தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், நீதிமன்றமும் ,மனித உரிமை ஆணையமும் ,தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய கோரிக்கை.

தமிழ்நாடு

மணல் கொள்ளையை தட்டி கேட்டவருக்கு இந்த கதி.

கஞ்சா விற்பவற்களுக்கு எதிராக குரல் கொடுத்த பாஜக மாநில நிர்வாகி தனசேகர் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு தற்போது செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்

நாட்டில் சமூகவிரோதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர்களுக்கு, பத்திரிக்கையாளர்களுக்கு, தமிழ் நாட்டில் எந்த விதமான பாதுகாப்பும் இல்லை.

திமுக ஆட்சியில் ரவுடித்தனமும், அராஜகமும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் மாணவர்கள் ,அப்பாவி மக்கள், சமூக ஆர்வலர்கள், ஞாயமான அரசியல் கட்சியினர், பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

 அவர்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பும் ,நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேலும் ,சமூகத்தில் அவர்களுடைய குடும்பம் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு எந்த விதமான உதவியும் இல்லை. இதனால், அவர்கள் தொழில், வியாபாரம், குழந்தைகளின் படிப்பு, இப்படி பல வகைகளில் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கு உதவ யாரும் முன் வருவதில்லை.

அந்த நிலை மக்களிடத்தில் இருந்து மாற வேண்டும். சுயநலம் உள்ள மனிதர்கள் இதை வேடிக்க பார்ப்பார்கள். ஏளனமாக பேசுவார்கள். இதையெல்லாம் மீறி ,இந்த தீய சக்திகளுக்கு எதிராக போராட நினைக்கும் போது ,அவர்கள் அனுபவிக்கும் தொல்லைகள், பிரச்சனைகள் ஏராளம். இதிலிருந்து பல அனுபவங்கள் அவர்கள் பெற்றாலும், அரசாங்கத்தின் மூலம் அவர்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.

 அதனால், நீதிமன்றம், மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவது மட்டுமல்ல, அவர்களுக்கு உரிய இழப்பீடும் ,அவர்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பும் கொடுத்தால்தான், நாட்டில் இது போன்ற தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஏனென்றால் இந்த தவறுகளை தட்டி கேட்பவர்கள் மிகச் சிலரே, அவர்களையும் இந்த ரவுடிச கும்பல் அடித்து விரட்டினால்,

 இந்த சமூகத்தின் நன்மைக்காக போராடுபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதனால், நீதிமன்றமும், மனித உரிமைகள் ஆணையமும், தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கி, சட்டத்தையும் , சமூகத்தையும் பாதுகாத்திட வேண்டும், என்பதுதான் சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *