திமுக எப்பொழுது ஆட்சிக்கு வந்தாலும், அதனுடைய அரசியல் வரலாற்றை எடுத்துப் பாருங்கள், சட்ட ஒழுங்கு பிரச்சனை ,போதைப்பொருள் மற்றும் மது சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகள், சமூக குற்ற வழக்குகள், மோசடி குற்ற வழக்குகள், அதிக அளவில் இருந்துள்ளது.
இது அதிமுகவைக் காட்டிலும், அதிக அளவில் இருக்கிறது. தற்போது இளைஞர்கள், மாணவர்கள் இந்த போதை பொருளை பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையை பாழாக்கிக் கொள்கிறார்கள். இந்த வருங்கால சந்ததிகளை நினைக்கும்போது, வேதனையாக தான் உள்ளது. அதுவும் கிராமங்களில் இந்த போதைப்பொருள் விற்பனை மறைமுகமாக நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது .
சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில், கடம்பத்தூர் ரயில்வே கேட் அருகில் ஒரு பெட்டி கடையில் குட்கா, பான் மசாலா பொருட்கள் (சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது பற்றி எந்த ஊடகங்களிலும் செய்தி வெளியாகவில்லைஎன்கிறார்கள் அப்பகுதி மக்கள். மேலும், அந்த சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து, வெளியில் வந்து விட்டதாக தகவல். தவிர,
தற்போதும் அங்கு விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். இதனால்,. இதை வாங்கி உபயோகப்படுத்தும் இளைஞர்கள், தங்கள் கைகளை பிளேடால் கிழித்துக் கொள்கிறார்களாம். இது தவிர, ரயில் நிலையங்களில் பயணம் செய்ய பெண்கள் காத்திருக்கும் போது, அவர்களை எல்லாம் ஒரு மாதிரியாக பார்க்கிறார்களாம். அதாவது சைக்கோ நிலையில் இருக்கிறார்களாம். மேலும்,பள்ளிக்குச் செல்லும் பெண் ஆசிரியர்கள், நமக்கு எதுக்கு வம்பு ,வந்த மா ,போணமா என்று இருக்க வேண்டும் என்று அச்சத்தில் இருக்கிறார்களாம்.
இப்படி இருக்கின்ற சூழ்நிலையில்,இந்த பகுதிகளில் காவல்துறை இரவு நேரங்களில் கூட, ரோந்து பணிகள் வருவதில்லையாம். மேலும்,காவல்துறை இதற்கு மறைமுக ஆதரவு இல்லாமல் இந்த வேலைகள் எதுவும் நடக்காது. ஒரு பகுதியில் எத்தனை அக்கியூஸுடு இருக்கிறான் என்பதை காவல்துறைக்கு தெரியாமல் இருக்குமா? அதே போல் எத்தனை சமூக ஆர்வலர்கள், சமூக நன்மைக்காக போராடும் அரசியல் கட்சியினர் இருப்பது காவல்துறைக்கு தெரியாமல் இருக்குமா? அதனால், இந்த திருடன் போலீஸ், விளையாட்டு தொடர்வதைவிட, சமூக நன்மை கருதி, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அரசு கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகளில் போதை பொருள் ஒழிப்பது பற்றி விளம்பரப்படுத்துவதை தொழிலாக இருப்பதை நிறுத்திக் கொண்டு, ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் காவல்துறையை செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.