அதிமுக உடைந்தால்! அது திமுகவுக்கு லாபம். தற்போது அதிமுகவில்எடப்பாடி பழனிசாமியா? அல்லது செங்கோடையனா?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனையால் செங்கோட்டையனா? அல்லது எடப்பாடி பழனிசாமியா? என்ற அளவில் கட்சியின் நிலைமை போய்க்கொண்டிருக்கிறது. இது திமுகவிற்கு சாதகமா? மேலும், கூட்டணி வலுவில்லாததால் அரசியல் நோக்கர்கள் இதை திமுகவிற்கு சாதகமாகவே கருதுகிறார்கள். தவிர,

ஏற்கனவே, அதிமுக கட்சி! மக்கள் செல்வாக்கு இழந்த நிலையில் கட்சிக்குள் ஒற்றுமை இல்லாமல் இருப்பது அது மேலும் அதிமுகவை பலவீனப்படுத்தும். தவிர எடப்பாடி பழனிசாமி கட்சியின் சீனியர்களை ஓரங்கட்டி டெம்யாக இருப்பவர்களை கூடவே வைத்துக் கொள்கிறார் என்ற உட்க் கட்சி பிரச்சனையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகமும் இருக்கிறார்.

ஒரே சமுதாயத்தில் விஷயம் தெரிந்தவர்களை ஓரம் கட்டி முனுசாமியை பக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சி.வி.சண்முகம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களின் கருத்துக்களை கேட்டு தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கக் கூடாது. இப்படி அதிமுக கட்சிக்குள் பதவி போட்டிகள் சண்டை உருவாகி மக்களின் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இந்த நிலையை பிஜேபி தனக்கு சாதகமாக்கி கொள்ளலாம் என்று நினைத்தால் அது முடியுமா? இவர்களுடைய டேஸ்ட் வேறு,பிஜேபியின் டேஸ்ட் வேறு. எப்படியோ அதிமுக கட்சிக்கு நேரம் சரியில்லை. மேலும்,

கட்சியினரும் உழைப்பதற்கு தயாராக இல்லை. உழைப்பில்லாமல் ஆட்சியைப் பிடிக்க முடியாது.கட்சியினர் அதற்கு தகுதியாக இருக்க வேண்டும். ஆனால்,இங்கே பந்தா காட்டுவதற்கு தான் தகுதியாக இருக்கிறார்கள். எந்த ஒரு கட்சியும் உழைக்காமல் ஆட்சிக்கு வரவில்லை. ஆரம்பத்தில் எல்லா கட்சியும் உழைத்து தான் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி ஒத்து வராததால் அதிமுகவை, பாஜக உடைக்கிறது என்ற தகவலும் வெளியாகிறது.இங்கே எடப்பாடி பழனிசாமி விஜயுடன் கூட்டணி வைத்து அரசியல் காய் நகர்த்தப் பார்க்கிறார் என்கிறது அரசியல் வட்டாரம். மேலும் அது பிரசாந்த் கிஷோரின் அரசியல் வியுக வகுப்பாளரின் அரசியல் திட்டமாக கூட இருக்கலாம். இவர்கள் போட்ட பிளானை பிஜேபி ஒரு பக்கம் உடைக்கலாம். மேலும், இந்த கூட்டணியால் எடப்பாடி பழனிசாமி அப்படியாவது ஆட்சியைப் பிடிப்பாரா? என்பது மிகவும் கஷ்டமான நிலை தான் ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி நம்பி யாரும் ஓட்டு போட மாட்டார்கள்.

ஆளுமை மிக்க தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதாவை நம்பி தான் அதிமுகவிற்கு ஓட்டு போட்டார்கள். மேலும், அக் கட்சியில் தலைமை இல்லாததால் அந்த கட்சிக்கு யார் தலைவர் என்ற மோட்டிவ் இரண்டாம் கட்ட தலைவர்கள் மத்தியில் அது போட்டியாக உருவெடுத்துள்ளது.

தவிர,இந்த சம்பவத்துக்கு பின்னால் சசிகலா இருக்கலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் தகவல். இது ஒரு புறம் என்றால் ஏற்கனவே ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமி இடையே ஒரு பங்காளி சண்டை ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த பிரச்சனைகளுக்குள் பாஜகவில் அதிமுகவின் கூட்டணியை அண்ணாமலை விரும்பவில்லை. ஆனால், மேலிடம் அதிமுகவின் வாக்கு வங்கியை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர்கள் கணிக்கிறார்கள்.

இதில் அண்ணாமலையின் விருப்பம் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அல்ல அது பாஜகவுக்கு பெரும்பான்மையாக இருக்க வேண்டும் என்பது அவர் கருத்தாக இருக்கலாம். அல்லது அது அண்ணாமலையின் விருப்பமாக இருந்தாலும், இங்கே இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரும் பிஜேபியில் உழைப்பதற்கு தயாராக இல்லை. மேலும்,

பிறகு அதை வியாபாரம் ஆக்கி கொள்ளையாக்க மாற்றி விட்டார்கள்.இந்த திமுக, அதிமுக கட்சிகளின் கடந்த கால அரசியல் வரலாறு புரிந்தவர்களுக்கு இந்த உண்மை புரியும்.

மேலும்,பிஜேபியில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இங்கே அதிமுக உடைந்தால் யார் எந்த பக்கம் அதிமுக கட்சியினர் அதிகம் போவார்கள் என்பது கணிக்க முடியாத ஒன்று.

இருப்பினும், எடப்பாடி பழனிசாமி விட கட்சியின் சீனியர் செங்கோட்டையன் தான்.இவர் முதல்வராவதற்கு முன்னரே சசிகலா அதிமுகவை யாரிடம் ஒப்படைப்பது என்ற அந்த காலகட்டத்தில் முதலில் கேட்டது சசிகலா செங்கோடையனை தான் என்ற தகவல் அப்போது அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டது.

அதற்கு செங்கோட்டையன் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டதாக தகவல்.பிறகுதான், எடப்பாடி பழனிசாமி கூவதூரில் எல்லா எம்எல்ஏக்களையும் வேலை கொடுத்து வாங்கி முதல்வரானார் என்ற தகவல் நம் தமிழக மக்களுக்கு தெரியும்.

அது மட்டும் அல்ல, செங்கோட்டையன் மக்களிடம் நெருங்கி பழகி செயலாற்றக்கூடிய ஒருவர் என்ற ஒரு தகவலும் கட்சி வட்டாரத்தில் எனக்கு கிடைத்த தகவல். அதனால், அதிமுக உடைந்தாலும் செங்கோட்டையன் கை தான் ஓங்கும் என்ற ஒரு தகவல் அதிமுக வட்டாரத்தில் பேசப்படும் தகவல்.

இங்கே எடப்பாடி பழனிசாமி பணத்தால் அடிப்பார்.செங்கோட்டையன் அதை செய்ய மாட்டார்.மக்கள் பணிக்கு தகுதியான ஒரு நபர் தான் அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும்,மற்றொரு பக்கத்தில் அதிமுகவின் இரட்டை இலை தேர்தல் ஆணையத்தால் முடக்கப்படுமா? என்ற ஒரு பிரச்சனையும் ஓடிக்கொண்டிருக்கிறது.

இது தவிர,எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என்று இருப்பதைவிட, அவருடன் இருப்பவர்கள் மக்கள் பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்பவர்கள் மிகவும் குறைவு.

ஏனென்றால், அதிமுகவில் சம்பாதித்தவர்கள் அந்த சொத்துக்களை காப்பாற்றுவதற்கு தான் இப்போது இந்த கட்சி தேவைப்படுகிறது என்பது மக்கள் மத்தியில் பேசப்படுகின்ற ஒரு உண்மை.

இங்கே எடப்பாடி பக்கம் செல்கிறவர்கள் அந்த நிலைமையில் தான் இருப்பார்கள்.அதில் ஒன்றும் மாற்று கருத்து இல்லை மேலும், இப் பிரச்சனை எங்கே போய் நிற்கப் போகிறது?என்பதுதான் அதிமுகவின் சீரியஸான ஒரு நிலைமை என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் முக்கிய தகவல். இதைவிட முக்கிய ஆதங்கம் அதிமுக கட்சியினர்.இப் பிரச்சனை என்ன ஆகும்? என்பது தான்…..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *