![](https://makkaladhikarammedia.com/wp-content/uploads/2025/02/1001215463.jpg)
தமிழக அரசு “முதல்வர் மருந்தகம் “தமிழக முழுதும் ஆயிரம் இடங்களில் தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இது மற்ற மருந்தகங்களை காட்டிலும் மிகக் குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் விற்கப்படபோவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஐந்து ஆண்டுகளில் உருப்படியாக ஒரு திட்டம் கொண்டு வந்துள்ளார் என்றால் அது அரசு மருந்தகம் குறைந்த விலையில் விற்பனை செய்ய கொண்டு வந்துள்ள திட்டம் தான் அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.
தவிர, அரசு அதிகாரி நண்பர் ஒருவர் இந்த அரசு கல்விக்கும்,மருத்துவத்துக்கும் முக்கியத்துவம் தருகிறார்கள் என்று தெரிவித்தார். நான் அப்போதே அப்படி ஒன்றும் தெரியவில்லையே என்றேன்
இல்ல சார் நீங்க இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு என்னென்ன செய்திருக்கிறார்கள்? என்பது தெரியும் என்றார்.
அதாவது அவர் கல்வியும், மருத்துவம் சார்ந்த அரசு பணியிலும் இல்லை.அவர் சொன்ன தகவல் இது. அப்படி பார்க்கும்போது, இந்த திட்டம் மக்களுக்கு பயனுள்ள திட்டம் தான்.