மார்ச் 02, 2025 • Makkal Adhikaram
சொந்த விஷயத்தை அரசியலக்குவது சீமானுக்கும் மு க ஸ்டாலினுக்கும் அல்லது அவரது கட்சியினருக்கும் இது என்ன அரசியல் பங்காளி சண்டையா?
சீமானின் அரசியல் பேச்சு, தமிழ்நாட்டு மக்களுக்கு இழப்புக்களையோ, அல்லது அவர்களுடைய பிரச்சனைகளையோ, தீர்த்து வைக்கப் போவதில்லை. ஆனால், ஒரு சில விஷயங்கள் திமுகவை எதிர்த்து அரசியல் பேச்சாளராக இருந்து வருகிறார். அது அவர் ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில், அதை செய்கிறார். அதில் தவறு இல்லை. அது செய்து தான் ஆக வேண்டும். அதில் சில ஏற்றுக்கொள்ளலாம். சில ஏற்றுக்கொள்ள முடியாததும் இருக்கிறது.

இது தான் சீமான் அரசியல். ஆனால் அவருடைய சொந்த பிரச்சனைகளில் திமுக அரசியல் செய்வது, நாகரீகமற்ற அரசியல். கேவலமான அரசியல், ஒருவருடைய சொந்த விவகாரங்களில் தலையிடுவது அது அரசியல் அல்ல, சீமான், விஜயலட்சுமி பிரச்சனை இருவருக்கும் உள்ள ஒரு பிரச்சனை. அங்கே அரசியல் உள்ளே வருவது தவறான ஒன்று.
இதை தமிழ்நாட்டு அரசியல் பிரச்சினையாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வது, கேவலமான அரசியல். விஜயலட்சுமி ஒரு நடிகை, சீமான் சினிமா துறையில் இயக்குனராக இருந்தவர் .அது படம் ஓடியதோ, ஓடவில்லையோ, அது தேவையில்லை .ஆனால், இருவருக்கும் ஒரு உடன்பாடு இருந்துள்ளது.
இது என்ன அரசியலா? இல்லை சினிமா? டிராமாவா? அரசியலுக்கான ஒரு கௌரவமே போய்விட்டது. சீமான் அந்த நடிகை பற்றி பேச வேண்டியது, நடிகை சீமானை பற்றி பேச வேண்டியது, இதை இந்த டிவியும், பத்திரிகையும் போட்டு, மக்களிடம் காட்டிக் காசு சம்பாதிக்கும், கேவலத்தை அதுக்கு இந்த பத்திரிகை,தொலைக்காட்சிகள் விபச்சாரமே செய்யலாமே!
.jpeg)
மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னது போல் காவல்துறை இவர்களோடு சேர்ந்து, ஒரு உள்நோக்க அரசியலை செய்கிறார்கள்.அது தவறானது. காக்கி சட்டை,காக்கி சட்டை ஆகத்தான் இருக்க வேண்டுமே தவிர, கரை வேட்டியாக மாறி விடக்கூடாது. நீங்கள் சீமானுக்கு ஒரு சம்மன் கொடுக்கிறீர்கள். அந்த சம்மன் உரியவர் இருந்தால் கொடுக்கலாம்.

இல்லையென்றால் அவருக்கு பதிலாக அவருடைய மனைவியிடம் தரலாம். அல்லது மகன்களிடம் கொடுக்கலாம். ஒருவேளை அண்ணாமலை சொன்னது போல், அவர் தேடப்படும் குற்றவாளியாக இருந்தால், அவர்கள் வீட்டின் கதவில் ஓட்டலாம். நீங்கள் ஓட்டிவிட்ட பிறகு, அங்கே அவர்கள் கிழக்கிறார்களா? அதை கிழிக்காமல் பாதுகாக்கிறார்களா? இது எல்லாம் தேவையில்லாத காவல்துறையின் வேலை.
நீங்கள் என்ன அரசியல்வாதியா? இதையெல்லாம் மக்களிடம் இந்த பத்திரிகை, தொலைக்காட்சியில் காட்டி ,அரசியல் ஆதாயம் தேட போகிறீர்களா? உங்களுடைய கடமை என்னவோ, அதை செய்யுங்கள். அதை விட்டு ,விட்டு, நீங்கள் கரை வேட்டி கட்டிய காவல்துறையாக மாறக்கூடாது. கண்டிப்பாக அப்படி மாறுகின்ற காவல் துறை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இது சீமானின் தனிப்பட்ட பிரச்சனை, அரசியல் பிரச்சனை அல்ல, மக்கள் பிரச்சனை அல்ல, இதற்கு ஏன்? இவ்வளவு காவல்துறை முக்கியத்துவம் கொடுக்கிறது? சரி அவர்களுடைய சொந்த பிரச்சனை, அதற்கு விளம்பரம் தேவையில்லை. அதை நீங்கள் விளம்பரப்படுத்த மீடியா கொண்டு போனது மிகப்பெரிய தவறு.மேலும், இன்றைய அரசியல் கட்சிகள் ,அரசியல் ஆதாயம் தேட ,அவர்கள் செய்த தவறுகளை மறைக்க, ஒருவருடைய தனிப்பட்ட விஷயத்தை ,அரசியலாகுவது தகுதியான அரசியல் அல்ல .மேலும்,

எந்த ஒரு பத்திரிக்கை, தொலைக்காட்சியும் மக்களிடம் செய்திகளாக கொடுக்கவும், எழுதுவதற்கும் ,துப்பில்லை. ஆனால், மக்களிடம் பெரிய பத்திரிக்கை, தொலைக்காட்சி என்று மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இப்படிப்பட்ட தகுதி உள்ள பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு தான், செய்தித் துறை அதிகாரிகள் சலுகை, விளம்பரங்களை கொடுத்து ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ,சீமானையும் ,சீமான் குடும்பத்தையும் ,அசிங்கப்படுத்துவதால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பயனும் இல்லை .என்பதை திமுக கட்சியினரும் புரிந்து, சீமானை அரசியலில் உயர்வான இடத்திற்கு நீங்களே கொண்டு போய் சேர்க்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டால் சரி.