
திமுக ஆரம்பத்தில் இருந்து கல்வி விஷயத்தில் தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.இது மாணவர்களின் எதிர்கால நலனுக்கு ஆபத்து. ஒரு பக்கம் கவர்னரை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருப்பது இதுதான் தமிழ்நாட்டில்.முதன்முறை,இது எதற்கு என்றால், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மற்றும் சில மசோதாக்கள் நிறைவேற்றுவதில் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார் என்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இரு தரப்பும் தங்களின் கௌரவ பிரச்சினையாக இருந்து வந்தாலும், நியாயத்தின் பக்கத்தில் கவர்னரின் செயல்பாடுகள் உள்ளது. இங்கே அநியாயத்தின் பக்கத்தில் பத்திரிகைகள் தமிழக அரசுக்கு ஆதரவாக எழுதிக் கொண்டிருக்கிறது.இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி நடுத்தர ஏழை, எளிய மாணவர்கள் தான். இந்த மாணவர்களின் ஒழுக்கம்,கல்வித் தரத்தை இன்றைய காலகட்டத்தில் அதாவது சென்ட்ரல் போர்டு சிலபஸ்க்கும்,ஸ்டேட் போர்ட் சிலபஸ்க்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது அந்த அளவிற்கு வித்தியாசம் இருக்கிறது. இங்கே மாணவர்களின் கல்வித் தரம் ஸ்டேட் போர்டு சிலபஸில், மிகவும் தரம் குறைந்து உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் திறன்,படித்த பட்டத்திற்கு மிக குறைந்த சதவீதத்தில் தான் இருக்கிறது.அதாவது பட்டம் வாங்குவது பெரிதல்ல, அவர்களுடைய திறமை, அனுபவம்,கல்வி பற்றிய புரிதல் எந்த படிப்பை படித்தார்களோ,அதாவது பொறியியல், கலை போன்றவற்றில் பட்டம் பெற்ற மாணவர்களின் தகுதித் திறமை, ஒழுக்கம்,குறைவாகவே உள்ளது.

collage students.
இதனால், தனியார் கம்பெனிகள் குறைந்த சம்பளம் கொடுக்கிறார்கள். இப்படி எல்லாம் பாதிக்கப்படுவது ஏழை எளிய நடுத்தர மாணவர்கள் தான். ஆனால், இன்று சிபிஎஸ்சி சிலபஸில் படிக்கக்கூடிய மாணவர்கள் கல்வித்திறன் மாறுபட்டுள்ளது. இதனால், இந்த மாணவர்கள் அந்த மாணவர்களுடன் போட்டி போட முடியாத நிலைமை உருவாகி உள்ளது. இதற்கு காரணம் இப்படிப்பட்ட மத்திய, மாநில அரசின் மோதல் போக்கு கல்வியில் மாணவர்களின் எதிர்கால நலனுக்கு இது ஆபத்தாகவே அமைந்துள்ளது.

மேலும்,ஷியாம் போன்ற பத்திரிகையாளர்கள் ஸ்டாலினுக்கு ஆதரவாக பேசிவிட்டு போவதால், மாணவர்களின் எதிர்கால நலன் பாதிக்கும். இந்தி படிப்பதால் மாணவர்களுக்கு என்ன பாதிப்பு வந்துவிடப் போகிறது?
இவரே உருது மொழி படிக்க ஆதரவாக தமிழக அரசு பள்ளி நடத்துகிறது. மலையாள மொழி படிக்க ஆதரவாக தமிழக அரசு பள்ளி நடத்துகிறது. அப்போது இந்தி மொழி படிப்பதால் மட்டும் என்ன பிரச்சனை வந்துவிடும்? நானும் அரசுக்கு ஆதரவாக செய்தியை போட்டு நல்ல பெயரும், பணமும் வாங்கிக் கொள்ளலாம்.அது பத்திரிக்கை என்று சொல்வதற்கு தகுதியற்ற வேலை.

ஷியாம் மூத்த பத்திரிக்கையாளர் அவரிடம் பணியாற்றி இருக்கிறேன். இருப்பினும் இந்த வயதில் இப்படி செய்திகளை அவர் ஒருதலை பட்சமாக வெளியிடுவது எனக்கே, அருவருப்பாக தான் உள்ளது. ஏனென்றால் பத்திரிகை பொதுநல நோக்கத்திற்காக இருக்க வேண்டுமே ஒழிய, தமிழக அரசின் சுயநல நோக்கத்திற்காக பத்திரிகைகள் இருக்கக் கூடாது.தவிர, சமூக நலன் பத்திரிகைகள் கூலிக்கு மாரடைக்கும் கூட்டம் அல்ல. எனவே
மத்திய அரசு ஒரு சட்டத்தை கொண்டு வந்தால், அதை மாநில அரசின் சுயநலத்திற்காக, அரசியல் லாபங்களுக்காக அதை ஏற்க மறுப்பது தவறானது. இதில் பெற்றோர்களுக்கும்,மாணவர்களுக்கும் எந்த அளவிற்கு இந்த உண்மைகள் புரிந்து இருக்கும்?என்பதுதான் இந்த பிரச்சனையில் மத்திய மாநில அரசின் கல்விப் போட்டிக்கே முக்கிய காரணம் மேலும், அரசியல் கட்சியினர் பேசுவது வேறு,கல்வியில் தரம், தகுதி பற்றி எதுவும் தெரியாதவர்கள்.

.அதுவும் திமுக எல்லாம் தெரிந்த மேதைகள் போல் பேசுவார்கள். இந்த மேதைக்கூட்டத்தை உட்கார வைத்து இந்த கல்வியை படித்து தேர்வு எழுத சொல்லுங்கள்.அப்போது பார்த்துக் கொள்ளலாம்.அப்போதுதான் இவர்களுக்கு அந்த வலி வேதனை மாணவர்களின் எதிர்கால நலன் இதைப் பற்றி எல்லாம் தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டு இருப்பது அரசியல் கட்சி அல்ல.மேலும்,கல்வியை நீங்களே ஒழுங்காக படித்திருந்தால் அரசியலுக்கு ஏன் வருப் போகிறீர்கள் ?
அதனால், மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை அரசியல் கட்சிகள் சேர்ந்து தமிழ்நாட்டில் பாழாக்காதீர்கள். மேலும், வசதியானவர்கள் பிள்ளைகள் அனைவரும் சிபிஎஸ்சி, சிலபஸில் இந்தி படிக்கிறார்கள். ஏழை மாணவர்கள் மட்டும்தான் அரசு பள்ளியில் உங்களால் இந்தி படிக்க முடியாத நிலைமையில் ஏற்பட்டுள்ளது. இன்று கூட ஒரு அதிகாரி என்னிடம் தெரிவிக்கிறார். நானே இந்தி படிக்கவில்லையே என்ற வேதனை இருக்கிறது.
இந்திக்காரர்களிடம் பேசும்போது, ஒரு ட்ரான்ஸ்லேட்டர் ஒருவரை கூட வைத்துக் கொள்கிறேன். நிலைமை அதிகாரிகளுக்கு இப்படி இருக்கிறது என்றால், சாமானிய மக்களின் நிலைமை என்ன? தவிர இந்தி தெரிந்தால் இந்த மாணவர்களுக்கு மத்திய அரசில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.