
நாட்டில் ஜனநாயகத்தின் முக்கியத் தூண், முதல் நாடாளுமன்றம், இரண்டாவது உச்ச நீதிமன்றம், இரண்டுமே மக்கள் நலனை முக்கியத்துவமாக பார்க்க வேண்டுமே தவிர, அதிகாரத்தின் உச்சத்தில் தங்களை பார்க்கக் கூடாது.
ஏனென்றால், அரசியலமைப்பு சட்டத்தில் இரண்டுக்குமே அதிகார மையமாகத் தான் இருக்கிறது. இதில் ஒருவர் தவறு செய்தால்,இன்னொருவர் தட்டி கேட்க முடியும்.

இப்படி தவறை பெரிதாக்கி நாட்டு மக்களுக்கு இரண்டுமே பிரச்சனையாக உருவெடுக்கக்கூடாது. ஒரு நாடாளுமன்றத்தின் எம்பி நிஷிகாந்த் துபே பேசி இருப்பது தவறு தான்.ஏனென்றால், நாட்டில் மதக்கலவரங்களுக்கு உச்ச நீதிமன்றம் தான் பொறுப்பு என்று தவறாக பேசி விட்டார். மேலும்,

மற்றொன்று, தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என். ரவி மசோதாகளை கிடப்பில் போட்டார் என்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் இருவர் அமர்வு (பார்த்திவாலா மற்றும் மகாதேவன் )அவர்களுடைய 142 வது பிரிவு அதிகாரத்தை பயன்படுத்தி, அந்த மசோதாவிற்கு சட்டமாக்கி உத்தரவிட்டனர். இங்கே அரசியல் சட்டத்திற்கு எதிராகவே இதுவும் நடந்திருக்கிறது.

அதாவது பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் தான் நியமனம் செய்வார். ஆனால்,அந்த அதிகாரத்தை நாங்கள் தான் நியமனம் செய்வோம் என்பதில் தமிழக முதல்வர் இதற்கு சட்ட மசோதாக்களை இயற்ற வேண்டிய அவசியம் என்ன? இங்கே மாணவர் நலன் முக்கியமா? அல்லது சட்டம் முக்கியமா?எது முக்கியம்?என்பதை நீதிபதிகள் ஆய்வு செய்து இருக்க வேண்டும்.
சரி எந்த மசோதாவாக இருந்தாலும்,ஆளுநர் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்து போட வேண்டிய சட்டம் இருக்கிறதா? மேலும், பல்கலைக் கழக துணைவேந்தர்களை நியமிப்பதில், ஆளுநர் ஊழல் செய்து விட்டாரா? இல்லை,தகுதியற்றவர்களை ஆளுநர் நியமிக்க செயல்படுகிறார்? ஏன் இந்த மசோதா கொண்டு வர வேண்டும்?இதையெல்லாம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு செய்திருக்க வேண்டும். இதுவும் அவர்கள் தவறுதான். மேலும்,முதல்வர் ஸ்டாலின் எதற்காக இந்த நியமன மசோதாகளை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார்? இதில் அரசியல் உள்நோக்கம் இருக்குமா? இவ்வளவும் நீதிபதிகள் ஆய்வு செய்திருக்க வேண்டும்.

ஏற்கனவே, தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் நிர்வாகம் ஊழலில் தத்தளிக்கிறது. இந்த லட்சணத்தில் இந்த தீர்ப்பு, தமிழக மாணவர்களின் நலனுக்கு ஒரு எதிரான தீர்ப்பு தான். இதற்காக நீதிபதி தினகரன் பத்திரிகையில் நான் சாதாரண அரசு உயர்நிலைப் பள்ளி படித்து உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்ந்துள்ளேன் என்று தெரிவிக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. மேலும்,இது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அதிகாரத்திற்கு கிடைத்த வெற்றியாக கூட இருக்கட்டும்.
ஆனால், நாட்டு மக்களுக்கு இதனால் என்ன பயன்? முதல்வர் ஸ்டாலினால் தகுதியானவர்களை நியமிக்க முடியுமா? அல்லது துணைவேந்தர்களை நியமிப்பதில் ஊழல் இல்லாமல் நியமிப்பாரா? இதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பொறுப்பேற்க முடியுமா? இத்தனை கேள்விக்கும் இந்த மசோதாவில் அர்த்தங்கள் அடங்கியிருக்கிறது. இதையெல்லாம் பார்த்து தான் நீதிபதிகள் இதற்கு தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி சட்டமாக்க உத்தரவு போட்டிருக்க வேண்டும்.

இது தவிர, ஜனாதிபதிக்கும் இதே நிலைமை தான் என்று காலக்கெடு விதித்து விட்டார்கள். இதனால், நாட்டில் அதிகாரம் மிக்க பொறுப்பில் இருப்பவர்கள் உண்மை நிலையை ஆய்வு செய்து தீர்ப்பளிக்க வேண்டும். மேலும், உச்சநீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தும் போது நீதிபதிகள் இவ்வளவு பிரச்சனைகுள்ள ஒரு சட்ட மசோதாவை சட்டமாக்கும்போது தமிழ்நாட்டில் இவருடைய அரசியல் என்ன? என்பதை ஆய்வு செய்து தீர்ப்பளித்து இருக்க வேண்டும்.
மேலும், இது சம்பந்தமாக மத்திய அரசு இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்தில் மனு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொறுப்பு மிக்க பதவியில் இருப்பவர்கள், மிகவும் பொறுமையுடன் செயல்படுவது, மக்கள் நலனில் முக்கியத்துவம் காட்டுவது அவசியம்.