அரசியல் கட்சிகளுக்குள் போட்டி பொறாமையால் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்கிறார்கள். ஆனால், ஊடகங்களின் மாண்பு தெரியாமல் செய்தியாளர்கள் பாஜக தலைவர் அண்ணாமலையை கேள்வி கேட்கும் அவல நிலை ஏன்?

அரசியல் ட்ரெண்டிங் தமிழ்நாடு

ஒரு அரசியல் கட்சி, அது அதிமுக ,திமுக அல்லது பாஜக போன்ற எந்த கட்சியாக இருந்தாலும், அந்த அந்த அரசியல் கட்சியினர், ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்கிறார்கள். அதில் எந்த கட்சிக்கும் சமரசம் இல்லை.

ஆனால்,  பெரிய பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் செய்தியாளர்கள், கேட்கின்ற கேள்வி ஊடக மாண்புக்கு எதிரானது. ஏனென்றால், இந்த கருத்து சொல்வது கூட இவர்கள் எல்லாம் பெரிய பத்திரிகைகள், பெரிய தொலைக்காட்சிகள் எங்களைப் போன்ற சிறிய பத்திரிகைகளை பார்த்தால் ஒரு எலக்காரம் தான் இருக்கும்.

 அவர்களுக்கு தெரியுமோ, தெரியாத தெரியவில்லை .அது சிறிய ஊடகமாக இருந்தாலும், பெரிய ஊடகமாக இருந்தாலும் நீங்கள் வெளியிடும் கருத்துக்கு தான் மரியாதையே, தவிர ,உங்கள் ஊடகத்திற்கு எந்த மரியாதையும் இல்லை. மேலும், ஒரு பிரஸ்மீட்  என்றால் அரசியல் கட்சித் தலைவர் அண்ணாமலை அழைத்து நீங்கள் போயிருக்கிறீர்கள். அங்கே என்ன கேள்வி கேட்பீர்கள்? எதற்காக வந்தீர்கள் ?இல்லை, அவர் என்ன சொல்ல வந்தார் ?அவர் என்ன பிரச்சனையை பற்றி பேச போகிறார்? இதுதான் அந்த பிரஸ்மீட்டில் இருக்க வேண்டும்.

 ஆனால், அங்கே, மக்கள் சம்பந்தமான அல்லது மக்களின் பிரச்சனைக்கான எந்த கேள்வியும், இதுவரை அதிகம் கேட்காமல் , இரண்டாம் கட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கேட்கின்ற கேள்விகளை தான் அதிகம் கேட்கிறார்கள். அதுவும் அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகள்தான், அந்த கேள்விகளும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட கேள்விகளாக தான் அது இருக்கிறது. இது நடுநிலையான ஊடகங்களின் மாண்பு இதுவல்ல. மேலும் ,இந்த ஊடகங்களில் உள்ள செய்தியாளர்கள், ஒரு உள்நோக்கத்துடன் தான் கேள்வி கேட்கிறார்கள். அந்த உள்நோக்கம் ஊடகத்திற்கு எப்போதும் இருக்கக் கூடாது.

 ஒருவருக்கு ஒரு விதமாகவும், மற்றொருவருக்கு இன்னொரு விதமாகவும் கேள்விகளை கேட்பது, இது நடுநிலையான ஊடகத்திற்கும், பத்திரிகை சுதந்திரத்திற்கும் எதிரான ஒன்று. நான் இதுவரை அவருடைய எந்த பிரஸ்மீடும் பார்த்ததில்லை. ஆனால், தற்போது நடந்த பிரஸ்மீட் வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் ஒருவரை கேள்வி கேட்டு, அவரை கேவலப்படுத்த வேண்டும். அல்லது அவருக்கு ஒரு தலை குனிவை ஏற்படுத்த வேண்டும். இது அரசியல் கட்சிக்காரர்கள் செய்ய வேண்டிய வேலை. அந்த வேலையை இப்போது ஊடக செய்தியாளர்கள் கையில் எடுத்திருக்கிறார்களா? என்ற கேள்வியும் எங்களைப் போன்ற நடுநிலை பத்திரிகைகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

 நீங்கள் கேட்கும் கேள்விக்கு அண்ணாமலை எல்லா கேள்விக்கும், முறையாக பதில் சொல்கிறார். சில அரசியல் கட்சிக்கு சாதகமாகவும், பாஜகவிற்கு பாதகமாகவும் போன்ற கடினமான கேள்விகளை கேட்டாலும், அதற்கும் பதில் வருகிறது. ஆனால், அப்படிப்பட்ட கேள்விகளை கேட்கும் செய்தியாளர்கள் ஊடக மரபின் மாண்பை மீறுகிறார்கள்.அது ஒரு கிரிமினல் ஆக்டிவிட்டீஸ் கேள்வியாகவே இருக்கிறது. அந்த கேள்விக்கும் பதில் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். இப்படி அரசியல் உள்நோக்கத்துடன் கேட்கப்படும் கேள்விகளுக்கு அண்ணாமலை பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.

மேலும் நீங்கள் ஒரு ஊடகவியலாளரா? அல்லது அரசியல் கட்சிகாரா? என்பதுதான் சமூக முன்னேற்றத்திற்காக வெளியிடும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் முக்கிய கேள்வி? தவிர,

பிரச்சனைகளை உருவாக்குவதற்கு பிரஸ்மீட் தேவை இல்லை. அதேபோல் வாய்ச்சவடால் வார்த்தைகள், அனாவசியமான கேள்விகள், உங்களிடம் தவறு வைத்துக் கொண்டு, அவரையே குறை சொல்லிக் கொண்டிருந்தால் ,அது தவறானது. அந்த தவறும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு ஊடக செய்தியாளர்கள் கட்சிக்காரர்களை போல் செயல்பட்டால், அது ஊடகத்தின் வேலையா? அல்லது கட்சியின் வேலையா? இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பொதுமக்களும், பத்திரிகை சார்ந்த அனைவரும் சிந்தித்துப் பாருங்கள்.

 உங்களுடைய வேலை என்ன? செய்திகள் சேகரிப்பது, அதேபோல் செய்திகளை கேட்பது, அந்த செய்திக்கான கேள்விகள் எந்த நோக்கத்தின் அடிப்படையில் நீங்கள் கேட்கிறீர்கள்? என்பது தான் மிக முக்கியமான ஒன்று. அது, யாருக்கானது ? அரசியல் கட்சிக்கானதா?, மக்களுக்கானதா? எதுவாக இருந்தாலும், ஒரு சார்பாக உங்கள் கேள்வி அங்கே முன் வைக்க கூடாது. அப்படி கேட்பவர்கள் அவர்களும், ஒரு அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் தான் என்பதை இந்த பத்திரிகை உலகம் எப்போது புரிந்து கொள்ளும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *