ஏப்ரல் 18, 2025 • Makkal Adhikaram

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் .ரவி, திமுக அரசின் மசோதாவை கிடப்பில் போட்டார் என்பது பிரச்சனையா? அல்லது அது அவருடைய அதிகாரத்தை பறிக்கும் மசோதா என்று அவர் கிடப்பில் போட்டாரா? இதைப் பற்றி எந்த ஊடகமும் பேசவில்லை. எந்த நீதிமன்றமும், வழக்கறிஞர்களும் அதைப்பற்றி பேசவில்லை.
கல்வி மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் குறித்த மசோதா,இது திமுக அரசால் சட்டமன்றத்திலே, கொண்டுவரப்பட்ட மசோதாக்கள். இந்த பத்து மசோதாக்களும், ஆளுநர் செய்ய வேண்டிய வேலையை, குறிப்பிட்டு கொடுக்கப்பட்டுள்ள மசோதாக்கள் .இதற்கு எப்படி ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் ?
மேலும், அவர் செய்த ஒரே தவறு, காலம் கடத்தாமல் ஜனாதிபதிக்கு மேற்குறிப்பிட்ட இந்த மசோதாக்கள், என்னுடைய அதிகாரத்தை முதல்வரே பறிப்பதாக உள்ளது என்பதை குறித்து, இந்த மசோதாவின் மீது ஒரு கடிதம் வைத்து, ஜனாதிபதிக்கு அனுப்பி இருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்தே இருக்காது. சரி வந்தது வந்து விட்டது.
திமுக அரசு இது பிரச்சினையை கொண்டுபோய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, தங்களுடைய அதிகாரமான 142 வது பிரிவை பயன்படுத்தி,உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பர்த்திவாலா மற்றும் மகாதேவன் ஆகிய இருவர் அமர்வு, இதை சட்டமாக்குகிறோம் என்று சொன்னால், அதுவும் ஒரு தவறானது தான் .

இந்த தவறான தீர்ப்பால் நாடு முழுவதும், இப்பொழுது பேசுபொருளாகி இருக்கிறது இது ஒரு புறம் என்றால், இந்த அதிகாரம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எப்படி வந்தது? யார் கொடுத்தது ?என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது? தவிர, ஜனாதிபதிக்கு உத்தரவிட இவர்களுக்கு அதிகாரம் இருக்கிறதா? என்ற கேள்வி எல்லாம் தற்போது துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் ,இது சட்ட போராட்டமாக மாறி உள்ளது. இதை தவிர, மேற்கு வங்காள முதல்வர் ,மம்தா பானர்ஜி மாநிலத்தில் வக்ஃப் வாரிய மசோதா சட்டத்தால் அங்கே மிகப் பெரிய மதக் கலவரம் வன்முறைகள் மோதலாக வெடித்துள்ளது. இப்படிப்பட்ட அந்தப் பிரச்சனையும், உச்ச நீதிமன்றத்தில் வழக்காக கொண்டு செல்லும்போது, அங்கும் நீதிபதிகள் அரசியல்வாதிகளின் பின்னணிகள் நின்று கொண்டு வழக்கை பார்த்தால் நீதித்துறையே ஆட்டம் காணும் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அதாவது நீதிபதிகள் சட்டத்தின் நிலைப்பாட்டில் மட்டுமே நிற்க வேண்டும். அதை மீறி ஒரு அணு கூட அவர்கள் இறங்க கூடாது. இங்கே அந்த சட்டத்திற்கு தடை விதித்திருக்கிறார்கள் .ஒரு பக்கம், மற்றொரு பக்கம் இந்துக்களை நீங்கள் அந்த வஃப் வாரிய சட்டத்தில் உறுப்பினர்களாக சேர்க்கக்கூடாது என்கிறார்கள். எல்லாமே அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டு, சட்டத்தை ஆய்வு செய்யக் கூடாது.மேலும்,
இரு தரப்பிலும் என்ன உண்மை இருக்கிறது? என்பதை ஆய்வு செய்வதுதான் நீதிமன்றத்தின் வேலை. இங்கே அரசியல் தலையீடு வேற, நீதிமன்றத்தில் இருப்பதால், நீதிமன்றம்! நீதிமன்றமாக செயல்பட முடியாது. அது அரசியல் மன்றமாக மாறிவிடும். அதனால் ,நீதிமன்றம் சட்டத்தை ஆய்வு செய்து பார்க்க வேண்டும் .
சட்ட நுணுக்கங்களை மற்றும் அதில் உள்ள உண்மைகளை ஆய்வு செய்துபார்க்க வேண்டும். உண்மையை ஆராய வேண்டும் .தற்போது கொண்டு வந்த சட்டம் எதற்கு? என்று கூட ஆராயாமல், அதற்கு அவகாசம் எடுக்காமல், நீதிமன்றம் செயல்பட்டால்! எப்படி நிதியை நிலை நாட்ட முடியும்? நீதித்துறையில் மறைமுகமான அரசியல் தலையீடு அதிகமானாதல், இப் பிரச்சனைக்கு முக்கிய காரணம். எப்படி பத்திரிக்கை துறையில், அரசியல் தலையீடு அதிகமானதால், இன்று பத்திரிக்கை துறையே கேவலமா பேசும் அளவிற்கு விமர்சனம் வந்துள்ளது என்றால் !அதற்கு முக்கிய காரணம் அரசியல் தலையீடு தான்.
மேலும், இப் பிரச்சனைக்கு வருவோம். அதாவது ஒரு சொத்து யாரிடம் வாங்கியது? யாரால் வாங்கப்பட்டது? அல்லது யாரால் தானமாக கொடுக்கப்பட்டது? வாங்கியவர்கள்? விற்பவர்கள்? தானம் கொடுப்பவர்கள்? இதுதான் ஒரு சொத்தினுடைய முக்கிய மூலக்கரு.
ஆனால், மூத்த பத்திரிகையாளர் என்று சோசியல் மீடியாக்களில் இவர்கள் பேசுகின்ற அட்டகாசம் தாங்க முடியவில்லை. ஒன்று கரை வெட்டி கட்டிக்கொண்டு பேச வேண்டும். இல்லையென்றால், பத்திரிக்கை என்று பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை. காரணம் ஒரு பத்திரிகை என்றால் நடுநிலையாக உண்மையை மக்கள் முன் வைப்பது தான் பத்திரிக்கை. இப்போதாவது இந்த உண்மை செய்தி துறைக்கும், இவர்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.

இவர் சொல்வது போல், அந்த காலத்தில் முஸ்லிம் மக்கள் இந்த சொத்துக்களை வாய் வழியாக எழுதி வைத்து விட்டார்கள். அல்லது சொல்லிவிட்டார்கள். என்று சொல்வது இது மாடு மேய்ப்பவனை விட கேவலமாக, கீழ்த்தரமாக சொல்லும் கருத்து. எப்படி ஒரு சொத்துக்கு, எந்த ஆதாரமும் இல்லாமல், இது முஸ்லிம் மக்களின் சொத்து, இது வக்ஃப் போர்டு சொத்து என்று சொல்கிறீர்கள்? மனசாட்சி உள்ள முஸ்லிம்கள் உண்மையை பேசுகிறார்கள். அவர்களுக்கு தெரிகிறது. இவர்கள் போலியாவணங்கள் தயாரித்து, வீண் வம்புக்கு செல்கிறார்கள்.

மேலும், இந்த மத வாதிகள் அரசியல் பின் புலத்தில் இருந்து கொண்டு, ஒரு பக்கம் ,அந்த மக்களுக்கு உண்மை புரியாமல் பேசிக்கொண்டு, மத மோதலை உருவாக்கும் செயலாக இதை செய்து கொண்டிருக்கிறார்கள். இது தவிர, மேலும் சில உண்மைகளை இங்கே வைக்கிறேன் .இந்துக்களின் சொத்துக்களுக்கு மன்னர்கள், மிராசுதாரர்கள், ஜமீன்தார்கள் எழுதி வைத்த விட்டுப் போன பத்திரங்கள், செப்பேடுகள், ஆதாரங்கள் இருக்கும்போது, அந்த ஆதாரங்கள் இவர்களிடம் இல்லை என்று சொன்னால், அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
ராஜாக்கள் காலத்தில் எழுதி வைத்த 500 ஆண்டுகளுக்கு முன் ,ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரலாற்று குறிப்புகள், பத்திரங்கள் இருக்கும்போது, இவர்களுக்கு மட்டும் முஸ்லிம் மக்கள் தானமாக வாயிலே கொடுத்து விட்டார்கள் என்றால்? இதையும் சொல்ல பத்திரிகையாளர்கள் போர்வையில் கரைவெட்டி கட்டிக் கொண்டு பேசுபவர்களை அல்லது எழுதுபவர்களை ஏற்க முடியாது.

மேலும், இதில் இரண்டு இந்துக்களை உறுப்பினர்களாக சேர்ப்பதால், என்ன பிரச்சனை வரும்? இவர்கள் சொத்தை அவர்கள் அபகரிக்கப் போகிறார்களா? இல்லை எழுதி வாங்கி விடப் போகிறார்களா? அது கூட எதற்கு என்றால்? போலியாவணங்களை தயாரிக்க முடியாது .அதற்காகத்தான்.முக்கியமாக ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர்கள் தான் அந்த பொறுப்பை ஏற்க போகிறார்கள். உங்களுடைய சொத்துக்கு ஆதாரம் இருந்தால், அப்போதே அதற்கு தீர்வு என்று தான் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் முக்கிய சாராம்சம். அதற்கும் கரைவேட்டிக் கட்டிக் கொண்ட ஒரு சோசியல் மீடியா பேச்சாளர் சொல்கிறார்,
நீதிமன்றத்திற்கு தான் அதற்கான அதிகாரம் இருக்கிறது. மாவட்ட ஆட்சியர்களுக்கு இல்லை என்று தெரிவிக்கிறார். அது ஏனென்றால் நீதிமன்றத்தில் வாய்தா வாங்கி, காலத்தை கடத்தி, நீதிபதிகளில் உச்ச நீதிமன்றத்தில் தங்களுடைய அதிகாரமான 142 வது அதிகாரத்தை பயன்படுத்தி, ஒருவேளை இப்படி ஒரு தீர்ப்பு கொடுத்தால், இது உச்ச நீதிமன்ற நீதிபதியால் கொடுத்த தீர்ப்பு என்று மதக்கலவரத்தை தான் இது ஏற்படுத்தும். நாட்டில் இதை கூட சர்வாதிகாரம் என்று பேசுவார்கள் . ஏனென்றால், எப்படியும் பேசுபவனுக்கு அதற்கு அர்த்தம் தேவையில்லை. ஆனால், இப்படி தான் பேச வேண்டும் என்பதற்கு அர்த்தம் தேவை இருக்கிறது. அதனால், நாட்டு மக்கள் சட்டத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை நீதித்துறை! பத்திரிக்கை துறை! அலட்சியம் காட்டி வீணடிக்க கூடாது .மேலும்,
எதிர்கட்சிகள் பேசுவது இது முஸ்லிம் மக்களுக்கு எதிரான சட்டம் என்று சொல்கிறார்கள்? எப்படி இது எதிரான சட்டம்? நீதிமன்றம் இதை நிரூபிக்க முடியுமா? பல லட்சம் கோடி சொத்துக்கள் நாட்டில் வக்ஃப் போர்டு சொத்து வாரியத்திற்கு சொந்தமானது என்று போலி ஆவணங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா? அதனால், இங்கே உண்மையை ஆய்வு செய்து, நடுநிலையாக மக்கள் முன் இக்கருத்தை மக்கள் அதிகாரம் பத்திரிகை & Websites சார்பில், பதிவு செய்கிறேன்.