தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆட்சியில் இந்து கோயில்களுக்கு ஏற்பட்ட நிலைமை என்ன தெரியுமா?

ஆன்மீகம் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு

திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஊழல் தான் மிச்சம் என்று நினைத்தால், கோயில்‌ சொத்துக்கள் இதுவரை அஞ்சு புள்ளி இரண்டு(5.2) லட்சம் ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஐம்பதாயிரம் ஏக்கர் நிலங்கள் சட்டவிராதமாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகளால், பட்டா போட்டு விற்கப்பட்டுள்ளது . இதைக் கூட ஒரு ஆங்கில தொலைக்காட்சி தான், இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அப்படி என்றால் இந்த செய்திகளை வெளியில் வராமல் இருக்க இந்து அறநிலைத்துறை அதிகாரிகள், எந்த அளவிற்கு இதை பார்த்துக் கொண்டு இருந்திருப்பார்கள். மேலும்

அப்படி என்றால், நீதிமன்றத்தில் இவர்கள் காட்டும் கணக்கு பொய்யான ஒரு கணக்கு. இது இந்து கடவுள்களை ஏமாற்றிய துரோகமா? அல்லது இந்துக்களுக்கு ஏமாற்றிய துரோகமா? இப்படிப்பட்ட அரசியல் வரலாறு என்ன என்று கூட படிக்காத ஊடகங்கள், சங்கங்கள் அதற்கு பின்னால் நின்று பிழைப்பு நடத்துக் கொண்டிருக்கிறது. பெரும்பான்மை மக்கள் தமிழகத்தில் இந்துக்களாக வாழ்ந்து, இந்துக்களின் கோயில்களில் இப்படிப்பட்ட மோசடி நிர்வாகத்தை கொடுப்பதற்கு இந்துக்களே அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்றால், அதைவிட கேவலம் வேறு எதுவும் இல்லை.

 மேலும், மேடையில் இந்த இந்து கோயில்களையும், இந்துக்களையும் வசைப்பாடி அரசியல் நடத்திக் கொண்டிருந்த திராவிட கட்சிகள் பற்றி இன்னும் தெரியாத தமிழக மக்கள் முட்டாள்களாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் ,இவர்களும் கோயிலுக்கு போவார்கள், பக்தியுடன் இருப்பதாக காட்டிக் கொள்வார்கள். ஆனால், இந்த கோயில் சொத்துக்களை பற்றி யார் ஆக்கிரமிப்பு செய்தாலும், பட்டா போட்டு விற்றாலும் கவலைப்பட மாட்டார்கள்.

 அதன் பிறகு தேர்தல் நேரம் வந்தால் காலை பிடித்து, காசு கொடுத்து, சாமி சரணம் போட்டு, ஏமாற்றி இந்த மக்களை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள். இது தவிர, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் திருடப்பட்டுள்ளது. இதைப்பற்றி கூட ஆட்சி அதிகாரத்தில் இந்துக்கள் இருந்தும் கவலைப்படவில்லை என்றால், இவர்களுக்கு வாக்களித்த மக்கள்தான், முட்டாள்கள்.

 நம்முடைய தெய்வத்தை நாம் கோயிலில் வணங்கினாலும், அல்லது வீட்டில் வணங்கினாலும், நமக்கு ஒரு பக்கத்துணை இருக்கிறது என்ற நம்பிக்கை தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட இந்த கோயில் சொத்துக்களை விற்று, ஆக்கிரமிப்பு செய்த ஒரு நிர்வாகத்தை நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம், நம்மையே ஏமாற்றி இருக்கிறது .

அது நம் அனைவரும் வணங்கும் நம் கடவுளை நாம் ஏமாற்றி இருக்கிறோம். இந்த சொத்துக்கள் இவர்கள் யாரும் ஆட்சிக்கு வந்து எழுதி வைத்த சொத்துக்கள் அல்ல. அந்த காலத்தில் ராஜாக்கள், ஜமீன்தாரர்கள், நிலச்சுவான்தார்கள் எழுதி வைத்த சொத்துக்கள். இதையும் ஆக்கிரமிப்பு செய்து விற்கிறார்கள் என்றால், இவர்களுடைய ஆட்சி, நிர்வாகம் எந்த லட்சணத்தில் இருந்துள்ளது என்பதுதான் இதற்கு சான்று.

 இப்படிப்பட்ட நிலையில், இந்த அரசாங்கம் இந்த கோவில்களில் உள்ள பணத்தை எடுத்து பொதுக் காரியத்திற்கு பயன்படுத்துகிறது. அங்கிருந்து ஒரு ரூபாய் கூட பொது காரியத்திற்கு எடுத்து பயன்படுத்தவில்லை என்றாலும், தேவாலயங்கள், தர்காக்கள் சொந்த கட்டிடங்களில் இயங்கினாலும், அதை புதுப்பிக்க நிதி கோரி விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு என்று தகவல் .

எனவே, ஆட்சியாளர்களால் இந்த கோயில் சொத்துக்கள் கூட பராமரிக்க தகுதி இல்லை என்றால், இவர்கள் எதற்கு ஆட்சிக்கு வர அலைய வேண்டும்? நாம் இந்த ஆட்சியாளர்களால் எவ்வளவு ஏமாற்றப்பட்டு இருக்கிறோம்? என்பது மக்களின் சுயநலமும், அரசியல் கட்சி ஊதாரிகளின் பேச்சும், அதை விளம்பரப்படுத்தி காசு சம்பாதிக்கும் ஊடகங்களின் சுயநலமும், ஊழல் வாதிகளின் மேடைப் பேச்சும் , தேர்தல் நேரத்தில் காசு வாங்கி வாக்களிப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை தமிழக அரசியலில் தொடர்ந்து ஏமாறும் மக்கள் எப்போது உணர்வார்கள் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *