
ஒரு அரசியல் கட்சிக்கு ஏஜென்ட் போலவும், கட்சிக்காரர்கள் போலவும் பேசிக்கொண்டு, பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் பத்திரிக்கை துறையை ஏமாற்ற பத்திரிகையாளர்கள் முட்டாள்கள் அல்ல – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு, மேலும்,
தாமோதரன் பிரகாஷ் திமுகவின் ஏஜென்ட் போல் பேசிக்கொண்டு, மூத்த பத்திரிகையாளர் என்று சொல்வது எங்களுக்கு எல்லாம் வேதனையாக இருக்கிறது. ஏனென்றால் 30 ஆண்டுகாலம் இந்த பத்திரிக்கை துறையில் நடுநிலையாக மக்களுக்காக,மக்கள் பிரச்சனைகளுக்காக, போராடிக் கொண்டிருக்கின்ற பத்திரிகையாளர்களில் நானும் ஒருவன்.
நீங்கள் நடுநிலையாக பேசினால் யாரும் உங்களை குறை சொல்ல முடியாது. நீங்கள் திமுகவின் ஏஜென்ட் ஆகவோ, அல்லது பிஜேபியின் ஏஜென்ட் ஆகவோ,,அதிமுகவின் ஏஜென்ட் ஆகவோ,பேசிக்கொண்டு,மூத்த பத்திரிக்கையாளர்கள் என்று யாரை ஏமாற்றுகிறீர்கள்?

பத்திரிகை துறையா? அல்லது சமூக நலன் பத்திரிகையாளர்களையா?அல்லது நடுநிலை பத்திரிகையாளர்களையா? உங்களைப் போன்ற கட்சி பத்திரிகையாளர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள். நாங்கள் ஒரு காலம் உங்களை எல்லாம் பத்திரிகையாளர்களாக ஏற்றுக் கொள்ள மாட்டோம். திமுகவின் கட்சிக்காரராக பேசினால் உங்களைக் கேட்க முடியாது. அல்லது அவர்களின் பிரதிநிதியாக பேசினால் கேட்க முடியாது. ஆனால்,பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் கட்சியின் பிரதிநிதிகளாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை தகுதியான பத்திரிகையாளர்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஏன்? பொதுமக்களில் விவரமானவர்கள் கூட இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மேலும் அவர்கள் தான் தற்போது இதை எல்லாம் அதிகமாக இணையதளங்களில் விமர்சிக்கிறார்கள். நீங்கள் தனிப்பட்ட முறையில் பேசலாம்.
ஆனால், பத்திரிகை என்பது ஒருவேளை நீங்கள் முரசொலி கட்சி பத்திரிக்கையில் வேலை செய்பவர்களாக கூட இருக்கலாம். இதில் என்ன ஒரு பெரிய விஷயம் என்றால், டாஸ்மாக் ஊழலில் இடி ரைய்டு நடந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சர்கள், தவறு செய்தவர்கள், தண்டிக்கப்பட வேண்டும் அதுதானே உண்மை.
நீங்கள் உண்மையான பத்திரிக்கையாளராக இருந்தால், எந்த கட்சி அரசியல்வாதியாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும்,மத்தியிலோ,மாநிலத்திலோ, யாராக இருந்தாலும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் இதுதான் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள் மக்களிடம் சொல்ல வேண்டிய உண்மைகள்.
ஆனால், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர முடியாது. எந்த காலத்திலும், அது வருவதும் வராத போவதும், மக்களிடத்தில் இருக்கிறது. மக்கள் எப்படியும் மாறலாம். அல்லது மாறாமலும் போகலாம்.
அதனால்,அதைப் பற்றி ஒரு பத்திரிகையாளர் என்று பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றக் கூடாது. ஏற்கனவே பல பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் பத்திரிகைகள், இதுபோன்ற பத்திரிகையாளர்கள் என்ற போர்வையிலும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், மக்கள் பத்திரிக்கை என்றால் எது? பத்திரிக்கையாளர்கள் என்றால் யார்? என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக தான்,இந்த செய்தி.