திமுக அரசு தமிழக கவர்னருடன் சுயநல அரசியலை செய்ய முற்பட்டால் நிச்சயம் கட்சிக்கும், ஆட்சிக்கும் அது தோல்வியே.

அரசியல் ட்ரெண்டிங் தமிழ்நாடு மத்திய மாநில செய்திகள்

தமிழகத்தில் திமுகவின் வரலாறு அன்றும், இன்றும் வாய்ப்பேச்சில் தான் அரசியல் சொல்வது நூறு சதவீதம் என்றால் செய்வது 10 சதவீதம் மீதி இந்த 90 சதவீதம் எங்கே போகிறது? என்று யாருக்கும் தெரியாத உண்மை. இந்த உண்மையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஊடகங்களுக்கு உள்ளது. ஆனால், ஊடகங்கள் அவர்கள் சொல்கின்ற பொய்யை அப்படியே சொல்லிக் கொண்டு, தங்கள் சுயநலத்திற்காக பொதுமக்களை ஏமாற்றுகிறது.

 ஒரு பக்கம் அவர்கள், மற்றொரு பக்கம் ஊடகம் ,அது தொலைக்காட்சி, பத்திரிகைகள் என்று பல ஜால்ரா அடித்து, மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறது. அந்த முட்டாளாக்கும் வேலைக்கு, மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் இதற்காக செலவிடப்படுவது தான் தமிழக மக்களுக்கு செய்தித் துறை செய்கின்ற மிகப்பெரிய அநியாயம்.

 இது அரசின் செய்தியை விளம்பரப்படுத்துவதற்காக அவர்கள் மேற்கோள் காட்டும் ஒரு கருத்து. அந்த கருத்து பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான ஒரு கருத்து. மேலும், பத்திரிகை ,தொலைக்காட்சிகள் மக்களுக்காக உண்மை செய்தியை வெளியிட வேண்டுமா? அல்லது இவர்கள் சுயநலத்திற்காக விளம்பரம் தேடும் காட்சிகளை வெளியிட வேண்டுமா? இங்கே பொதுநலமில்லை. இரண்டு பேருக்கும் சுயநலம் தான் உள்ளது.

 அதேபோல்தான் திமுக அரசு, தன்னுடைய சுயநல அரசியலுக்காக கவர்னர் ஆர்.என். ரவியை மாற்ற டி ஆர் பாலு தலைமையில், ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு கவர்னரை மாற்ற முடியாது என்ற திட்ட வட்டமாக தெரிவித்துவிட்டது. கவர்னர் எந்த தவறும் செய்யவில்லை எந்தப் பிரச்சினையும் செய்யவில்லை. தமிழக மக்களுக்கு, இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டின் நலன்களில் அக்கறை உள்ளவராக தான் இருக்கிறார். அந்த அளவிற்கு கூட இவர்கள் இல்லை.

 இவர்களுடைய சுயநலம், ஒரே வார்த்தையில் சொல்லி முடிக்க வேண்டும் என்றால், ஆட்சியை வைத்து வருமானம் பார்க்க வேண்டும். அதற்கு கவர்னர் இடையூறாக இருக்கிறார். தங்களுடன் ஒத்து போக மாட்டுகிறார். இதுதான் திமுக அரசின் சுயநல திராவிட மாடல். இதற்கு கவர்னர் ஒருகாலும் ஒத்து போக மாட்டார். அதனால் உங்களுடைய வாய்ச்சவடால் அரசியல் வித்தை கவர்னர் ஆர் என் ரவியிடம் பலிக்காது. அதனால் கவர்னருடன் அரசியல் போட்டி நடத்திக் கொண்டிருந்தால் உங்கள் ஆட்சிக்கு சட்டப்பிரிவு 356 பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்வது உங்களுடைய புத்திசாலித்தனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *