும், சட்டசபையில் அதை நிறைவேற்றும் அதிகாரம் கவர்னர் கையில் உள்ளது. கவர்னர் கையெழுத்து போட்டால் தான் அது சட்டமாக்கப்படும். மேலும், 356 வது பிரிவு சட்டத்தை பயன்படுத்தும் அதிகாரமும் கவர்னர் கையில் தான் உள்ளது. இவ்வளவு அதிகாரம் உள்ள கவர்னர் எப்படி ரப்பர் ஸ்டாம்பாக இருப்பார்? தமிழ்நாட்டிற்கு வந்த கவர்னர்கள், இதற்கு முன்னால் அப்படி தான் இருந்தார்கள் .அதே போல் தான் இவரும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் .
இவர் மத்திய உளவுத்துறையில் பணியாற்றி அனுபவம் மற்றும் பெரிய பொறுப்பில் இருந்தவர் .எந்தெந்த மந்திரிகள்? எந்தெந்த அரசியல் கட்சிகள்? எப்படிப்பட்ட ஊழல்கள், மறைமுகமாக இவர்கள் செய்கிறார்கள்? என்பதை அவர் பட்டியல் எடுத்து வைக்கிறார் .அவருக்கு தெரிந்து விடுகிறது .இதனால் தமிழக உளவுத்துறையே ஆச்சரியப்படும் அளவில் இந்த டேட்டாஸ்கள் எப்படி லீக் ஆகிறது? என்பது அவர்களுக்கே ஒரு ஆச்சரியமாக இருக்கிறது.
உளவுத்துறை பணியில் பெரிய பொறுப்பில் பல ஆண்டுகள் இருந்தவருக்கு இதையெல்லாம் எடுப்பது சாதாரண விஷயம் தான். அதனால் ,உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து ஊழலுக்கும், ஊழல்வாதிகளுக்கும், துணை போக கூடிய பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளின் செய்திகளை பார்த்து தீர்மானிக்க கூடாது. நாட்டில் அதுதான் பெரிய பத்திரிக்கை என்று மக்களும், நீதிமன்றமும் நினைப்பது மிகப்பெரிய தவறு. உண்மை எந்த பத்திரிக்கையில் இருக்கிறது? என்பதை இன்று தேட வேண்டி இருக்கிறது. எப்படி அரசியல் சுயநலத்திற்காக மாறிவிட்டதோ, அதேபோல் இந்த பத்திரிகை தொலைக்காட்சிகளும், சுயலாபங்களுக்காக உண்மைகளை மறைத்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.
இதற்கு செய்தித் துறையும், இதுதான் சர்குலேஷன் பத்திரிகை என்று சொல்லிக்கொண்டு மக்களையும், பத்திரிக்கை உலகத்தையும்,சமூக நலன் பத்திரிகைகளையும், மத்திய, மாநில அரசின் செய்தித்துறை உயர் அதிகாரிகள் ஏமாற்றிக்கொண்டு ,முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள் .
அரசியல் கட்சிகளுக்கு பத்திரிக்கை நடத்தக் கூடியவர்கள், கட்சி பத்திரிக்கை நடத்தக் கூடியவர்கள் ,வியாபார பத்திரிகை நடத்தக் கூடியவர்கள் இவர்களெல்லாம் பெரிய பத்திரிக்கை என்றும், பெரிய செய்தியாளர்கள் என்றும்,மறைமுக சப்போர்ட்டாக செய்தித்துறை சான்றளிக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய தகுதி !அதாவது இந்த லேபிள் தான் தினத்தந்தி,தினமலர், இந்து,இந்தியன் எக்ஸ்பிரஸ்,இது என்ன ஐஎஸ்ஐ முத்திரை பதிக்கப்பட்ட கம்பெனி ப்ராடக்டா? அதாவது ஒரு கம்பெனிக்கு அதன் தரத்தின் அடிப்படையில் அரசு ஐஎஸ்ஐ சான்று வழங்குகிறது. அதுபோல், செய்தித் துறையில் சான்றளிக்க முடியுமா? மேலும், மக்கள் அதிகாரம் சமூக நலனுக்காக நடத்தப்படும் ஒரு சாமானியனின் பத்திரிக்கை.
சமூக நீதிக்காக அரசியல் கட்சிகளில் பேசக்கூடிய இதே தமிழக முதல்வர் ஸ்டாலின் எத்தனை முறை சமூக நீதி பற்றி பேசி இருப்பார்? இதைப் பற்றி ஒரு நாளாவது இவருடைய கவனத்திற்கு இந்த செய்தித் துறை அதிகாரிகள் கொண்டு சென்றிருப்பார்களா? அல்லது மத்திய அரசின் செய்தித்துறை அதிகாரிகள் தான் மோடியின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பார்களா?
ஆனால் ,அரசியலில் மட்டும் சாமானியர்கள் உயர் பதவிக்கும், பல லட்சம் கோடி ஊழல் செய்வதற்கு தகுதி இருக்கிறது. திறமை இருக்கிறது. ஆனால், ஒரு சாமானியன் பத்திரிக்கை நடத்தினால், அந்த பத்திரிகைகளுக்கு கொடுக்கக்கூடிய விளம்பரங்கள் கூட கொடுக்கக் கூடாது. அது சர்குலேஷன் சட்டத்தின் மூலம் அவர்களை ஏமாற்றுவதற்கு செய்தி துறை இருக்கிறதா? சாமானியர்கள் பதவிக்கு வரலாம் .ஆனால்,சாமானியர்கள் நடத்தும் பத்திரிக்கைக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்கக் கூடாது.
என்ன சமூக நீதி? என்ன பத்திரிகை சுதந்திரம்? பணக்காரனுக்கும், ஏழைக்கும் உள்ள வித்தியாசம் தான் பத்திரிகை சுதந்திரமா? தகுதி என்ன? தரம் என்ன? இது எல்லாம் தெரியாமல், செய்தித் துறையில் சம்பளம் வாங்குவது மக்களை முட்டாளாக்குவது மட்டுமல்ல, பத்திரிக்கை துறையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அதாவது எளியவனை, வலியவன் வீழ்த்துவது போல, சர்குலேஷன் சட்டத்தை வைத்து அறிவை வீழ்த்த முடியாது என்பதை செய்தித் துறை அதிகாரிகள் புரிந்து கொள்ளுங்கள்.
மேலும்,தமிழ்நாட்டில் எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கிறது? எத்தனை அரசியல் கட்சி எம்பி, எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்? இதைப் பற்றி ஒரு நாளாவது சட்டமன்றத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ ஒரு கேள்வி எழுப்பி இருப்பார்களா? சாமானியர்கள் நடத்தும் பத்திரிகைகள் மட்டும் வளர கூடாதா? என்ன சட்டம்? இது எல்லாம் உச்ச நீதிமன்றத்திற்கு தெரியுமா?
இந்த நிலைமையில், பத்திரிகைகளுக்கே சமூக நீதி கிடைக்கவில்லை என்றால்! சாமானிய மக்களுக்கு எங்கே ஐயா கிடைக்கப் போகிறது? சுமார் ஏழு ஆண்டுகளாக இந்த பத்திரிகை துறையின் செய்திகளை மத்திய, மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன். இதைப் பற்றி எந்த ஒரு அதிகாரியாவது அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பார்களா? அமைச்சர்களுக்கும் ,அரசியல் கட்சியினருக்கும் ஏன் பத்திரிக்கை துறையில் இருப்பவர்களுக்கு கூட 90 சதவீதத்திற்கு மேல் இந்த உண்மைகள் தெரியாது. ஆனால்,ஏதோ தங்களுடைய பேச்சும், போட்டோவும் பத்திரிக்கையில் வெளி வந்தால் போதும் என்று நினைப்பவர்கள். அதுதான் அவர்களுக்கு தேவை. அதுதான் செய்தி துறை அதிகாரிகளுக்கும் தேவை.ஆனால்,
மக்களுக்கு உண்மையை சொல்லக்கூடிய செய்தி பத்திரிக்கைகள் தேவையில்லை. இதுதான் செய்தித் துறையின் சமூக நோக்கம். இதுதான் செய்தி துறையின் சமூக நீதி. இதுதான் பத்திரிக்கை துறையின் சர்குலேஷன் சட்டம்.மேலும், அறிவை பணத்தால் வெல்ல முடியாது. இங்கே பணம் தான் அறிவு என்று 50 ஆண்டுகளுக்கு மேலாக செய்தித்துறை சொல்லிக் கொண்டிருக்கிறது.இதுதான் மத்திய மாநில அரசின் கொள்கை முடிவா? இந்த கொள்கை முடிவு பொதுநல நோக்கம் கொண்டதா? அல்லது சுயநலம் நோக்கம் கொண்டதா? அதாவது தனக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கு மட்டுமே அரசியல் சலுகை, விளம்பரங்கள் இதுதான் பத்திரிக்கை துறையின் சர்குலேஷன் சட்டமா? இதற்கு தான் தினசரி, வாரம், மாதம் என்ற பிரிவு இருக்கிறதா? இதை வைத்து சலுகை விளம்பரங்கள் தனித்தனியாக கொடுக்க அரசின் கொள்கை முடிவா? மேலும்,
பத்தாயிரம் பிரிதிகள் அடித்தால் அதுதான் பத்திரிக்கை .அதற்கு தான் அரசு அடையாள அட்டை. சரி பத்தாயிரம் பிரிதிகள் அடிக்கக்கூடிய பத்திரிக்கையின் தரம் என்ன? செய்தியின் தரம் என்ன ?எதுவும் தேவையில்லை, எதை காப்பியடித்து பத்திரிக்கை நடத்தினாலும், உதவாத ,தேவையற்ற செய்திகளை போட்டாலும் அதுவும் பத்திரிகை தான் .
மேலும், எங்களைப் போன்ற சமூக நலனுக்காக அப்படியே 10 ஆயிரம் பிரிதிகள் அடித்தாலும், நீங்கள் எவ்வளவு விளம்பரங்கள் மற்றும் சலுகைகள் கொடுப்பீர்கள் ?தவிர, இணையதளத்தில் எவ்வளவு பார்வையாளர்கள் இருக்கிறார்கள்? இது எந்த அளவிற்கு மக்களிடம் போய் சேருகிறது? இதைப் பற்றி எல்லாம் தெரியாமல் மத்திய மாநில அரசின் செய்தித் துறையில் இயக்குனராகவும், செயலாளராகவும் ஐஏஎஸ் அதிகாரிகளாக பணியாற்றுவது வீண்.எங்களுக்கும் விளம்பரங்களை கொடுங்கள் .நாங்களும் அந்த சர்குலேஷனை காட்டுகிறோம். அது ஒன்றும் பெரிய காரியம் அல்ல.இவர்கள் மக்களின் வரிப்பணத்தில் அரசு விளம்பரத்தில் பத்திரிக்கை நடத்திவிட்டு, சர்குலேஷன் காட்டிவிட்டு பெரிய பத்திரிக்கை என்றால், அது ஏற்க முடியாது.
இப்படிப்பட்ட சமூக நீதியைப் பற்றி தமிழக ஆளுநர் ஆர் .என் .ரவி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளம் சார்பாகவும், சமூக நலன் பத்திரிகைகள் சார்பாக வைக்கும் கோரிக்கை. இனியாவது, உச்சநீதிமன்றம் இன்னும் பல உண்மைகள் ஆய்வு செய்து கருத்து சொல்வது நீதிபதிகளின் முக்கிய கடமை .