கிராமங்களில் 100 நாள் வேலை திட்டம்! விவசாயத்தை வேரோடு அழித்து, மக்களை சோம்பேறி ஆக்கிய திட்டத்தில்! மிகப்பெரிய ஊழலா ? அதற்கு தான் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லையா? அதை வைத்து தான் திமுக போராட்ட அரசியலா ?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

மார்ச் 30, 2025 • Makkal Adhikaram

தமிழ்நாட்டில் மக்களை சோம்பேறி ஆக்கி ,விவசாயத்தை அழிக்கின்ற ஒரு திட்டம் தான் 100 நாள் வேலை திட்டம். ஆனால், இந்த திட்டம் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதார திட்டம் என்று அரசியல் கட்சிகள் மேடைகளில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் .இதற்காக திமுக நேற்று கிராம சபை கூட்டம் என்று சொல்லி ,அதை மக்களிடம் ஒரு பொய்யான ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறார்கள்.ஆனால், இதை புரிந்து கொண்ட மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பது இந்த அரசியல் கட்சியினருக்கு இன்னும் புரியவில்லை. 

அந்த வகையில் கே .கே. எஸ் .எஸ் .ஆர் ராமச்சந்திரன் முகத்தில் கரி பூசி இருக்கிறார்கள் ஒரு சாதாரண பெண்மணி .இது என்ன திமுக ஆர்ப்பாட்டமா? அல்லது கிராம சபை கூட்டமா? கிராம சபை கூட்டம் என்று தானே சொன்னீர்கள் ?பிறகு எப்படி இது ஆர்ப்பாட்டமாக மாறியது? ஊழலை முறைக்க பிஜேபி மீது பழியை போட்டு ,திமுக அரசியல் செய்கிறது.

 ஒவ்வொரு மாவட்டம்தோறும் 60 கோடி ,70 கோடி என்று ஊழல் கணக்குகளை இந்த 100 நாள் வேலை திட்டத்தில் நடந்திருக்கிறது என்று பொதுமக்களே பேசுகிறார்கள் .தேனி மாவட்டத்தில் மட்டும் 68 கோடி என்று சொல்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் 35 கோடி என்று பொதுமக்களை பேசுகிறார்கள்.

இப்படி நடக்கின்ற ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 நாள் வேலை திட்டத்தின் ஊழலை! ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்களா ? அதேபோல், ஒவ்வொரு மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகமும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? பிடிஓ என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? பஞ்சாயத்து திட்ட அலுவலர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? 

இப்படி அதிகாரிகள் ,பத்திரிகைகளில் வருகின்ற செய்திகளை படிப்பதில்லை. அலட்சியம் செய்கிறார்கள். எத்தனையோ முறை மக்கள் அதிகாரத்தில் இந்த 100 நாள் வேலை திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக குறிப்பிட்டிருந்தோம் .அது மட்டுமல்ல, இந்த பணத்தை ஆடிட் கணக்கு செய்யக்கூடிய ஆடிட்டர்கள், மிகப்பெரிய ஊழல் செய்து கொண்டிருக்கிறார்கள் .அதனால், மத்திய அரசு இதற்கு சரியான கணக்கு வழக்கு கொடுக்காமல், இந்த 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதியை கொடுக்கக் கூடாது என்று மக்கள் அதிகாரம் சார்பில், எத்தனையோ முறை இணையதளத்தில் செய்திகளை வெளியிட்டு இருந்தோம்.

வேலை வெட்டி இல்லாமல், மக்கள் நலனுக்காக நாங்கள் பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கிறோமா? கூலிக்கு மாரடிக்க கூடிய பத்திரிகைகள் கூட, இந்த உண்மைகளை எழுதுவதில்லை .அதாவது அரசு, விளம்பரங்களையும், சலுகைகளையும், மக்கள் வரிப்பணத்தில் பத்திரிக்கை நடத்தக்கூடிய கார்ப்பரேட் பத்திரிகைகள் கூட ,இது பற்றிய உண்மைகளை தெளிவாக சொன்னது இல்லை. 

இப்போது கூட இந்த திட்டத்தை எடுத்துவிட்டு, மத்திய அரசு அதற்கு பதிலாக 55 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ,அவர்களுடைய வங்கிக் கணக்கில் மாதம்தோறும் ரூபாய் 3000 போட்டு போடுங்கள். இதனால், பல ஆயிரம் கோடி நாட்டு மக்களின் வரிபணம் வீணடிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும்.. அடுத்தது, இதில் நடக்கக்கூடிய மிகப்பெரிய ஊழலை தடுத்து நிறுத்த முடியும். இந்த ஊழலில் பல லட்சம் போலி 100 நாள் வேலை திட்ட பணியாளர் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அதனால், இந்த திட்டம் ஒரு பக்கம் விவசாயத்தை அழித்து, அந்த பணம் முழுமையாக மக்களுக்கும் போய் சேராமல், ஊழல் திட்டமாகத்தான் இந்த 100 நாள் வேலை திட்டம் உள்ளது. அதனால், இந்த திட்டத்தால் விவசாயம் ஒரு பக்கம் அழிந்து கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் சொல்வார்கள், உதவாத அரசியல் கட்சிக் கூட்டங்கள், என்ன சொல்வார்கள் ?என்றால், இதை வைத்து விவசாயம் பாதிக்கிறது .இவர்களை விவசாயத்தில் கொண்டு போய் வேலை வாங்கி, விவசாயிகள் பயன்பெறலாம். சொல்வதற்கு நன்றாக இருக்கும். சொல்பவர்கள் தான் அவர்களை வேலை வாங்க வேண்டும். 

ஏனென்றால், அவர்கள் ஒரு வேலையும் செய்ய மாட்டார்கள். ஊர் கதையை பேசிக் கொண்டிருப்பார்கள். எப்பொழுது இரண்டு, மூன்று மணி ஆகும் என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள் .பிறகு நடையை கட்டுவாங்க. இதுதான் 100 நாள் வேலை திட்டம். இதுல எவ்வளவு ஃப்ராடு வேலை? அந்த பணத்தை வாங்கி கொடுப்பதில் கூட, ஒவ்வொரு கிராமங்களிலும், இருக்கின்ற ஏஜென்ட்கள் இந்த வயதானவர்களை ஏமாற்றுகிறார்கள். அதுவாவது தெரியுமா? கைநாட்டு வாங்கிக் கொண்டு ,பணத்தை கொடுப்பதில்லை. 

பிறகு கேட்டால், ஒருவருடைய பணத்தை எடுத்து இன்னொருவருக்கு கொடுப்பார்களாம். இப்படி எல்லாம் இந்த 100 நாள் வேலை திட்டத்தில் ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டு ,இதைக் கொண்டு போய் சிலர் வட்டிக்கு விடுகிறார்கள். சிலர் நகை ,நட்டுகளை வாங்கிப் போட்டுக் கொள்கிறார்கள். இதுதான் 100 நாள் வேலை திட்டத்தின் சிறப்பு. இதை வைத்து திமுக கட்சியினர் கூலிக்கு ஆட்களை கூட்டி வந்து, ஆர்ப்பாட்டம் நடத்திய கட்டுவது வீண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *