மார்ச் 15, 2025 • Makkal Adhikaram

வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக அரசு! எதை நடைமுறை படுத்துவார்களோ ,படுத்த மாட்டார்களோ, என்பது தெரியவில்லை.மேலும், விவசாயிகளுக்கு எண்ணற்ற சலுகைகளும், திட்டங்களும் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்கள். அதேபோல் மாணவர்களுக்காக இலவச லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் மற்றும் உயர்கல்வி ஊக்கத்தொகை போன்ற பல எண்ணற்ற சலுகை அறிவிப்புக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார்.

இதையெல்லாம் அறிவிப்பது சுலபம்தான் ஆனால் செயல்படுத்துவது அதற்கான நிதி எங்கே? என்ற கேள்வி தற்போது தமிழ்நாட்டில் எழுந்துள்ளது. தமிழ்நாடு 10 லட்சம் கோடிக்கு மேல் கடன் சுமையில் இருக்கிறது. இப்படி இருக்கும்போது விவசாயிகளின் பயிர் கடன் 1472 கோடி தள்ளுபடி செய்ய அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
அதேபோல் கடந்த நான்காண்டுகளில் 10,346 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ரூபாய் 215 லிருந்து 349 ஆக உயர்த்தி அறிவித்துள்ளார்.ஒருவேளை இதுவும் 5 சவரன் நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு போல ஆகிவிடுமா? என்கிறார்கள் விவசாயிகள். மேலும்,
எதை செய்யப் போகிறார்கள் எதை செய்யாமல் அறிவித்துவிட்டு வெத்து அறிவிப்புகளாக போகும் என்பது ஆண்டவனுக்கே தெரிந்த ஒரு உண்மை .
சரி, இந்த அறிவிப்பிலாவது எங்களைப் போன்ற சாமானிய பத்திரிகைகளுக்கு இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் சலுகை, விளம்பரங்கள் அறிவிப்பார்களா? இதற்காக எவ்வளவு புகார் மனுக்கள்? எவ்வளவு தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக மத்திய, மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு வந்த இந்த பத்திரிகை செய்திகள் ஏன்? இவையெல்லாம் அரசின் கவனத்திற்கு செல்லவில்லையா?

மேலும்,மக்களின் கவனத்திற்கு சென்று, இன்று பேசு பொருளாக இருக்கக் கூடிய அளவிற்கு இந்த உண்மைகள் செய்தித் துறை பற்றியும், பத்திரிகைகளை பற்றியும், செய்தி வெளியிட்டுள்ள ஒரே பத்திரிகை மக்கள் அதிகாரம்! அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தும், இன்று வரை ஏன் ?இது பற்றி அலட்சியம் செய்கிறார்கள்?
மேலும், ஓட்டுக்காக மட்டும் தான் இந்த அரசியலும் அரசியல் நிர்வாகமும் இருக்குமா? மக்களுக்காக, மக்கள் நலனில் அக்கறை எடுத்து செயல்படக்கூடிய பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இருக்காதா? இதைப் பற்றி தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கவனத்திற்கு செய்தித் துறை அதிகாரிகள் கொண்டு செல்வார்களா? என்பது தான் சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பத்திரிகைகளின் முக்கிய கேள்வி?