தமிழக முழுதும் பல ஆயிரம் கோடிகளை 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு கொடுத்து வருகிறது. ஆனால், இந்த திட்டத்தின் பயன்கள் மக்களுக்கு முழுமையாக போய் சேராமல் ,அதிகாரிகளும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும், பங்கு போட்டு நிதி மோசடிகளை செய்துள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமான உண்மை .
இதை தடுக்க வேண்டும் என்றால், மத்திய அரசு உடனடியாக மாவட்டம் தோறும் ஆடிட்டர்களை நியமித்து, வரவு செலவு கணக்கு இது பற்றி ஆன்லைனில் வெளியிட வேண்டும். மேலும், இந்த என் ஆர் ஜி எஸ் வொர்க்(NRGS) நிதி எடுத்து எந்தெந்த மாவட்டங்களில், எந்தெந்த ஊராட்சிகளில் எத்தனை லட்சம் ரூபாய்க்கு மற்ற வேலைகள் செய்யப்பட்டுள்ளது? அதன் தரம் என்ன?வேலை செய்தார்களா? இல்லையா? இது பற்றி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், தகவல் சேகரித்து ஒரு ரிப்போர்ட் மத்திய அரசுக்கு அனுப்ப மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
இது தவிர, மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் உள்ள ஒரு ஆய்வுக் குழு நேர்மையான ஐஏஎஸ் தலைமையில் ,தமிழக முழுவதும் சில மாதங்கள் தங்கி ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அப்போதுதான் அதனுடைய உண்மையான நிலவரம், மற்றும் எத்தனை கோடி மோசடி நடைபெற்றுள்ளது?
என்பதை தெரிந்து நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் இப்படிப்பட்ட ஆட்சி நிர்வாகத்தை கொடுத்து வரும் மு க ஸ்டாலின், இது பற்றி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? மேலும், மத்திய அரசு கொடுத்த இந்த நிதியை தவறாக பயன்படுத்தி கையாளுகின்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது என்ன நடவடிக்கை மாவட்ட ஆட்சியர்கள் எடுக்கப் போகிறார்கள்?
இது பற்றி மத்திய அரசின் நடவடிக்கைகள் என்ன? என்பதுதான் தமிழக கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் கேட்கின்ற முக்கிய கேள்வி?