அமைச்சராவது, எம் எல் ஏ ஆவது ,எம்பி ஆகுவது ,அது ஒன்றும் ஜனநாயக நாட்டில் பெரிய காரியம் அல்ல. யார் வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால் ஒரு குடும்பம் வழிவழியாக முதல் அமைச்சர் ஆகி வருவது தான், இப்போது விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது.
இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அப்போது உங்கள் தாத்தா சொன்னார் எங்கள் வீட்டில் இருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள். உங்கள் அப்பா சொன்னார் எங்கள் வீட்டிலிருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள். நீங்களும் அதே வார்த்தையை சொல்லி உங்கள் மகனை அதாவது இன்ப நிதியை முதலமைச்சராகாமல் விடக்கூடாது.
இதுதான் மக்களால் ,மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி. இந்த ஆட்சி பரம்பரையாக வழி ,வழியாக வந்து கொண்டிருக்க வேண்டும். இது மக்களின் விருப்பமா? அல்லது தங்கள் குடும்பத்தின் விருப்பமா? என்பதை இனி மக்கள் புரிந்து கொள்வார்கள்.