
நாட்டில் கல்யாண விசேஷத்தில் வீடியோ எடுத்துக்கொண்டு, ஃபோட்டோ எடுத்துக்கொண்டு, வருகின்ற அரசியல் மற்றும் திரை பிரபலங்களை காண்பித்துக் கொண்டு இருந்தால், கூட அது மக்களுக்கும் ஒரு மகிழ்ச்சியாக பார்ப்பார்கள்.
ஆனால், துக்க வீட்டிலே போய் வீடியோ எடுத்துக் கொண்டு, போட்டோ எடுத்துக்கொண்டு, இந்த வீடியோ எடுப்பவர்கள் ,தங்களை செய்தியாளர்களாக காட்டிக் கொண்டு, பத்திரிக்கைக்கு அர்த்தம் தெரியாத கூட்டங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் மக்கள் பார்க்க வேண்டும் என்று காட்டி பணம் சம்பாதிப்பது, எவ்வளவு கேவலமான, வருத்தமான செய்திகள் என்பதை சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும்,இசையமைப்பாளர் தேவா இறந்துவிட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்த ,திரைப்பட பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும், வந்து செல்கிறார்கள்.

அவர்களை ஒருவர் விடாமல் ,காட்டிக் கொண்டு, வீடியோ எடுத்துக்கொண்டு,ஒருவருடைய இழப்பில் கூட வருமானத்தை பார்க்கின்ற கேவலமான துறையா பத்திரிக்கை துறை? முதலமைச்சராக இருந்தாலும், அவரே இதை விரும்பாத போது, எதற்கு வீடியோ எடுத்துக் காட்ட கெஞ்சுகிறார்கள்?
இவர்களுக்கு எல்லாம் பத்திரிக்கை துறைக்கு அர்த்தம் தெரியாத இவர்கள் ,விளம்பரத்துறை என்று இவர்களுக்கு மாற்ற வேண்டும். செய்தித் துறையில் இவ்வளவு நாள் சலுகை, விளம்பரங்கள் கொடுத்து, இந்த விளம்பர மீடியாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது ,செய்தி துறையின் மிகப்பெரிய வரலாற்று பிழை.

இனியாவது செய்தித் துறை! கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தவறு !என்பதை உணர்ந்து,இனிமேலாவது செய்தி துறை விழித்துக் கொள்ளுமா?மேலும்,இனியாவது இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் தங்களை திருத்திக் கொள்வார்களா?