நாட்டில் பல சட்டங்களில் ஓட்டைகள் இருப்பதால்! அதை சரி செய்ய மத்திய அரசு எவ்வளவு போராடுகிறது? அதனால், மக்கள் எவ்வளவு போராடுகிறார்கள்? -அரசியலில் எதிர் கட்சிகள் ஓட்டை சட்டங்களுக்காக போராடுகிறார்களா? – மக்கள் விழித்துக் கொள்வார்களா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு உண்மைகள் தெரியாமல் அரசியலில் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் அதிகாரம் தொடர்ந்து வலியுறுத்துகிறது.

மேலும்,உங்களுக்கு தெரிந்ததெல்லாம் பெரிய தொலைக்காட்சி, பெரிய பத்திரிகை, அதேபோல தான் மத்திய ,மாநில அரசாங்கத்திற்கும் அதுதான் தெரிகிறது.

இப்போது மத்திய அரசு !இந்த நீட் தேர்வினாலும், எப் .சி .ஆர் .ஏ என்ற (foreign currency regulation act FCRA ) சட்ட திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் எவ்வளவு எதிர்த்து போராட்ட குரல் எழுப்புகிறார்கள்? இந்தியாவுக்குள் சட்ட விரோத பண பரிமாற்றங்களை தடுக்க வேண்டும் என்ற ஒரு நியாயமான கோரிக்கைக்கு, இந்த அரசியல் கட்சிகள், தவறான ஒரு சட்டத்திற்கு காங்கிரஸ் ,திமுக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் எதற்காக போராடுகிறார்கள்?

இந்தியாவில் ஓட் பேங்க் (vote bank) என்ற அரசியல் இருக்கும் வரை, இப்படிப்பட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும். மக்கள் விழித்துக் கொள்வது தவிர, வேறு வழி இல்லை.

அதாவது, இந்த சிறுபான்மை மக்களின் ஓட்டு களுக்காக, அவர்கள் என்ன தவறு செய்தாலும், இந்தியாவுக்கு எதிராக சதி செய்தாலும், இந்தியாவுக்குள் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்தாலும், அதையெல்லாம் பிஜேபி அரசு கேட்கக் கூடாது. கண்டு கொள்ளக் கூடாது.

உடனே இவர்கள் பி .ஜே .பி அரசு வரக்கூடாது என்று மைக்கில் அவர்களுடைய ஜெபக்கூட்டத்திலே ஜெபிப்பார்கள். இதைத்தான் இயேசு இவர்களுக்கு சொல்லிக் கொடுத்தாரா? இயேசு எதை சொன்னார்? தவறான வழியில் மத மாற்றங்களை செய்யுங்கள். வெளிநாட்டிலிருந்து அரசியல்வாதிகளின் கருப்பு பணத்தை தொண்டு நிறுவனங்கள் மூலம் கொண்டு வாருங்கள். இதையெல்லாம் இயேசு சொல்லிக்கொடுத்து விட்டுப் போனாரா?

மேலும்,இதேபோல், பி.சி.ஆர் ஆக்ட் (PCR act ) இதையும் இந்தியாவில் தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எந்த பத்திரிக்கை? தொலைக்காட்சி? இந்த உண்மைகளை எல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்கிறது? அரசு கேற்றவாறு செய்திகளை போட்டு, மக்களுடைய வரிப்பணத்தை நாமே சாப்பிட வேண்டும். இதுதான் இன்றைய பெரிய பத்திரிகைகளின் திறமை.

மேலும்,அந்த உண்மைகளை சொல்வதற்கு தான் பத்திரிகைகள் தேவைப்படுகிறது. அதை சொல்வதற்கு தகுதி இல்லாதவர்கள், பத்திரிகை என்று சொல்லிக்கொண்டு, சலுகை, விளம்பரங்களுக்கும், ஐடி கார்டுக்கு மட்டும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,மக்களுக்கு உண்மையை புரிய வைக்க வேண்டும் .அதுதான் பத்திரிகையின் கடமை. ஆனால், எதிர்க்கட்சிகளின் தவறான பொய்களை எல்லாம், நியாயப்படுத்தி, அதை மக்களிடம் சொல்வது ,பத்திரிக்கையின் வேலை அல்ல, அது புரோக்கர் வேலை. அதற்குப் பெயர் நான்காவது தூண் அல்ல.

மேலும்,நீ எத்தனை கோடியில் பத்திரிகை ஆரம்பித்தாலும், அல்லது நடத்தினாலும் என்னை போன்றவர்கள் அதை பத்திரிகை என்று ஏற்றுக்கொள்ள மாட்டோம். தவிர, மத்திய அரசுக்கு தொடர்ந்து பத்திரிகைகளை கண்காணிக்க வேண்டும் .அது சமூக நலன், தேச நலன், மற்றும் மக்களுக்கான பத்திரிகைகளுக்கு மட்டும் தான், இந்த சலுகை ,விளம்பரங்கள் போய் சேர வேண்டும்.

ஆனால் ,அதிலும் தவறான சட்டங்கள்! சர்குலேஷன் என்ற தவறான சட்டம்,(circulation law) இன்றுவரை அதை மாற்றாமலே பத்திரிக்கை துறையில் கார்ப்பரேட் பத்திரிகைகள் ,சட்டத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,இதை எதிர்த்து எத்தனை பத்திரிகைகள் ?தொலைக்காட்சிகள்? செய்திகள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த சட்டம் ,அவர்களுக்கு சாதகமான சட்டமாக இருக்கிறது .அதனால், அவர்கள் அதை எதிர்த்து செய்தி வெளியிட மாட்டார்கள். தவிர,அது இந்த தேசத்திற்கும் ,சமூகத்திற்கும் எதிராக இருக்கிறது என்பதை மத்திய அரசுதான் அதில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

மேலும் ,இன்றைய இளைய தலைமுறைகளுக்கும், பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ,மாணவர்கள், வயது என்ற இளமைப் பருவம் காதலில் அவர்களை மயங்க வைக்கும். அதில் விழுந்து கலப்புத் திருமணங்களை ஆதரிப்பதாக திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகள், பணத்திற்காக இந்த பி .சி ஆர் சட்டத்தை ஆதரித்து கொண்டிருக்கிறார்கள். மேடையிலே ஜாதி இல்லை என்பார்கள்.

ஆனால், ஜாதியை வைத்து வன்கொடுமை சட்டத்தில் புகார் அளித்து விடுவார்கள். இந்த வன்கொடுமை சட்டம் என்பது முழுக்க முழுக்க 99.5 சதவீதற்கு மேல் பொய்யான புகார்கள் தான், இதுவரை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்குகள் எல்லாம் பொய்யான வழக்குகள்.

மேலும்,இந்த சட்டத்தில் , தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் புகார் அளித்தால், உடனே அவரை விசாரணை இன்றி அவர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்து, கைது செய்து விட வேண்டும் . ஆங்கிலேயர்கள் காலத்தில் போடப்பட்ட சட்டம், சுதந்திரத்திற்கு முன் போடப்பட்ட சட்டம், அம்பேத்கர் கொண்டு வந்த சட்டம் அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு தான் அது பொருந்தும் இந்த அரசியல் கட்சியை கிரிமின்களுக்கு எல்லாம் இந்த சட்டம் பொருந்தாது .அது அப்பாவி மக்கள் வாழ்ந்த காலம்.

மேலும்,சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்போடப்பட்ட சட்டம் இன்றைய தலைமுறைகளுக்கு, அது வாழ்க்கையின் போராட்டமாக இருக்கிறது. இந்த சட்டம் ஒரு காலத்தில் என் மீதே ஒரு பொய் புகார் கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்டவரை காவல்துறையினர் கூப்பிட்டு, நீ இந்த புகாரை வாபஸ் வாங்கவில்லை என்றால், உன் மீது ஏகப்பட்ட வழக்குகள் இருக்கிறது. உன்னை உள்ளே வைத்து விடுவோம் என்று சொல்லவே உடனடியாக வாபஸ் வாங்கிக் கொண்டார். தவறு அவர் மேலே இல்லை. அவரை ஏவியவர்கள் என் சமூகத்தை சேர்ந்தவர்களே! மேலும்,

அதே போல் திருவள்ளூரில் ஒரு சேர்மன் மீது கொடுக்கப்பட்ட பி. சி .ஆர் வழக்கில், அவர் 30 நாள் சிறையில் இருந்தார். ஆதாரங்கள் இருக்கிறது. உண்மை இருக்கிறது. மக்களுக்கு தெரிவிக்கிறோம். இப்படிப்பட்ட சட்டங்களை எல்லாம் நாட்டில் இன்னும் வைத்துக் கொண்டு இருந்தால், இதை அரசியல் கட்சி கிரிமினல்கள் தான் தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,எப்படி சட்டவிரோத பண பரிமாற்றம், இந்தியாவுக்குள் கொண்டுவர ,இந்த மிஷினரிகள் கதறுகிறார்களோ ,அதே போல் தான் இந்த ஓட்டை சட்டங்களை எல்லாம் எடுத்தால் ,ஜாதியை வைத்து அரசியல் செய்வார்கள். எங்கே இந்த ஜாதிகள் ஏமாறுகிறது? உழைத்து வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் யாருமே இந்த சட்டங்களை பற்றி எல்லாம் நினைப்பதில்லை.

ஆனால்,இப்போது நாட்டில் அரசியல் கட்சி கொடிகளை பிடித்துக் கொண்டு, அரசியலுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்ற அரசியல் கட்சி கிரிமினல்கள் தான், சட்டத்தின் ஓட்டைகளை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு தான் இந்த ஓட்டை சட்டம் தேவைப்படுகிறது. இந்த ஓட்டை சட்டங்களை எல்லாம் தகர்த்தெறிய வேண்டும்.

இதற்கு மத்திய, மாநில அரசு! இந்த ஓட்டை சட்டங்களை பற்றி ஆய்வு செய்து, மக்களுக்கான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்று விஜய் விரும்பினால், இந்த ஓட்டை சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அதுவும் protection of civil rights act (PCR act) இதில் எஃப் ஐ ஆர் பதிவு செய்தால் பாதிக்கப்பட்டவருக்கு எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை சட்டத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகை கிடையாது.

ஆனால் இந்த சட்டத்தின் கீழ் தகுதியான சில குற்றங்களுக்கு பாதிக்கப்பட்ட எஸ்.சி/எஸ்.டி நபருக்கு மத்திய அரசு நிவாரணத் தொகை வழங்குவதாக சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசின் திட்டத்தில் PCR act & SC/ST act இரண்டிற்கும் மத்திய மாநில அரசு நிதி உதவி வழங்கப்படுகிறது. இது தவறானது. இந்த நிதி உதவியை உடனடியாக மத்திய மாநில அரசுகள் நிறுத்தப்பட வேண்டும். இந்த சட்டத்தால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. இது பொய்யான புகார்களை கொடுத்து, தலித் சமூகத்தை சேர்ந்த அரசியல் கட்சி கிரிமினல்கள் மற்ற சமூகங்களை மிரட்டுவதற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்தது, இதற்கு தேவையில்லாமல் , காவல்துறையின் நேரத்தையும், நீதிமன்றத்தின் நேரத்தையும், மக்களின் வரிப்பணத்தையும் வீணடிப்பது தவறு. இந்த சட்டங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் ‌. இதை அரசியல் கட்சி கிரிமினல்கள் தான் தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மத்திய, மாநில அரசு புரிந்து ,இந்த ஓட்டை சட்டங்களை நீக்கப்பட வேண்டும் என்பது மற்ற சமூகங்களின் முக்கிய கோரிக்கை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *