நாட்டில் தற்போது பரபரப்பாக பேசப்படும் டாஸ்மாக் ஊழல்! அமலாக்க துறையின் விசாரணை – விசாரணையில் டாஸ்மாக் .எம் டி. விசாகன்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

மே 17, 2025 • Makkal Adhikaram

தமிழ்நாட்டின் அரசியல் திசை மாறி, மக்கள் நலனை விட்டு ,ஆட்சியாளர்கள் நலனுக்காகவும் ,அரசியல் கட்சியினர் நலனுக்காகவும், திமுக ஆட்சி! என்பதை தொடர்ந்து நடைபெற்று வரும் ஊழல்களின் விசாரணை வளையத்திற்குள் திமுக ஆட்சி. மேலும்,

ஒரு பக்கம் டாஸ்மாக் ஊழல், அடுத்தது மணல் கொள்ளை ஊழல், இப்படி எதைத் தொட்டாலும், ஊழலிலே ஆட்சியை நடத்துகின்ற திமுக அரசாக , இவர்களுடைய ஆட்சி நிர்வாகத்தின் அவலம் என்பதே மக்களிடம் பேசப்பட்டு வரும் பரபரப்பு செய்திகள்.தவிர,

இந்த ஊழல்களை மறக்க நீதிமன்றம் நமக்கு முட்டுக் கொடுத்து காப்பாற்றுமா? என்று ஒவ்வொரு விசாரணைக்கும் தடை வாங்குவது, ஐஏஎஸ் அதிகாரிகளை விசாரிக்க கூடாது என்று சொல்வது, இல்லையென்றால் வேறு ஏதாவது காரணங்களை சொல்வது, அதாவது வடிவேல் காமெடி போல சின்ன பிள்ளை தனமாக சாக்கு, போக்கு சொல்வது திமுக ஆட்சிக்கு கைவந்த கலை. எத்தனை நாளைக்கு மக்களை ஏமாற்ற முடியும்? அதே போல், சட்டத்தை ஏமாற்ற முடியும் ?இந்த இரண்டு வட்டத்திற்குள் தான் இவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதாவது சட்டத்தை ஏமாற்றியும், மக்களை ஏமாற்றியும் இந்த ஊழல் தொடர்கிறது. 

அப்படி தொடர்கின்ற டாஸ்மாக் ஊழல் ! அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் எம் .டி. விசாகன் ,ஊழலை விசாரிக்க தலைமை அலுவலகமான டாஸ்மாக் அலுவலகத்திலே, அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது .அதில் பல ஆவணங்கள் சிக்கியது .சிக்கிய ஆவணங்களை வைத்து, அமலாக்கத்துறை பல ஆதாரங்களை திரட்டியது. அவர்கள் திரட்டிய ஆவணத்தின் அடிப்படையில், மீண்டும் தற்போது எம்.டி. விசாகனுக்கு சம்மன் அனுப்பி அமலாக்கத்துறை விசாரணை செய்கிறது. விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமலே, தட்டிக் கழித்து வந்த எம் டி விசாகன், இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் தடை கேட்டார்கள். தடை கொடுக்க முடியாது, அமலாக்கத்துறை விசாரணை செய்யலாம் என்று நீதிபதி சுப்பிரமணியன் உத்தரவிட்டார். 

இப்போது விசாரணை வளையத்திற்குள் முதல் நபராக செந்தில் பாலாஜி,எம். டி. விசாகன் இருக்கிறார்கள். எங்கிருந்து இந்த டாஸ்மாக் ஊழல்? எப்படி நடைபெற்றது?என்பது ஆய்வு செய்யப்படுகிறது? அதாவது டாஸ்மாக் மது பாட்டில்கள்! டாஸ்மாக் குடோனுக்கு வராமலே, கடைகளுக்கு சென்று, அது ஒரு பக்கம் தனியான விற்பனை. அதாவது கள்ளச் சந்தையில் விற்பனை போல இந்த மது பாட்டில்கள் ஒரு பக்கம் விற்பனையாகிக் கொண்டிருந்தது.

இன்னொரு பக்கம் கணக்கு காட்டப்பட்டு, விற்பனை ஆகிக் கொண்டிருந்தது. இது தவிர, இந்த மது ஆலைகளுக்கு சப்ளை செய்யக்கூடிய பாட்டில் கம்பெனிகள், எவ்வளவு ஒவ்வொரு மாதமும் சப்ளை செய்தார்கள்? ஒவ்வொரு ஆண்டும், எவ்வளவு சப்ளை செய்தார்கள்? என்ற கணக்கு வழக்குகளை அமலாக்கத்துறை எடுத்தது. பிறகு, இந்த மது ஆலைகளில் இருந்து எவ்வளவு மது பாட்டில்கள் டாஸ்மாக் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது? கள்ளச் சந்தையில் அனுப்பப்பட்ட பாட்டில்கள் எவ்வளவு ?இப்படி ஒவ்வொன்றும் அமலாக்கத்துறை இந்த ஊழலை ஆய்வு செய்ய ஆரம்பித்தது?இந்த இரண்டின் கணக்கும் டேலி ஆகாமல், முரண்பாடாக இருந்துள்ளது .மேலும், 

இந்த மது ஆலைகள் யாருக்கு சொந்தமானது? அதற்கு பாட்டல்கள்  சப்ளை செய்த கம்பெனிகள் யாருக்கு சொந்தமானது? அவர்களையும் விசாரணை   வளையத்திற்குள் கொண்டு வந்து விட்டது. இது தவிர, தினமும் மது ஆலைகள் மூலம் டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை செய்த மது பாட்டில்கள் விற்பனை செய்த பணம் ?கொள்முதல் செய்த பணம்? எங்கே வரவு வைக்கப்பட்டது? 

இங்கே டாஸ்மாக் கடைகளில் ஒரு பக்கம், கள்ளச்சந்தை இன்னொரு பக்கம், டாஸ்மாக் கடை விற்பனை! இந்த இரண்டு விற்பனையும், எப்படி நடந்தது? எவ்வளவு விஞ்ஞான பூர்வமான ஊழல்? திமுக ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது? என்பது இது ஒரு மிகப்பெரிய உதாரணம். அதாவது கள்ளச்சந்த விற்பனையும், டாஸ்மாக் விற்பனையும் ஒரே நேரத்தில் நடக்கும்போது, இந்த பணம் அரசாங்கத்திற்கு போக வேண்டியது? டாஸ்மாக் ஊழியர்கள் எப்படி அதை பிரித்தார்கள்? கள்ளச் சந்தையில் விற்பனையாக கூடிய டாஸ்மாக் பாட்டில்கள்? விற்பனை பணத்தை எப்படி யார் வசூலித்தார்கள்? 

இவ்வளவு கேள்விக்கெல்லாம், இந்த டாஸ்மாக் ஊழல்! அமலாக்கத் துறையால் சுமார் 1000 கோடி என்று தான் சொல்லி இருக்கிறது. ஆனால்,இது ஆயிரம் கோடி அல்ல! பல ஆயிரம் கோடி. ஊழல் நடைபெற்று உள்ளது. இதில் கள்ளச் சந்தை மூலம் விற்கப்பட்ட பாட்டில்கள் எவ்வளவு? தினமும் இந்த பணம் யாருக்கு போனது? அந்தப் பணத்தை வைத்து சினிமா படம் எடுக்கப்பட்டதாக இப்போது ஒரு உதவி இயக்குனர் பெயர் அடிபடுகிறது. அவர் துபாய் எஸ்கேப். இவர்கள் அனைவருக்கும் யார் பாதுகாப்பு? என்றால் முஸ்லிம்கள் பாதுகாப்பா?என்ற கேள்வியும் எழுகிறது. 

ஏனென்றால், அவர்கள் தான் பெரும்பாலும் கடத்தல் தொழிலுக்கும், போதைப் பொருள் கடத்தலுக்கும், இந்த இல்லீகல் ஆக்டிவிட்டீஸ் என்று சொல்லக்கூடிய செயல்பாடுகளுக்கு இந்தியாவில் அதிக அளவில் இருக்கிறார்கள். அதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் நான் சொல்லவில்லை. அதையும் புரிந்து கொள்ளுங்கள்.

அடுத்தது, மது ஆலைக்கு சொந்தமானவர்கள் டி .ஆர். பாலு, ஜெகத்ரட்சகன் போன்றோரும் இந்த விசாரணை வளையத்திற்குள் வருகிறார்கள். இப்படி அனைவரும் விசாரணை வளையத்திற்குள் வரும்போது, இறுதியாக இந்த பணம் எங்கே சென்றது ? யாரிடம் சென்றது? இதனுடைய முதலாளி யார்? இதனுடைய அதிகாரம் மையம் யார்? அப்படி என்ற கேள்விக்குள், கடைசியாக  உதயநிதி ஸ்டாலின் பெயர் அமலாகத் துறையின்  விசாரணை வளையத்திற்குள்  வந்துள்ளது. 

இதிலிருந்து இனி திமுக தப்பிக்குமா? கஷ்டம் தான். நீதிபதிகள் ஊழல் ஆட்சியாளர்களுக்கு துணை போகாமல் இருந்தால்! நாட்டில் ஊழல்வாதிகள் அரசியலில் இருந்து அகற்றப்படுவார்கள். நீதிமன்றத்தால் தான் இதுவரை இவர்கள் தப்பித்தார்கள். இனி நீதிமன்றம் இவர்களுக்கு பாரபட்சம் இன்றி தண்டனை வழங்கினால்,கடந்த அதிமுக ஆட்சியில் வழக்கின் விசாரணையில் இருக்கின்ற அமைச்சர்களும், தற்போது திமுக ஆட்சியில் வழக்கின் விசாரணையில் இருக்கின்ற அமைச்சர்களும், ஒருவர் கூட தப்பிக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *