பெரிய ஹோட்டல்கள் முதல் சிறிய ஹோட்டல்கள் வரை சுத்தமும் ,தரமும், சுவையும், குறைந்துவிட்டது. பணம் மட்டுமே அவர்களுடைய முக்கிய குறிக்கோளாக உள்ளது.

மேலும்,பெரிய நகரத்தில் கூட தரமான உணவும், சுத்தமான உணவும் ,தேடி மக்கள் சாப்பிட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். வேற வழி இல்லை, என்ற சூழ்நிலைக்கு தான் ,மக்கள் பல பேர் சாப்பிடுகிறார்கள். இருப்பினும், சில பெரிய ஹோட்டல்களில் அல்லது சிறிய ஹோட்டல்களில் சாப்பிட்ட பிறகு தான் அதனுடைய பின் விளைவுகள் மக்களுக்கு தெரிய வருகிறது.

அது இன்றைய கொலஸ்ட்ரால், தொப்பை மற்றும் பிபி, சுகர் இது அத்தனைக்கும் ஹோட்டல் உணவுகள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. உணவைப் பற்றி குறை சொல்லக்கூடாது. ஆனால், நான் பத்து ஆண்டு காலம் அதிக இடங்களில் எங்கு என்ன கிடைக்கிறதோ, அதை சாப்பிட்டு பார்த்தேன்.
அதனுடைய விளைவு எனக்கு கொலஸ்ட்ரால் தான் அதிகரித்து உள்ளது என்று டாக்டர் சொன்ன பிறகு தான் எனக்கு தெரியும். அதுவரை கொலஸ்ட்ரால் என்றால் என்ன? என்று கூட எனக்கே தெரியாது. அப்போதுதான் புரிந்து கொண்டேன் .இது எதனால் என்று கேட்டால்? சில டாக்டர்களிடம் நீங்கள் வெளியில் அதிகம் சாப்பிடுகிறீர்களா? என்று கேட்டார்கள் ஆமாம் சார். உடனடியாக அதைத் தவிருங்கள்.

வீட்டு உணவை அருந்துங்கள் என்றார். இப்போது மக்களுக்கு புரிய வைப்பது என்னவென்றால் ,இந்த ஓட்டல் உணவகங்கள் எண்ணையை சுத்தமாக பயன்படுத்துவதில்லை.
ஒரு தடவை வடை சுட்டு விட்டு, வடை சுட்ட எண்ணெயிலே தாளிப்புகள் ,அதே எண்ணையை இரண்டு, மூன்று தடவை வைத்து சுடுவது ,இது எல்லாம் மக்கள் நோயை விலை கொடுத்து வாங்கி சாப்பிடுவதற்கு, இப்படி பட்ட ஓட்டல்களே முக்கிய காரணம். இவர்களால் மருத்துவர்கள் நன்றாக சம்பாதிக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, தோசை மற்றும் இட்லிக்கு புளிக்க வைத்த மாவை எத்தனை நாளைக்கு பயன்படுத்த வேண்டும் ?எப்படி பயன்படுத்த வேண்டும்? அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லாமல், பணத்திற்காக இவர்கள் ஓட்டல் நடத்துகிறார்கள்.
அதனாலே, வயிற்றில் பல்வேறு பிரச்சனைகள் இன்று ஹோட்டல் உணவு சாப்பிடுபவர்கள், அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் . இது தவிர, வெளியில் போண்டா, பஜ்ஜி, வடை ,முறுக்கு, மிச்சர் போன்ற கடைகளில் எத்தனை முறை எண்ணெயை பயன்படுத்துவது என்று கூட தெரியாமல் இன்று விற்பனைகள் நடக்கிறது.
மேலும்,இந்தப் பாமாயில் மற்றும் ரீபைண்ட் ஆயில் ஒரு தடவைக்கு மேல் மறுமுறை பயன்படுத்தினால் ,இது நோயை விலை கொடுத்து வாங்க வேண்டியது நிலைமைக்கு மக்கள் வந்து விட வேண்டியது தான். இவர்கள் எத்தனை முறை பயன்படுத்துகிறார்கள் என்பதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தான் கண்காணிக்க வேண்டும்.

அதுவும் தற்போது தீபாவளி நெருங்கும் நேரத்தில் இப்படிப்பட்ட உணவுப் பொருட்களை மக்கள் தரத்தை பார்த்து வாங்கி சாப்பிடுவதில்லை . மேலும்,50 வயதுக்குள் இருப்பவர்களுக்கு அல்லது உழைப்பவர்களுக்கு இது பற்றி கவலை இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், அவர்களுக்கும் ,இப்போது ஆண்களாக இருந்தால், தொப்பை விழுந்து விடுகிறது. பெண்களாக இருந்தால் வெயிட் போட்டு விடுகிறார்கள். இதெல்லாம் உடலுக்கு ஆபத்துதான்.
அதுமட்டுமல்ல, இன்று சிறிய வயதிலேயே கொலஸ்ட்ரால், பீபி, சுகர் ,எல்லாமே இருக்கிறது என்கிறார்கள். நான் சமீபத்தில் காஞ்சிபுரத்தில் ஹோட்டல் உணவுகளில் சாப்பிட்டு பார்த்தேன். சாப்பிடும் போது நன்றாக இருப்பது போல் தான் தெரிகிறது. ஆனால், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு மட்டும் தெரிகிறது. பிபி அதிகரிக்க தெரிகிறது. காரணம் அவர்கள் அதிகமான உப்பை பயன்படுத்தி விடுகிறார்கள்.
அது மட்டுமல்ல, காஞ்சிபுரத்திற்கு ஆயிரக்கணக்கான பேர் ,தினமும் வந்து செல்லக்கூடிய இடம் .திருவண்ணாமலை சொல்பவர்கள், காமாட்சி அம்மன் மற்றும் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு செல்பவர்கள், இங்கு வந்து செல்கிறார்கள் .
அப்படிப்பட்ட காஞ்சிபுரத்தில் ஒரு காலத்தில் உணவு அந்த அளவுக்கு தரமாகவும், சிறப்பாகவும், சுவையாகவும் இருந்தது .இப்போது பணத்திற்காக காஞ்சிபுரத்தில் ஹோட்டல் ஆக மாறிவிட்டது. அதேபோல் தெருவோர கடைகள் முதல் ஹோட்டல் உணவகங்கள் வரை ஒரு சில இடங்கள் மட்டுமே வாங்கி சாப்பிடும் இடமாக உள்ளது.

மற்ற இடங்களில், இந்த தரமற்ற உணவுகள் மக்களுக்கு நோயை விலை கொடுத்து வாங்கி சாப்பிடும் நிலைமைதான். எனவே, இது பற்றி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் காஞ்சிபுரத்தில் இந்த உணவுகளை பற்றி என்றாவது சென்று சாப்பிட்டு இருக்கிறார்களா? என்று தெரியவில்லை.
மேலும்,ஒரு சில ஓட்டல்களில் விலை அதிகமாக இருக்கிறது .ஆனால், அந்தப் பொருளின் தரம் குறைவாக இருக்கிறது. இப்படி ஹோட்டல் உணவுகள் கலப்பட பொருட்கள் வைத்து, கலப்பட எண்ணெய்களை வைத்து ,உணவு பொருட்களை தயாரித்தால், மக்கள் நோயைத் தான் விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கும்.
இதில் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் மாமிசம் எத்தனை நாள் செய்து ஃப்ரிட்ஜில் வைத்து சூடு செய்து கொண்டு வந்து கொடுப்பார்கள். இது எப்படிப்பட்ட நோயை உருவாக்கும் என்றால், உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தக் கூடிய உணவாக அது இருக்கும்.
அதுமட்டுமல்ல ,அசைவ உணவு ஹோட்டல்கள் சுகாதாரத்தில் இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே ,மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.
மேலும், ஹோட்டலுக்கு வருபவன் நாம் எது கொடுத்தாலும் ,சாப்பிட்டு விட்டு போவதுதான் ,அவன் தலையெழுத்து என்று இன்றைய ஓட்டல் அதிபர்கள் தீர்மானித்து விட்டார்கள்.
அந்த காலத்தில் ஹோட்டல் உணவகத்தில் நல்ல பேர் வாங்க வேண்டும் என்று ஹோட்டல் நடத்தினார்கள். வீட்டில் சாப்பிடுவதை விட்டுவிட்டு ஓட்டலில் சாப்பிடுவது பெருமை என்று சாப்பிட்ட மக்கள் இருக்கிறார்கள்.

அப்படி இருந்த ஓட்டல் உணவகங்கள், இன்று இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்கள். பார்ப்பதற்கு பெரிய ஹோட்டல் ஆக இருக்கும் .ஆனால் சாப்பாடு சுத்தமாக, சுகாதாரமாக இருக்கிறதா? என்பது மிகப்பெரிய கேள்வி அது இருக்கிறது.
இதனால், மக்களுக்கு நோயும் அவர்கள் விலை கொடுத்து வாங்க வேண்டியது இருக்கிறது. இவர்கள் எதுவும் இலவசமாக கொடுக்கவில்லை. விலையும் அதிகமாக இருக்கிறது. விலைக்கேற்ற பொருள்தான் இல்லை. விலைவாசி உயர்கிறது என்று சொல்லலாம். ஆனாலும் ,அவர்கள் எதையும் குறைந்த விலைக்கு விற்கவில்லை.

எனவே, இது பற்றி உணவுத்துறை! உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? என்பதுதான் எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளின் கேள்வி?