சட்டமன்றத்தில் இல்லாததை அல்லது செய்யாததை அல்லது ஆட்சியாளர்களின் புகழை பேச வேண்டிய அவசியம் ஆளுநருக்கு உள்ளதா? இதுதான் சட்டமன்ற மரபா? இந்த மரபை தான் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மீறிவிட்டாரா ? மேலும்,
தமிழகத்தில் ஆளுநர் ஆர் என் ரவி பற்றி தமிழக மக்கள், எந்த ஒரு தவறான பேச்சு, தவறான கருத்து, குற்றச்சாட்டு, எதுவுமே பொதுமக்கள் பேசவில்லை. ஆனால், திமுக அரசு மற்றும் அதன் அதனுடைய கூட்டணி கட்சிகள் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவதும் ,அவருக்கு சட்டமன்ற மரபுத் தெரியவில்லை என்று பேசுவதும், சட்டமன்றத்திலே மரபை மீறி ,அவர் மீது தீர்மானம் கொண்டு வருவதும், இது எல்லாம் எதற்காக? இவர்களுடைய தவறான நடவடிக்கைகளுக்கு, அவர் ஒத்து போகவில்லையா?
ஆளுநர் அவருடைய பணியில் ,அவருடைய செயல்பாட்டில், அவருடைய பேச்சுக்களில், கருத்துக்களில், சிறிதளவும் பிசகாமல் செயலாற்றி வருகிறார். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. இது உண்மையான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள், சமூக அக்கறை உள்ள ஊடகங்கள், இந்த உண்மையை தைரியமாக வெளிப்படுத்துவார்கள்.
ஆனால், சலுகை விளம்பரத்துக்கு தலையை சொரிந்து கொண்டிருக்கும் ஊடகங்கள், அதை சொல்வதற்கு தைரியம் இருக்காது. மேலும், எங்களைப் போன்ற ஒரு சில சமூக அக்கறை உள்ள பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் அது கொடுத்தாலும், கொடுக்கவில்லை என்றாலும் சொல்ல வேண்டிய கடமை சொல்லித்தான் தீருவோம். மேலும் சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ள விளக்கம் யாதெனில்,
ஆளுநர் தமிழில் அழகாக மேற்கோள் காட்டி பேசிய வார்த்தைகளை அதாவது வரப்புயற நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான் என்ற ஔவையாரின் பொன்மொழி வரிகளையும், வாழிய பாரத மணித்திரு நாடு என்ற பாரதியாரின் கவிதை வரிகளையும் ,தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் தமிழில் சொன்ன ஆங்கில புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்களையும், அவை குறிப்பில் இருந்து நீக்கி உள்ளனர்.
மேலும் ஆளுநர் உரையை ஜனவரி 6 அன்று அரசு அனுப்பி வைத்து, அதில் உள்ள ஆட்சபேகரமான விஷயங்களை ஆளுநர் குறிப்பிட்டு கேட்டு, அவைகளை நீக்க சொல்லி சொன்ன போது , அச்சுக்கு போய்விட்டது, நீங்கள் பேசும்போது, தவிர்த்து பேசுங்கள் என்று சொல்லி உள்ளனர்.
(அது ஆவணபூர்வமாக பதிவாகியுள்ளது.) ஆனால், ஆளுநர் சபையில் அதை நீக்கி வாசித்த போது, உடனடியாக சேனல்களுக்கு அதை அனுப்பி வைத்தும், ஆளுநர் இருக்கும் போதே ,ஆளுநர் உரைக்குப்பின் சபையில் முடித்து வைக்கப்பட வேண்டும் என்கிற சபை மரபை மீறி தீர்மானம் கொண்டுவரப்பட்டு, ஆளுநர் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். எதையெதை ஆளுநர் உரையில், தவிர்க்கப்பட்ட பகுதிகள் ஏன் என்பதை பார்ப்போம்?
தவிர்க்கப்பட்ட பகுதிகள் இந்த அரசாங்கத்தை கண்டபடி பெரிதும் புகழ்ந்த பகுதிகள், நடைமுறை வேறாக இருந்ததால், அது தவறாக இருந்ததால், அதை பேசும்போது தவிர்க்கலாம் என்று சொன்னதால் தவித்தார் . மேலும், இந்த அரசாங்கம் வீரம் மற்றும் வீரியம் கொண்ட திராவிட மாடல் ஆட்சியில் தொடரும், இதை ஆளுநர் சொல்ல முடியாது.
மேலும் முதல்வர் அவர் உரையில் பேச வேண்டியது, கொள்கை ,செய்ய வேண்டியதை மட்டும் ஆளுநர் உரையில் வைப்பார்கள். இது போன்ற அதீத புகழ்ச்சிகளை தவிர்ப்பேன் என்று ஆளுநர் சொல்லிவிட்டார் .மேலும், இந்த மாநிலம் அமைதி மற்றும் அமைதியின் சொர்க்கமாக தொடர்கிறது. வன்முறையிலிருந்து விடுபட்டுள்ளது, என்று இல்லாத ஒன்றை பதிய வைப்பதை அவர் தவிர்த்து உள்ளார்.
மேலும், ஆளுநர் என்ன அரசியல்வாதியா? இவர்கள் சொல்வதை ஒன்று விடாமல் சொல்வதற்கு, மேலும், தினசரி நியூஸ் சேனல்கள், பேப்பர்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை, அடுக்கடுக்காக புகார்களாக சொல்லும் போது, இந்த மாநிலம் அமைதியின் சொர்க்கமாக இருக்கிறது என்பது எதார்த்தம் அல்ல ,சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு நடந்த பாலியல் சீண்டலில், குற்றவாளிகளை கைது செய்யாமல் பாதுகாத்ததும், பின்னரே எதிர்ப்பு கிளம்பிய பின் கைது செய்ததும், நடந்த நிகழ்வு இலங்கை கடற்பறையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், மாநில அரசின் முயற்சியால் விடுவிக்கப்பட்டதாக உள்ள வரிகளை எப்படி ஏற்க முடியும்? அது சர்வதேச பிரச்சனை, மத்திய அரசின் தலையீடு இல்லாமல் அது எப்படி நடக்க முடியும்?
மேலும், ஒன்றிய அரசின் முயற்சி என்கிற வார்த்தையை சேர்த்து படித்தது தவறா? பல இடங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் அமைதியின் சொர்க்கமாக மாநிலம் இருக்கிறது என்ற வார்த்தைகளை முதல்வர் மற்றும் டிஜிபி போற்றும் வகையில் இருந்தது, இந்த வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என். ரவி ,தவித்து விட்டார்.
இது தவிர, தொழில் முதலீடு குறித்து மிகைப்படுத்தப்பட்ட செய்தி என்னவென்றால், கடந்த 1. 5 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை காட்டிலும், அந்நிய முதலீட்டை நேரடியாக தமிழகம் அதிகமாக ஈர்த்துள்ளது என்பதை ஆளுநர் மாற்ற சொல்லி இருக்கிறார் அதையும் இவர்கள் மாற்றாமல் இருந்ததால் ,அதை தவிர்த்து உள்ளார்.
மேலும், கடந்த ஒன்றாக ஆண்டுகளில் தமிழகத்தில் அந்நிய முதலீட்டை ஈர்த்தது வெறும் 2.5 பில்லியன் டாலர்கள் என பெருமையாக பதிவிட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் மகாராஷ்டிராவில் 28 பில்லியன் டாலர்கள், கர்நாடகாவில் 25 பில்லியன் டாலர்கள், அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ளது .
இந்த பெருமையை விவரம் தெரிந்த ஆளுநர் எப்படி பேசுவார்?
மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை சுற்றி நின்று, உரையை வாசிக்க விடாமல் கோஷமிட்டு கேரோ செய்தனர்.. இது இதற்கு முன் நடக்காத ஒன்று. இதை சபாநாயகர் தடுக்காமல், அவர்களை வேடிக்கை பார்த்துள்ளார். மேலும் ஆளுநர் ,முன்னாள் சபாநாயகர் இருக்கையில் இருக்கும் போது, ஆளுநர் உரையின் தமிழாக்கம், சபாநாயகர் உரை வாசித்தப் பிறகு, தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். மற்றும் அமர்வு ஒத்தி வைக்கப்பட வேண்டும்.
ஆனால், சபை மரபை மீறி முதல்வர் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது ,சபை விதிகளின் படி இல்லை. அவை மரபை மீறிய செயல். இது தவிர, சபாநாயகர் சபையின் தலைவராக இருந்தாலும் ,அரசியலமைப்பு சட்டத்தின் தலைவராக உள்ள ஆளுநரின் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்குவது என்பது சட்ட வல்லுநர்கள் முன் உள்ள தீவிர, விவாதப் பொருளாகும். இவ்வாறு ஆளுநர் மாளிகை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.