இந்து அறநிலைத்துறை எதற்காக உருவாக்கப்பட்டது? இந்து கோயில்களின் பராமரிப்புக்காக உருவாக்கப்பட்ட துறை தான் இந்து அறநிலையத்துறை. ஆனால், இந்த துறை 50 ஆண்டு காலமாக இந்து கோயில்களின் சொத்துக்கள் விற்கப்பட்டு ,ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு வருகிறது. அப்படி வரும் இந்த சொத்துக்கள் ஏன்? இந்து அறநிலைத்துறையால் பாதுகாக்கப்பட முடியவில்லை, இது முக்கிய கேள்வி? தவிர, பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் தகுதி இல்லாத இந்து அறநிலையத்துறை எதற்கு என்பதுதான் இந்து மக்களின் முக்கிய கேள்வி? மேலும், இது
அரசு கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய இந்து அறநிலைத்துறை, இந்து மக்களின் கோயில்களுக்கு ஒரு பாதுகாப்பு ஏற்படுத்துவதற்காகத்தான் இந்து அறநிலையத்துறை இருக்க வேண்டும். ஆனால், இதுவரையில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், விற்கப்பட்டும் உள்ளது. இதற்கு இந்த கோயில்கள் அமைப்புகள், சில இந்து அமைப்புகள், இதற்காக போராடி வருகின்றன. ஆனா,ல் இந்த போராட்டத்திற்கு சரியான முறையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை .
அதிகாரிகள் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இயங்குகிறார்கள். ஒரு பக்கம் அமைச்சருடைய அரசியல் தலையீடு, மற்றொரு பக்கம் தக்கார் தலையீடு, இது இரண்டுக்கும் இடையில் தான் இந்த இந்து அறநிலையத்துறை இயங்கி வருகிறது. பல கோவில்களில் உள்ள சொத்துக்களை பொது பயன்பாட்டிற்காகஎடுத்துக் கொள்வது அல்லது நீண்ட கால குத்தகை விடுவது போன்ற செயலெல்லாம், இந்த தக்கர் மற்றும் தமிழக அரசின் அரசியல் நிலைப்பாடாக இருக்கிறது. இது அதிமுக, திமுக இந்த இரண்டு ஆட்சிகளிலும் கோயில் சொத்துக்கள் என்பது அவர்களுடைய சொத்துக்களாக நினைத்துக் கொள்கிறார்கள்.
ஆனால், சட்டம் அதற்கு முறையான வழிமுறைகளை வகுத்து தான் கோயில் சொத்துக்கள் பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறைகளை வகுத்துள்ளது. ஆனால் ,அந்த விதிமுறைகளை மீறி தான் இங்கே அரசியல் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊடகங்களில் பலமுறை சொல்லி இருக்கிறேன். இவர்கள் சொல்லுகின்ற பொய்யை தான் 100 முறை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களிடம் அதாவது அமைச்சர் சேகர் பாபு, ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இருந்து ,அத்தனை ஏக்கர் எடுத்து விட்டேன் என்று ஒரு போலியான விளம்பரம் தான் இது, ஆகக் கூடி இந்த ஊடகங்கள் ஆட்சியாளர்களின் தவறுகளுக்கு ஜால்ராவாக தான் இருக்கிறது. அவர்கள் பிழைக்கத் தெரிந்த ஊடகங்கள் அதனால் சலுகை விளம்பரங்களை அரசாங்கம் கொடுக்கிறது எங்களைப் போன்ற மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கின்ற அல்லது உண்மையை வெளிப்படுத்துகின்ற ஊடகங்களுக்கு எந்த சலுகை விளம்பரங்களும் கொடுக்காமல் தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் ஒரு பத்திரிகையின் சமூக அநீதிகள். தவிர,
தற்போது கூட ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது வழக்கு தொடர்ந்துள்ளார் .அந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோயில் சொத்துக்கள் முக்கால் லட்சம் காணாமல் போய் இருப்பதாக கணக்கு கேட்டு இருக்கிறது. அதற்கு அரசு தரப்பில் அதை தேடிக் கொண்டிருக்கிறோம் என்று பதில் சொல்கிறார்களாம் .அப்படி என்றால், இந்த இந்து அறநிலையத்துறை மேற்பார்வையில் இருக்கின்ற 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களின் நிலைமை என்ன?
மேலும், இந்த கோயிலின் வருமானம் அந்த கோயில் பயன்பாட்டிற்கு மட்டும்தான் செலவிட வேண்டுமே ஒழிய ,பொது காரியங்களுக்கு எடுத்து செலவிட அனுமதி கிடையாது. இதையும் இவர்களாகத்தான் செய்கிறார்கள். இதே வருமானம் முஸ்லிம் தர்காவிலும், கிருத்துவ சர்ச்களிலும் வரவில்லையா? அங்கே என் அந்த வருமானத்திலிருந்து பொதுநலத்திற்கு உங்களால் எடுக்க முடியவில்லை?
அப்படி என்றால், இந்துக்கள் உங்களுக்கு சட்டத்தை எப்படி ஏமாற்றினாலும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற ஒரு கருத்து, இதனால் வரையில் இருந்து வந்த அரசியல். இது தவிர, இந்த மக்களுக்கும் பல உண்மைகள் தெரியாது. அதனால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் .இதை தான் இந்து அமைப்புகள் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. இவர்கள் சட்டத்தை கடவுளிடமும் ஏமாற்றுகிறார்கள். மக்களிடமும் ஏமாற்றுகிறார்கள்.
அதாவது பத்திரிகை துறையில் இருக்கின்ற சட்டங்கள் கூட ,சில பத்திரிகைகளுக்கு சலுகை விளம்பரம், சில பத்திரிகைகளுக்கு சலுகை விளம்பரமும் இல்லை. அதற்கு ஒரு சட்டம், இதற்கு ஒரு சட்டம் இப்படி எல்லா துறையிலும், இதுபோன்ற ஒரு மோசடி நிர்வாகத்தை தான், இந்த திமுக, அதிமுக ஆட்சியில் தொடர்கிறது. இந்த பொது நல வழக்கில் நீதிமன்றம் சரியான முறையில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
மேலும் தக்கார் என்பவர் இடைக்கால ஒரு நிர்வாகி தான் அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஒரு கோயில் நிர்வாகத்தை சரியான முறையில் நிர்வாகிக்க, அந்த கோயிலின் அறங்காவலர்களுக்கு மட்டும்தான், அத்தனை அதிகாரமும் உள்ளது. ஆனால், அறங்காவலர்களை நியமிக்காமல், இது நாள் வரையில் தக்கர்களை நியமித்து, இந்த அரசாங்கமும், இந்து அறநிலையத்துறையும் மக்களை ஏமாற்றி வருகிறது.
அதுவும் இந்த தக்கருக்கு 90 நாள் வரை தான் அவருடைய நியமனம் செல்லும். ஆனால், இவர்கள் வருட கணக்கில் இவர்களை நியமித்து கோயில் சொத்துக்களை விற்பனை செய்யவும், ஆக்கிரமிப்பு செய்யவும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. எனவே, நீதிமன்றம் தற்போது வழங்கிய நீதியை போல்! ஆட்சி அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக வழங்கி, சமூக நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும்,
நீதிமன்றம் இருக்கின்ற ஒரு நம்பிக்கையில் தான், மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .அந்த நம்பிக்கையை நீதிமன்றம் வீணாக்காமல் சமூக நலன் கருதி வருகின்ற பொது நல வழக்குகள் அனைத்திற்கும் சட்டப்படியும், தர்மத்தின் படியும் ,நியாயத்தின் படியும் தீர்ப்பளித்து இந்த தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான், மக்கள் அதிகாரம் சார்பில் வைக்கின்ற முக்கிய கோரிக்கை.