நீதித்துறையில் சில நீதிபதிகளின் தீர்ப்பு! விமர்சனத்திற்கு உள்ளாவதால், இதை ஆய்வுக்கு உட்படுத்த உச்ச நீதிமன்றம் ஆய்வுக் குழு அமைக்குமா?

அரசியல் இந்தியா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஏப்ரல் 11, 2025 • Makkal Adhikaram

நீதித்துறையில்! இன்று நீதிபதிகளின் தீர்ப்பு பொதுமக்களிடையே விமர்சனத்திற்கு உள்ளாவதால், அப்படிப்பட்ட தீர்ப்புகளை நேர்மையான நீதிபதிகளின் தலைமையில் ,ஆய்வுக்குழு அமைத்து அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அப்போதுதான் நீதித்துறையின் மீது சாமானிய மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் .இப்போது அந்த நம்பிக்கை கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது .

சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில்! தமிழ்நாட்டுக்கு கொடுத்த ஒரு தீர்ப்பு, இது தீர்ப்பா? இல்லை திமுக அரசுக்கு கொடுத்த சலுகையா? என்று தெரியாமல் தீர்ப்பு வந்திருக்கிறது. அந்த அளவிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், பர்த்திவாலா கொடுத்திருக்கிறார்கள் என்று பொதுமக்கள் ஒரு புறம் பேசுவதை பார்க்கிறோம் .மற்றொருபுறம் இதற்கு திமுக நிர்வாகிகள் கொண்டாடுவதை, பாராட்டுவதை அதையும் பார்க்க முடிகிறது. இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுப்பதற்கு தான் இந்த நீதிபதிகள் உட்கார்ந்து இருக்கிறார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. 

அதுமட்டுமல்ல, சமீபத்தில் நீதிபதியின் வீட்டில் 100 கோடி எப்படி வந்தது என்ற கேள்வி ?பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. நீதித்துறை சாமானிய மக்களுக்கு ஒரு தீர்ப்பாகவும், ஊழல்வாதிகளுக்கு ஒரு தீர்ப்பாகவும், பணக்காரனுக்கு ஒரு தீர்ப்பாகவும் இருந்தால், அதை நீதித்துறை என்று எப்படி சொல்ல முடியும் ?அதற்கு பதிலாக நீதி வியாபாரத்துறை என்றுதான் சொல்ல வேண்டும்.மேலும்,

எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகள், ஒரு சில பத்திரிகைகள் தான் நடுநிலையோடு உண்மையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. மீதி எல்லாம் வியாபாரமாக, வருமானத்திற்கு முக்கியத்துவம் அளித்து பத்திரிகைகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் .இதில் தினசரி ,மாதம், வாரம், மாதம் இரு முறை மற்றும் பெரிய பத்திரிகை என்ற பேதம் இல்லாமல்  இந்த நிலைமைதான் .ஏனென்றால் பத்திரிக்கை நடத்துவது கடினமான வேலை.  அதிலும், தற்போதைய காலகட்டத்தில் நெருப்பில் நீந்துவது போல் உள்ளது. செய்தி ஒரு பக்கம், பொருளாதாரம் மற்றொரு பக்கம் ,இன்னொரு பக்கம் பொதுமக்களின் விமர்சனம் ஒரு பக்கம், இதையும் தாண்டி பத்திரிக்கை நடத்த வேண்டிய கால சூழ்நிலைக்கு பத்திரிக்கைகள் தள்ளப்பட்டுள்ளது.அதேபோல்தான், 

நீதித்துறை பல கோடி ஊழல்களை விசாரிக்கும் போது, அந்த ஊழல்வாதிகளை விசாரிக்கும் நீதிபதிகள் நெருப்பில் மேல் நின்று நீதி சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். இன்று டாஸ்மாக் ஊழல் பற்றி தமிழ்நாட்டில் விசாரிக்க, எத்தனை நீதிபதிகள் விலகி இருக்கிறார்கள்? அதே போல் செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் எவ்வளவு காலதாமதம்? அமலக்கத்துறை ஒரு பக்கம் ஆதாரங்களைக் கொண்டு வந்தாலும் ,அதை ரைடு நடத்த, விசாரிக்க அதிகாரம் இல்லை என்று நீதித்துறையில் இருந்து ஊழல்வாதிகளுக்கு, சாதகமாக சட்டங்கள் வளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

இப்படிப்பட்ட சூழ்நிலை மேலும், நீதித்துறையில் தொடருமானால், நீதித்துறை பொதுமக்களின் நம்பிக்கை இழக்கும் .தவிர, சட்டத்தின்படி, மனசாட்சி படி, நீதிபதிகள் செயல்படாமல், தீர்ப்பு பொது மக்களின்  விமர்சனத்திற்கு, பொதுவெளியில் பேசும் நிலைமைக்கு நீதிபதிகள் வந்து விட்டார்கள்.அதாவது, ஊழல்வாதிகள் பாராட்டும் அளவிற்கும், அரசியல் கட்சிகள் பாராட்டும் அளவிற்கும், நீதிபதிகள் தீர்ப்பு கொடுக்கிறார்கள் என்றால்! அது எப்படிப்பட்ட தீர்ப்பாக இருக்கும்? இந்த தேச நலனுக்கு, மக்கள் நலனுக்கு எதிரான ஒரு தீர்ப்பு தான், உச்ச நீதிமன்றத்தில் பர்த்திவாலா, மகாதேவன் கொடுத்த தீர்ப்பு.இதை அரசியல் கட்சிகள் எப்படி  கொண்டாடி பாராட்டி மகிழ்கிறார்களோ, அதே போல் தான், வியாபார பத்திரிகை நிறுவனங்கள் கொண்டாடி மகிழ்கிறது.

 இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால்!

உச்ச நீதிமன்றத்தில் ஒரு குழுவை அமைக்க வேண்டும். அந்த குழு எப்படி தமிழ்நாட்டில் சுப்பிரமணியன் நீதிபதி, மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் போன்று இருக்கக்கூடிய நீதிபதிகள் ,அக்குழுவில் இடம்பெற வேண்டும். அப்போதுதான் இப்படிப்பட்ட தீர்ப்புகள், மறு ஆய்வுக்கு அவர்கள் உட்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் கவர்னர் ஆர். என். ரவி வெளிப்படையாக பேசுபவர். அவர் வட நாட்டுக்காரராக இருந்தாலும், இந்திய மக்களை நேசிக்கக் கூடிய ஒரு நபராக தான் அவர் இருந்து வருகிறார். இவர்கள்தான் இங்கே அவரைப் பற்றி அவதூறாகவும், பிரிவினையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர் இந்த தமிழ்நாட்டின் மீது உள்ள அக்கறை கூட ,இவர்களுக்கு இருக்குமா? என்பது சந்தேகம்தான்.

ஏனென்றால்! கல்வி இவர்களின் அதிகாரத்திற்கு கீழ் கொண்டு வந்து விட்டால், பல்கலைக்கழகங்கள் என்னாகும்? என்பது எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு நன்கு தெரியும் .அதை கூறு போட்டு, விற்று விடுவார்கள் .கல்வி ,கல்வியாக இருக்காது. அது எத்தனை கிலோ? என்ன விலை? என்று விற்கும் நிலைக்கு கல்வி வந்துவிடும் என்பது உறுதி .

மேலும், ஸ்டாலின் போன்ற திமுக ஆட்சியில் அவர்களிடம் இந்த அதிகாரம் போனால், இந்த நிலைமை தான் அதற்கு வரும். பொதுவாக நீதித்துறை அதனுடைய தரத்திலிருந்து பணத்திற்காகவோ, அரசியல் அதிகாரத்திற்காகவோ, நீதியை மறைமுகமாக விலை பேசினால், இப்படிப்பட்ட தீர்ப்பு வர தான் செய்யும். இதையும் உச்ச நீதிமன்றம் கொடுத்த சரியான அடி என்று கூலிக்கு மாரடைக்கும் கூட்டங்கள் பேசிக்கொண்டு, பத்திரிகைகள் வாங்கிய கூலிக்கு நன்றாக அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் .

தொடர்ந்து, இனி பெரும்பான்மை மக்களை அரசியல்வாதிகளும், இந்த பத்திரிகைகளும் ,ஏமாற்ற முடியாது. மக்களுக்கு உண்மை புரிய ஆரம்பித்திருக்கிறது. அதனால், இது கல்வியை ஊழல் பட்டியலில் கொண்டு போய் சேர்த்து விடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை .மேலும், சாமானிய மக்கள் உயர்கல்விக்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவார்கள் .அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. 

மேலும், இந்த மந்திரிகளின் சொத்து கணக்கு ஏறிக்கொண்டு இருப்பது, அதற்கு பல காரணங்களை சொல்லிக் கொண்டிருப்பது, இந்த வேலையெல்லாம் முட்டாள்களிடம் தான் பேச வேண்டும். நாட்டில் சரியான சட்டங்கள் மத்திய அரசு இன்னும் கொண்டு வரவில்லை. இதற்கு அம்பேத்கர் போட்ட ஓட்டை சட்டம் வைத்து, ஊழல்வாதிகள் இது போன்ற நீதிபதிகளை வைத்துக்கொண்டு அரசியலில்  ஆட்டம் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள் .அதற்கு அதிகாரிகள் துணை போய்க்கொண்டிருக்கிறார்கள்.மேலும்,

 நாட்டு மக்கள் அரசியல் கட்சிகளிடம் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு பக்கம் ஊழலுக்கு எதிராக பேசிக் கொண்டு, ஊழல் கட்சிகளிடம் கூட்டணி வைத்துக்கொண்டு, தேர்தலில் நிற்கிறார்கள் .காரணம் ஊழலுக்கு அர்த்தம் தெரியாத மக்கள் தான், இவர்களுக்கு வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி மக்களுக்கு தெளிவாக உண்மையை எடுத்துச் சொன்ன பத்திரிக்கை மக்கள் அதிகாரம் என்பதில் பெருமை கொள்கிறேன் .மேலும்,

சட்டத்தை கடுமையாக்கி, வெளிப்படையான நிர்வாகத்திற்கு மத்திய அரசு , உச்ச நீதிமன்றம்,மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து தான் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் .50 ஆண்டு காலத்திற்கு முன்னால் போடப்பட்ட ஒரு சட்டம், பத்திரிக்கை துறையில்70 ஆண்டு காலத்திற்கு மேலாக, ஒரே சட்டமாக சர்குலேஷன் சட்டம் இருந்து வருகிறது என்றால், எப்படி பத்திரிக்கை துறை, சாமானிய மக்களுக்கு, நடுநிலையாக இருக்கக்கூடிய பத்திரிகைகள், மக்களிடம் உண்மையை கொண்டு செல்ல முடியும்? இதை தான் தற்போது செய்து துறையின் இயக்குனர் வைத்தியநாதன் இடம் கேட்டேன் .பத்திரிக்கை துறையில் எவ்வளவோ மாற்றங்கள் வந்திருந்தும்,பழைய ஜீவோ (G.O.) மாற்ற வேண்டும் என்று தெரிவித்தேன். அவர் சி.எம். ஆபீசில் பேசுவதாக தெரிவித்தார். மேலும் ,

பத்திரிக்கை துறை! இணையதளத்தில் போட்டி போடும் அளவிற்கு வளர்ந்தும் கூட, இந்த பழைய சட்டங்கள் பத்திரிக்கை துறையை ஏமாற்றிக்கொண்டு, எங்களை போன்ற சமூகநலன் பத்திரிகைகளை வளர விடாமல் தடுக்கிறது. அதுமட்டுமல்ல, இன்றைய பத்திரிக்கை போட்டி உலகத்தில் சமூக நலன் பத்திரிகைகள் ஜெயிப்பது மிக, மிக கடினம். தவிர, இணையதளத்திலும்,இந்த பத்திரிகைகள் போட்டி போட வேண்டி இருக்கிறது. அங்கே பணத்தை வைத்து சர்குலேஷனில் போட்டி போட வேண்டி இருக்கிறது .என்றால், இங்கே அறிவும், திறமையும் வைத்து இணையதளத்தில் போட்டி போட வேண்டி இருக்கிறது. இந்த நிலைமைக்கு பத்திரிக்கை துறை வந்துவிட்டது.

இருப்பினும், பழைய ஓட்டை சட்டங்களை பின்பற்றி ஸ்டாலின் கொண்டு வந்த பத்திரிக்கையாளர்கள் நல வாரியம், சர்குலேஷன் ,கொள்கை முடிவு ,இது எல்லாம் யாருக்காக இருக்கிறது? என்றால், ஊழல்வாதிகளை மறைமுகமாக மூட்டு கொடுக்கும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு தான் இருக்கிறது. இல்லையென்றால் இந்து ராம், போன்ற இந்து (HINDU) பெரிய பத்திரிகை என்று சொல்லிக்கொண்டு ,கவர்னர் ஆர். என்.ரவி விஷயத்தில் இந்தத் தீர்ப்புக்கு பாராட்டு தெரிவிப்பார்களா? இந்த பத்திரிகை எல்லாம் நான்காவது தூணா? 

இதை பத்திரிகை என்றால் என்ன? என்று தெரியாதவர்கள் தான் பேசிக் கொண்டிருப்பார்கள். காரணம் ஊழல்வாதிகளை மக்களிடம் நல்லவர்களாக காட்டிக்கொண்டிருக்கும் பத்திரிகைகள் நான்காவது தூணா?இதற்கு சமூக ஆர்வலர்களும், இந்த தேச நலன் விரும்பிகளும், மக்கள் நலன் விரும்பிகளும், தான் பதில் சொல்ல முடியும்.மேலும்,பத்திரிகை என்றால் என்ன? என்று தெரியாதவனிடம் இந்த பத்திரிகையின் லேபிள் களை அதன் நிருபர்கள் பந்தா காட்டிபேசிக் கொண்டிருப்பார்கள்.இதற்கெல்லாம், 

 காலம் பதில் சொல்ல வேண்டிய கால கட்டத்திற்கு பத்திரிக்கைத்துறை வந்துவிட்டது. தவிர ,மக்களுக்கு ஒரு புறம் இந்த உண்மைகளை மக்கள் அதிகாரம் கொண்டு போய் சேர்த்துக் கொண்டுதான் இருக்கிறது. அது மட்டுமல்ல, மக்கள் அதிகாரம் பேஸ்புக்கில் சுமார் ஆயிரக்கணக்கில் சிறிய, பெரிய பத்திரிகைகள் மற்றும் நிருபர்கள் இணைந்திருக்கிறார்கள், .உளவுத்துறை (I B ),மத்திய மாநில, அரசின் உளவுத்துறை, நீதித்துறையில் இருப்பவர்கள் , சமூக ஆர்வலர்கள்,  பொதுமக்களில் உண்மையை தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள்இணைந்து இருக்கிறார்கள்.  

அவர்களுக்கெல்லாம் உண்மையான செய்தி என்ற ஒரு நம்பிக்கையை மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் செய்திகள் ஏற்படுத்தியிருக்கிறது. இதுதான் பத்திரிக்கை துறையின் உண்மையான வெற்றி .நீங்கள் கொடுக்கும் சலுகை, விளம்பரங்கள் பத்திரிக்கை துறைக்கு வெற்றியல்ல.இதுதான் உண்மையான வெற்றி. இப்போதாவது மத்திய மாநில அரசின் செய்தி துறை அதிகாரிகளுக்கு இந்த உண்மை புரியுமா? 

எனவே, நீதித்துறை! எங்களை போன்ற சமூக நலன் பத்திரிகைகளின் எதிர்பார்ப்பாக நீதியை தான் நம்பி இருக்கிறோம்.மேலும் , சாமானிய மக்களின் நம்பிக்கையாக நீதித்துறை! அதன் நிலையில் இருந்து சிறிதளவு கூட மாறக்கூடாது என்பதுதான் இந்திய மக்களின் நம்பிக்கை.இதை நீதித்துறை புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *