திமுக அரசின் சட்டமன்ற அதிகாரம் எவ்வளவு ? என்பதும,; அதேபோல் ஆளுநர் அதிகாரம் என்ன? என்பதும் தெரியாமல் ,ஆட்சி அதிகாரத்தில் பேசிக்கொண்டிருந்தால், அதற்கான பின் விளைவு இந்த அரசாங்கம் நிச்சயம் சந்திக்கும். நீங்கள் சொல்வது நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ,நாங்கள் சட்டமன்றத்தில் எதை வேண்டுமானாலும் தீர்மானிப்போம் என்று சொன்னாலும்,இந்த சட்டமன்றத்தின் நடவடிக்கைகள், ஆட்சியின் நடவடிக்கைகள், குறித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது .
இது தெரியாமல் பல ஊடகங்கள் விவாதமும், கருத்து சொல்லும் விதமும் நடுநிலையாக இல்லை. மேலும், தவறான கருத்தும் ஆளுக்கு ஒருவர் சொல்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் ஆளுநருக்கு என்று சில அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. தெரியாதா? தவிர,நீங்கள் சொல்வது போல் ,மக்கள் அதிகாரத்தில் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன் .ஆளுநரை நீங்கள் ஒரு பொம்மை. அவரை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற உங்களுடைய கருத்து தவறு. இதற்கு முன்னால் வந்த ஆளுநர்களுக்கு விவரம் தெரியாது.
மேலும், இது தெரியாமல், தமிழ்நாட்டு சீனியர் யு டியுப் பத்திரிக்கையாளர்கள், பெரிய சேனல்கள் என்று மார்தட்டிக் கொள்பவர்கள் வரை, கவர்னர் மரபு மீறி விட்டார் என்று தான் பேசினார்கள். அவருக்கு சட்டம் தெரியும். அவருடைய அதிகாரங்கம் என்ன என்று தெரிந்து தான் மோதுகிறார்.அது தெரியாமல் சட்டமன்றத்தை பட்டிமன்றமாக்கி விட்டார்கள். இதில் முக்குடைபட்டது திமுக அரசு. தன் வரையறைக்குள் தான் ஆளுநர் ரவி சரியான முறையில் செயல்படுகிறார் என்று நான் ஏற்கனவே இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில் ஆளுநர் அரசியல், சட்டம் நன்கு தெரிந்தவர். உளவுத்துறையில் 40 ஆண்டு காலம் பணியாற்றியவர். இதை எல்லாம் சுட்டிக்காட்டி இருக்கிறேன். அப்படிப்பட்டவர் தவறான முறையில் ஒருபோதும் அவருடைய அதிகாரத்தை பயன்படுத்த மாட்டார்.
மேலும், நீங்கள் சட்டமன்றத்தில் கூச்சல் இடுவது ,கோஷம் போடுவது, தீர்மானம் நிறைவேற்றுவது, இதற்கெல்லாம் ஆளுநர் அந்த சீட்டில் இருந்தாலும்,இல்லை என்றாலும், அதற்கான பின் விளைவை நிச்சயம் திமுக சந்தித்தே தீரும்.
மேலும், மக்கள் அதிகாரத்தில் பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறது. ஆளுநருடன் ஒத்து போனால், நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் உங்கள் ஒவ்வொருவருடைய ஆரம்ப முதல் ரெக்கார்டுகளை அவர் இந்நேரம் எடுத்துவிட்டு இருப்பார். தவிர, மக்கள் கொடுத்த அதிகாரத்தை சட்டமனறத்தில் தவறாக பயன்படுத்தும் போது, ,ஆளுநருக்கு அதைக் தட்டி கேட்கும் அதிகாரம் உள்ளது .என்பதை ஞாபகப்படுத்துகிறேன் .மேலும்
அவர் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரியாக இருந்தாலும,; இந்த ஒட்டுமொத்த மாநிலத்தின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டிய அதிகாரம் உள்ளவர்.மேலும், ஆளுநர் நீங்கள் சொல்வதை அவர் படிக்க வேண்டும், நீங்கள் சொல்வதை அவர் கேட்க வேண்டும் என்று அவருக்கு உத்தரவு போட முடியாது. உங்கள் செயல்பாடுகளை கவனிக்க வேண்டிய அதிகாரம் உள்ளவர்.அதனால்,
இங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்ன? மக்கள் பிரச்சனை என்ன? திமுக அரசின் செயல்பாடுகள் என்ன ?எல்லாவற்றையும் அவ்வப்போது மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை, வாரம் ஒரு முறை அனுப்பிக் கொண்டுதான் இருப்பார். அதனால், இனியாவது திமுக அரசு,,ஆளுநர் பேசிய பேச்சை சர்ச்சை ஆக்கி அரசியல் செய்து கொண்டிருப்பது, திமுகவிற்கு தான் பின்னடைவு.ஆளுநரை மாற்றும் வேலையிலும் தோல்விதான் மிஞ்சம்.
தவிர, மத்திய அரசு ,ஆளுநரை தேர்வு செய்து தான் தமிழ்நாட்டுக்கு நியமித்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் சட்டமன்றத்தில் எல்லோரும் சேர்ந்து கொண்டு அவமானப்படுத்தலாம் என்ற நோக்கத்தோடு செயல்பட்டது. திமுகவிற்கு துரதஷ்டவசமானது .மேலும், அதற்கான எதிர் வினையும், பின் விளைவும் திமுக நிச்சயம் சந்திக்கும். அதனால், தங்களை திருத்திக் கொண்டு மக்கள் பணியை தவிர, வேறொன்றில் கவனம் செலுத்தாமல் இருந்தால் ,ஏதோ சில காலம் வண்டி ஓடும். இல்லையென்றால் ஐந்து ஆண்டு காலம் ஓடுவது கடினம் தான்.
குறிப்பு :
இதுவரையில் வந்த ஆளுநர்களுக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் தான் தெரியும். அவர்களுக்கு தமிழ் தெரியாது. இவருக்கும் தமிழ் தெரியாது. இருப்பினும், இவர் கற்றுக் கொள்கிறார். இந்த ஒரே காரணம் தான், வந்த ஆளுநர்கள் நீங்கள் கொடுத்ததை அப்படியே படித்துவிட்டு போனார்கள்.
மேலும், இந்த விஷயத்தில் ஆளுநரை மத்திய அரசு பாராட்டியுள்ளது. இதற்கு மேல் அதிகம் சொல்ல விரும்பவில்லை. சொன்னால் அது ஒரு சார்பாக இருக்கும்.