தமிழகம் முழுதும் 100 நாள் வேலை திட்டத்தில் தொடரும் மோசடிக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?,- தேனி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம்.

ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி

தேனி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வழக்கறிஞர் சோமசுந்தரம் ஒரு புகார் மனுவை தேனி மாவட்ட ஊராட்சி முகமைக்கு அனுப்பியுள்ளார். அந்தப் புகாரில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், கட்டுமான பணிகளுக்காக குறிப்பிட்டு சதவீதத்தை அந்த கிராம மக்களின் வேலை வாய்ப்புக்காக மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

ஆனால், தமிழகம் முழுதும் இந்த தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் அந்த மக்களுக்கு அந்த வேலையும் கொடுப்பதில்லை. அதற்கான பணமும் அவர்களுக்கு கொடுப்பதில்லை. ஏனென்றால், அந்த வேலையை ஒப்பந்ததாரர் செய்வதால் ,ஒப்பந்ததாரரே அதற்கான முழு தொகையும் என் ஆர் ஜி எஸ் கார்டுகளில் போட்டு ,அந்த பணத்தை அவரே எடுத்துக்கொண்டு ,யார் ?யாருக்கு? கொடுக்க வேண்டுமோ, அதை பங்கு பிரித்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த விஷயத்தை தெரியாத பஞ்சாயத்து தலைவர்களும் உண்டு .தெரிந்த பஞ்சாயத்து தலைவர்களும், அதை தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும் மோசடி பேர்வழிகளும் உண்டு. இதற்கு டெக்னிக்கல் அதிகாரிகள் A E , A square, மாவட்ட அதிகாரியான M E, இவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இது தவிர ,பிடிஓ க்கள் மற்றும்  project development officer (PD),APO, எல்லோருக்கும் பங்கு போகாமல் இந்த ஊழல் நடைபெறவில்லை.

இது கோடிக்கணக்கில் மாவட்டம் முழுதும் வருகின்ற மத்திய அரசு நிதி, இந்த நிதியில் எத்தனை ஊராட்சியில் இந்த வேலையை தரமாக செய்தார்கள்? என்பதை கணக்கெடுத்தால் 25 சதவீதமாவது தேறுமா? என்பது சந்தேகம். ஏனென்றால் 30% காண்ட்ராக்டர் அதாவது ஒப்பந்ததாரருக்கு, 10% முதல் எவ்வளவு வேண்டுமானாலும், அந்தந்த ஊராட்சியின் என் ஆர் ஜி எஸ் வேலை செய்பவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.

மீதி இருக்கிற 50 சதவீத நிதியில் ஒப்பந்ததாரர் அந்த வேலையை எப்படி தரமானதாக செய்வார்? இதற்கு அடுத்தது, இந்த வேலைக்கான மேற்பார்வை அதிகாரிகள், கணக்கு தணிக்கை அதிகாரிகள் இவர்களுக்கும் கமிஷன் உண்டு. இப்படி எல்லோரும் பங்கு போட்டு எடுத்துக் கொள்ள மத்திய அரசு எதற்கு கோடிக்கணக்கில் இந்த நிதியை வீணாக ஒதுக்க வேண்டும்? அதை உருப்படியான வேலை வாய்ப்புகளில் பயன்படுத்தினாலும், வருங்கால இளைய தலைமுறையாவது வேலை வாய்ப்பு பெற்று, அவர்களுடைய வாழ்க்கையாவது நிம்மதியாக இருக்கும்.

 இந்த பணம் இந்த மக்களுக்கும் போய் சேரவில்லை. செய்கின்ற வேலையும் தரம் இல்லை. எதற்கு இந்த என்.ஆர்.ஜி.எஸ் வேலை? இவர்கள் எல்லாம் பங்கு போட்டு சாப்பிடுவதற்கா? மாவட்ட ஆட்சியர்கள் முதல் எல்லோருக்கும் கமிஷன் ,இதுக்கு ஒரு நிர்வாகமா? எங்களைப் போன்ற பத்திரிகைகளுக்கு சலுகை ,விளம்பரங்கள் கொடுத்தாலே நிதி இல்லை என்று சொல்லுகின்ற, இந்த மோசடி நிர்வாகம், இதற்கெல்லாம் நிதி இருக்கிறதா? பங்கு போட்டு சாப்பிட ?

 மேலும்,உண்மையாக மக்களின் நலனுக்காக போராடும் பத்திரிகைகளுக்கு இந்த அரசாங்கம் இதுவரை என்ன செய்திருக்கிறது? எங்களுக்கெல்லாம் சலுகை ,விளம்பரம் கொடுக்க அரசாங்கத்தில் நிதி இருக்காது. ஆனால், மோசடி கணக்கு காட்டி, எடுத்துச் செல்ல நிதி இருக்கிறது. மேலும், இந்த சலுகை விளம்பரம் எல்லாம் தினசரி பத்திரிகைகளுக்கு தான் கொடுக்கும் விதி, என்ன விதி? நீங்கள் நன்றாக வேலையை செய்கிறீர்கள் என்று மக்களிடம் பொய்யை சொல்வதற்காகவா? இல்லை அந்த பொய்க்கான சன்மானமா? எவ்வளவு பெரிய ஊழல் நடக்கிறது.

இது பற்றி எந்த தினசரி பத்திரிக்கையும் வெளியிட்டதாக செய்தி வெளிவரவில்லை. மக்கள் அதிகாரத்தில் வெளிவருகின்ற பத்து சதவீதம் கூட வெளியிடாத தினசரி பத்திரிகைகளுக்கு பஸ் பாஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இது எல்லாம் ஒரு பத்திரிகை உள்குத்து வேலையா? இல்லை பத்திரிகையின் சமூக அநீதியா? மேலும், ஆகக்கூடி நீதிமன்றம் சரியில்லை. இந்த பத்திரிகை துறைக்கும், உள்ளாட்சி நிர்வாகத் துறைக்கும், நேர்மையான நீதியை நீதிமன்றம் தீர்ப்பளித்தால், இப்படிப்பட்ட ஊழலும் நடை நடைபெறுமா?

மேலும், கார்ப்பரேட் பத்திரிகைகளில் மட்டும் கொடுப்பது இந்த ஊழல் வேலைகளுக்கு பாராட்டி சான்றளித்து, அல்லது செய்த வேலையை விளம்பரப்படுத்தி மக்களை ஏமாற்றும் மோசடி வேலையா? இல்லை மறைமுக சன்மானமா? எது என்பது பத்திரிகை உலகத்திற்கு இனி புரிந்திருக்கும் . இனியாவது இந்த உண்மைகள் தமிழக மக்கள் அனைவருக்கும் போய் சேர வேண்டும் என்பதுதான் தேனி மாவட்டத்திலுள்ள உப்பர் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் மற்றும் மக்கள் அதிகாரம் பத்திரிகை ஆசிரியரின் முக்கிய நோக்கம். இந்த உண்மைகள் இனி மறைக்க முடியாது.

அதனால், மத்திய அரசு, என் ஆர் ஜி எஸ் (NRGS) வேலைக்காக ஒதுக்கப்படும் நிதியை உங்களுடைய மேற்பார்வையில் அதிகாரிகளை நியமித்து, கணக்கு தணிக்கை செய்ய வேண்டும் .அப்போதுதான் இதன் பயன்கள் முழுமையாக மக்களை சென்றடையும்.

மேலும், நான் பார்த்ததில் தேனி மாவட்ட உப்பர்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் இந்த நிதியை அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று இருக்கலாம். ஆனால், அவ்வாறு அவர் எடுத்துச் செல்லாமல், அந்த கிராம மக்கள் பயனடைய வேண்டும் என்று சுமார் 500 பேர் வேலை செய்யும் ,இந்த 100 நாள் பணியாளர்களுக்கு ரூபாய் 15 லட்சத்தை அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தி இருக்கிறார் என்பதை கேள்விப்படும்போது, இவர் ஆயிரத்தில் ஒரு பஞ்சாயத்து தலைவராக தான் பார்க்கிறேன்.

 தலைவராக யார் வேண்டுமானாலும், ஒரு கிராமத்திற்கு வரலாம். ஆனால் நேர்மையான தலைவர்கள் தமிழகம் முழுவதும் ஒரு அரை சதவீதம் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதில் இவர் இப்படி ஒரு வெளிப்படையான நிர்வாகத்தை ,அந்த கிராமத்தில் செயல்படுத்துவது மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *