கடந்த அதிமுக ஆட்சியில் மு க ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும்போது எடப்பாடி பழனிசாமி பொங்கல் தொகுப்பு ரூபாய் 2500 கொடுத்தார். ஆனால் அதுவே மக்களுக்கு போதாது என்று ரூபாய் 5000 தரவேண்டும் என்று அப்போது சொன்னார்.
ஆனால், இப்போது இவர் பொதுமக்களுக்கு இது பொங்கல் பரிசு தொகுப்பா? அல்லது ஓஏபி பென்ஷனா? என்று கிண்டல் அடிக்கிறார்கள். ஏனென்றால் அதுவும் ஆயிரம், இதுவும் ஆயிரம், இரண்டும் வித்தியாசம் இல்லாமல் இருக்கிறது என்று, பொதுமக்கள் பேசுவதோடு ,இந்த இலவசம் மக்களுக்கு தேவையற்றது என்கிறார்கள்.
மேலும், இதை ஓ ஏ பி பென்ஷன் வாங்கும் மக்களுக்கு சேர்த்துக் கொடுத்திருக்கலாம். அவர்கள் அதை பொங்கல் பரிசாக கூட ஏற்றுக் கொள்வார்கள் .ஆனால், இந்த மக்களை வெறும் ஒரு ஆயிரம் ரூபாயில் பொங்களை கொண்டாடுங்கள் என்று சொன்னால், தரம் தாழ்ந்த நிலைக்கு மக்கள் வந்து விட்டார்களா ?
மேலும் ,இது உழைக்கும் மக்களை கேவலப்படுத்துவது போல உள்ளது. குறைந்தபட்சம் 5,000 ஆவது கொடுத்திருக்க வேண்டும் .ஆனால், இங்கு வேலை செய்பவர்கள் சென்னையில் இருந்து அவரவர் சொந்த ஊருக்கு செல்வதற்கே ரூபாய் ஆயிரம் செலவழித்துக் கொண்டு, பொங்கல் கொண்டாட போகிறார்கள்.
ஆனால், இந்த ஆயிரம் ரூபாய் கொண்டு போய் அவர்கள் எப்படி பொங்கல் கொண்டாட முடியும்? இனியாவது இந்த பொங்கல் தொகுப்பு பரிசு என்று மக்களுக்கு கொடுத்து கேவலப்படுத்துவதை விட ,கொடுக்காமல் அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்த என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்தால் போதும் என்கிறார்கள்.