உள்ளாட்சி நிர்வாகம் ஏற்கனவே ஊழலில் தத்தளித்துக் கொண்டு இருக்கும்போது ,ஊராட்சியில் இரண்டு லட்சம் வரை தீர்மானம் போட்டு வேலைகளை செய்ய திமுக அரசு உத்தரவு. இது கணக்கு காட்டி வேலை செய்யாமலோ அல்லது கணக்குக்கு வேலை செய்தோ ,இந்த பணம் எடுக்க வசதியாக இருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.மேலும் இந்த உத்தரவு வட்டார வளர்ச்சி நிர்வாக அலுவலகத்திற்கு 10 லட்சம் வரை தீர்மானம் போட்டு வேலைகளை செய்ய உத்தரவு . அதேபோல் மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூபாய் 20 லட்சம் வரை தாமாக முன்வந்து தீர்மானம் போட்டு எடுத்து வேலை செய்து கொள்ளலாம். உள்ளாட்சி நிர்வாகத்தை இந்த உத்தரவு எங்கே கொண்டு போய் நிறுத்தப் போகிறதோ தெரியவில்லை.
கடந்த ஆட்சியில் வெறும் 50 ஆயிரம் மட்டுமே எடுக்க உத்தரவிட்ட போது, எவ்வளவு தில்லுமுல்லு வேலைகள்? இப்போது இரண்டு லட்சம், 10 லட்சம் 20 லட்சம் வரை தீர்மானம் போட்டு எடுத்துக் கொள்ளலாம் என்றால், இந்த உத்தரவு இவர்களுக்கு மிகவும் சாதகமாகி ,உள்ளாட்சி நிர்வாகத்தை ஒரு வழியாக கடைசி வரை சுரண்டி எடுத்து விடுவார்கள் என்பது உறுதி .
மேலும், இதில் ஸ்டாலின் போடும் கணக்கு, ஓட்டு வங்கி கணக்கு. ஆனால் மக்கள் ஒவ்வொரு செயல்பாடுகளையும், தமிழ்நாட்டில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது இந்த ஆட்சிக்கு நிச்சயம் கெட்ட பெயரை ஏற்படுத்தப் போகிறது .அதில் மாற்று கருத்து இல்லை. இப்போதே பல பேரூராட்சி செயலாளர்கள், நகராட்சி ஆணையர்கள், பலர் பைத்தியம் பிடிக்காத குறையாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள் .இதில் இவர்கள் இஷ்டத்திற்கு தீர்மானம் போட்டு, வேலைகளில் கணக்கு காட்டி எடுத்தால் இதன் மூலம் இந்த ஆட்சிக்கு விரைவில் மூடு விழா ஏற்படுத்துவார்கள்.
மேலும், இந்த உள்ளாட்சி நிர்வாக ஊழல் புகார்கள் சில அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் ,இனி பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நிச்சயம் அனுப்பி வைப்பார்கள். ஏனென்றால், தமிழ்நாட்டில் தற்போது பிஜேபி தான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது .அதிமுக எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒப்புக்கு நாலு வார்த்தை உதவாத விஷயத்திற்கு பேசி விட்டு வருகிறார்கள் ,மக்களுக்கான பிரச்சினைகளை சட்டமன்றத்தில் கொண்டு செல்வதில்லை .
மேலும், பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்கள் பிரச்சனை பெரிய அளவில் ஓடிக் கொண்டிருக்கிறது. அது பற்றி பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இதில் மிகப்பெரிய ஊழல்கள் மறைமுகமாக செய்தித் துறையில் இருந்து வருகிறது. இது ஒரு புறம் சட்டமன்றத்தில் பேசப்பட வேண்டிய விஷயமாகவும் இருக்கிறது.
எதிர்க்கட்சிகள் இதை பேச வேண்டிய காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது. ஏனென்றால், ஊழல்வாதிகளுக்கு, ஊழலுக்கு துணை போகும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் சலுகைகளை அனுபவித்துக் கொண்டு, குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல, இன்று தினசரி பத்திரிகைகளுக்கு தான் பஸ் பாஸ் என்று அறிவித்து ,அந்த பத்திரிகைகள் வெளிவராமல் பிடிஎப் Pdf வாட்ஸ் அப்பில் அனுப்பிக்கொண்டு, பஸ் பாஸ் சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தவிர ,சில பி ஆர் ஓ க்களை கவனித்தால், அவர்கள் வேண்டியவர்களுக்கு அது மாத பத்திரிக்கையாக இருந்தாலும், வார பத்திரிக்கையாக இருந்தாலும், பஸ் பாஸ் கொடுத்து இருக்கிறார்கள். அங்கே எல்லாம் எந்த ரூல்ஸ் கடைப்பிடிக்கிறார்களோ தெரியவில்லை.
அது மட்டுமல்ல, தலைமைச் செயலகத்தில் உள்ள பிஆர்ஓ நந்தகுமார் மற்றும் ஜே டி மேகவர்ணம் அரசு அடையாள அட்டை இந்த பத்திரிகைகளுக்கு கொடுப்பதற்கு கூட RNI சென்னையில் வாங்கி இருந்தால் மட்டுமே கொடுப்போம் என்று தெரிவிக்கிறார்கள். அப்படி ஒரு அரசு விதி இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். அப்படி எந்த ஒரு விதிமுறையும் ,அந்தந்த மாநில தலைமை மாவட்டத்தில்தான் RNI வாங்க வேண்டும் என்று சொல்லவில்லை . அங்கு வாங்கி பத்திரிகை நடத்தினால் தான், மக்களுக்கு உண்மை செய்திகள் போய் சேரும் .மற்ற இடத்தில் வாங்கி பத்திரிகை நடத்தினால் செய்திகள் மக்களுக்கு போய் சேராதா? இது எல்லாம் பத்திரிகை சுதந்திரத்தின் அடிமை கூத்து. இந்த கூத்துக்கெல்லாம் இனிமேல் தான் இவர்களுக்கு எல்லாம் பிரச்சனைகள் ஆரம்பிக்கப் போகிறது. மேலும், இந்த பத்திரிகையின் ஒரு முக்கிய சப்ஜெக்ட் உச்சநீதிமன்றத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. அது என்னவென்றால், டிஜிட்டல் மீடியா இன்று மக்களை எளிதில் சென்றடைகிறது. பிரின்ட் மீடியா அந்த அளவிற்கு இல்லை. அதுமட்டுமல்ல, மரத்தை வெட்டி தான் பேப்பர் தயாரிக்கப்படுகிறது. அது சுற்றுச்சூழலுக்கு எதிரான ஒன்று. இப்படி பல விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது.
உண்மை, நேர்மை பத்திரிகை துறையில் குறைந்துவிட்டதால், மக்களுக்கு எது உண்மை? எது பொய்? என்பது புரியாமல் குழப்பம் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அது மட்டுமல்ல, ஊழல்வாதிகளுக்கு ஜால்ரா அடிக்கும் பத்திரிகைகளுக்கு மட்டும்தான், அரசு விளம்பரத்தின் சலுகை விளம்பரம் என்றால், உண்மையை எடுத்துச் சொல்லும் பத்திரிகைகளுக்கு, எந்த விதமான அரசின் சலுகைகள் கொடுப்பதில்லை.
தவிர ,இன்று வெளிவரும் நூற்றுக்கு 90 சதவீதம் பத்திரிகைகள் மக்களுக்கான பத்திரிகைகளாக இல்லை. ஆட்சியாளர்களின் ஜால்ராவாகவும், ஊழலுக்கு ஒத்துஊதும் பத்திரிகைகளாகவும் தான் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் எப்படி மக்களின் வரி பணம், வீணடிக்க அரசின் உயர் அதிகாரிகள் அனுமதிக்கிறார்கள் ?
மேலும் பத்திரிகை துறை பல ஆண்டுகளாக மக்களிடம் பொய்யை சொல்லி ஊழல்வாதிகளைப் போல் ,தங்களை வளர்த்துக் கொண்டுள்ளது. இதனால் மக்கள் உண்மைக்காகவும், நேர்மைக்காகவும் போராட முடியவில்லை. அதனால்தான், ஊழல்வாதிகள் மீண்டும், மீண்டும் அரசியலில் ஆட்சியாளர்களாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த உண்மைகள் இல்லை என்று யாராலும் மறுக்க முடியாது.
அதனால், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இந்த உள்ளாட்சிஊழல் நிர்வாகம் பற்றி பொதுமக்களே விரைவில் புகார் அனுப்புவார்கள் பொறுத்திருந்து பார்ப்போம். அது மட்டுமல்ல, இந்த பத்திரிகைகளின் சுதந்திரம் மற்றும் ஊழலுக்கும், ஊழல்வாதிகளுக்கும் பக்கவாத்தியம் வாசித்துக் கொண்டு பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிற ஊடகங்களை பற்றி பேச வேண்டிய காலத்தின் கட்டாயம் எதிர்க்கட்சியாக செயல்படும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முக்கிய பொறுப்பு உண்டு என்பதை சமூக அக்கறை உள்ள பத்திரிகையாளர்களும் ,பத்திரிகைகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதை இந்த அரசாங்கம் கண்டு கொள்வதில்லை. அதனால், இது பற்றி நீங்கள் பேச வேண்டிய காலத்தின் கட்டாயம் என்பதே மக்கள் அதிகாரத்தின் முக்கிய கோரிக்கை.