
வீட்டை வாடகை விடும் உரிமையாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தற்போது நடந்த ஒரு சம்பவம்! வீட்டை வாடகை விடும் உரிமையாளர்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது என்ன என்றால்?
சென்னை போரூர் பகுதியில் வீட்டை வாடகைக்கு விட்ட உரிமையாளர், வீட்டில் குடியிருந்தவரிடம் ரூபாய் 35 லட்சம் ஏமாந்து உள்ளார்.
சென்னை போரூர் சேர்ந்த சிவகுமார், இவருக்கு சொந்தமான வீட்டின் கீழ் தளத்தில் வெங்கடேசன் என்பவருக்கு வாடகை விட்டிருக்கிறார். வெங்கடேசன் பல மாதங்களாக அந்த வீட்டிற்கு வாடகை கொடுக்கவில்லை. வீட்டின் உரிமையாளர் சிவகுமார் இவரிடம் வாடகையை கேட்டுள்ளார். வெங்கடேசன் சட்டம் பேசி இருக்கிறார். வாடகை கொடுக்கவில்லை என்றாலும், பரவாயில்லை.வீட்டை காலி செய் என்று சொல்லி இருப்பார். இது நடைமுறையில் இருக்கக்கூடிய ஒன்று.

ஆனால்,வெங்கடேசன் அவருக்கு துபாயில் உள்ள வெங்கட ஆச்சார்யா என்ற வழக்கறிஞர் மூலம் LEGEL நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த லீகல் நோட்டீஸ் என்னவென்று வெங்கடேசனின் வழக்கறிஞர் வேங்கட ஆச்சார்யா, சிவகுமாரை தொடர்பு கொண்டு, பிளாக் மெயில் செய்துள்ளார். அதாவது, உங்கள் மீது வெங்கடேசன், தனது மகளிடம் தவறாக நடந்து கொண்டதாக போக்சோ வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இந்த வழக்கை முடித்து வைக்க பணம் தேவைப்படுவதாக கூறியிருக்கிறார்.
இப்படி சென்னையில் உள்ள நண்பர்கள் மூலம் சிவகுமாரிடம் இருந்து ரூபாய் 35 லட்சம் வரை பெற்றதாக தெரிவிக்கப் படுகிறது. இது தவிர, வெங்கடேசன் இந்த வழக்கை வாபஸ் பெற ரூபாய் 4 கோடி கேட்டதாகவும், மேலும், நீங்கள் குடியிருக்கும் வீட்டை விற்று, 2 கோடி தர வேண்டும் எனவும், இந்தக் கட்டப்பஞ்சாயத்து வக்கீல் வெங்கடா ஆச்சார்யா மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் பயந்து போன சிவகுமார், இது பற்றி அவர்களுடைய உறவினர்களிடம் எடுத்துக் கூறி, இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் விசாரித்த போது, வெங்கடேசன் வழக்கு எதுவும் தொடரவில்லை என்பதும், வக்கீல் தான் பணத்தை ஏமாற்றி இருப்பதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், இதுகுறித்து சிவகுமார் அளித்த புகாரின் பேரில், போரூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, சிவகுமார் இடம் இருந்து பணத்தைப் பெற்ற ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவான துபாய் வக்கீல் வெங்கடாச்சார்யா, டானியல் ,லட்சுமி ஆகியோரை தேடி வருகின்றனர்.