தவெக ஆட்சியில்! குதிரை பேரம் நடப்பதாக எதிர்க்கட்சிகள்! கவர்னரிடம் புகார்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

முதலில் குதிரை பேரம் என்றால் என்ன?ஒரு நல்ல குதிரையை விலைக்கு வாங்குவது போன்றது தான் குதிரை பேரம் .

இங்கே,இந்த எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது ,அது எப்படி குதிரை பேரத்தில் வருகிறது? அவர்களை ராஜினாமா செய்யச் சொன்னது யார்? அவர்களாக செய்கிறார்களா? இல்லை தமிழக வெற்றி கழகத்தில், முக்கிய புள்ளிகள் ராஜினாமா செய்ய சொல்கிறார்களா? இல்லை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் செய்ய சொல்கிறாரா?

இப்படி ஆதாரமே இல்லாமல், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ,எப்படி இதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியும்? ஒரு பக்கம் பிஜேபி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கவர்னரை சந்தித்து தவெக ஆட்சியில் குதிரை பேரும் நடக்கிறது என்று புகார் கொடுக்கிறார்.

இன்னொரு பக்கம் ,திமுக குதிரை பேரும் நடக்கிறது என்று கவர்னர் இடம் புகார் கொடுக்கிறது. திமுக கொடுக்கின்ற புகாரில் ஒருவேளை உள்நோக்கம் இருக்குமா? அது என்ன என்றால்?அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் புகார்கள் மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுத்திருப்பதால், இப்படிப்பட்ட ஒரு குதிரை பேரம் என்ற பொய்யை சொல்லி மக்களை திசை திருப்ப அரசியல் செய்கிறார்களா?

மேலும், அதிமுகவிலிருந்து பல எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு ,தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பதால், இந்த அரசியல் உள்நோக்கத்திலும், இவர்கள் இப்படி ஒரு குதிரை பேர அரசியல் நடக்கிறது என்று மக்களிடம் அரசியல் செய்கிறார்களா?

ஆக கூடி அரசியல் கட்சிகளுக்கு மக்கள் முட்டாளாக இருக்க வேண்டும். இவர்கள் எவ்வளவு பொய் சொன்னாலும் மக்கள் நம்ப வேண்டும். இது இந்த காலத்தில் நடக்காதது. அந்த காலத்தில் நடந்து கொண்டிருந்தது. தவிர,

தற்போது அதிமுகவும் கவர்னரை சந்தித்து புகார் கொடுக்க போவதாக தகவல். உண்மை எது?வென்று தெரியாமல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு எப்படி ?இவர்கள் குதிரை பேரம் என்று சொல்கிறார்கள்?

மேலும்,ஒவ்வொரு எம்எல்ஏக்களும், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தால் ,தமக்கு மீண்டும் பதவி கிடைத்துவிடும் .அதிகாரம் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்புகளோடு தான் வந்து சேர்கிறார்கள்.

தவிர,இங்கே இவர்களுக்கு பல கோடிகளை கொடுத்து ,விலைக்கு வாங்கினால் தான், அது குதிரை பேரம். ஆனால், அப்படியே அது நடந்து இருந்தாலும், அதற்கான ஆதாரத்தை யாராலும் கொடுக்க முடியாது.

மேலும், வாங்கியவர்கள் ,கொடுப்பவர்கள், யாருக்குமே சொல்ல மாட்டார்கள். யாரும் சொல்லி விட்டு வாங்குவதில்லை. வாங்கியதை சொல்வதும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த குதிரை பேர அரசியல் என்று எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய ,மக்கள் இந்த அரசியல்வாதிகளால் புலம்பி கொண்டு, குழம்பிக் கொண்டு, இருக்கட்டுமே!

மேலும்,நீங்க யாருமே இங்கே யோக்கியர்கள் இல்லை. அப்படி இருக்கும்போது, யோகியதைப் பற்றி எந்த அரசியல் கட்சியினருக்கும் பேசுவதற்கு தகுதி இல்லை. தவிர, தமிழ்நாட்டு அரசியல் கட்சியினர் மேல் இருக்கக்கூடிய நம்பிக்கை ,மக்கள் இழந்து விட்டார்கள்.

எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கும் தலைவர்கள் முதல் நிர்வாகிகள் வரை,தனக்கென்ன லாபம்? இந்த நோக்கத்தில் அரசியல் கட்சியினர் இருந்து கொண்டு ,மக்களை முட்டாளாக்கிக் கொண்டு, பேசுவதை மக்கள் எத்தனை நாளைக்கு நம்புவார்கள்?

மேலும்,இந்த போலியான அரசியலை காட்ட கார்ப்பரேட் தொலைக்காட்சி மைக்குகள் பிடித்துக் கொண்டு நடிப்பீர்கள்? அதனால், மக்களிடம் நடிப்பதை விட்டு, விட்டு, எது உண்மையான அரசியல்? என்பதை மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.

தவிர,யார் வேண்டுமானாலும், எந்த அரசியல் கட்சியினரானாலும், எவ்வளவு பொய் வேண்டுமானாலும் ,எப்படி வேண்டுமானாலும், பேசிக்கொள்ளும், ஒரே அரசியல் தளம் அது கார்ப்பரேட் தொலைக்காட்சி மைக்கைகள் என்பதை இந்த போலி அரசியல்வாதிகள் புரிந்து கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் .

எனவே ,இந்த தொலைக்காட்சி மைக் களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். அப்படி ஏமாந்தால், அவர்கள் தங்களுக்கான எதிர்கால அரசியல் ,அவர்களிடம் இழந்து கொண்டிருப்பார்கள் .இதுதான் உண்மை.

தமிழ்நாட்டின் ,50 ஆண்டுகால அரசியல் வரலாற்றை ஒவ்வொரு அரசியல் கட்சியினரின் தகுதி என்ன? என்பதை இந்த மைக்கில் பேசிவிட்டு போன , ஒவ்வொருவரின் வார்த்தைகளையும், எடுத்து ஆய்வு செய்து பாருங்கள் .

அதுதான் அவர்களுடைய உண்மையான அரசியலா? அல்லது போலியான அரசியலா? என்பதை (நீங்களே) தெளிவாக தமிழக மக்கள் புரிந்து கொள்ளலாம் . இப்படிப்பட்ட போலி அரசியல்வாதிகளிடம் ஏமாறாதீர்கள்.அது வருங்கால சமுதாயத்திற்கு ஆபத்து. கட்சி என்பது தோளில் போடும் தூண்டு என்று அப்போதே திராவிட கட்சிகள் பேசியிருக்கிறார்கள்.

இப்போது இந்த துண்டை தூக்கிவிட்டு, வேறு ஒரு துண்டை போட்டுக் கொள்கிறார்கள். மக்களுக்கு புரிகிறதா? துண்டு என்பது அவர்களுக்கு தேவையான ,சாதகமான ஒரு அரசியல் கட்சி. அரசியலில் நேர்மை இல்லை என்பது தான் தமிழ்நாட்டின் நிலமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *