19 47 ல் அம்பேத்காரல் இயற்றப்பட்ட சட்டங்கள் அக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு வேண்டுமானால், அது பொருந்தும். ஆனால் இக்காலத்தில் அந்த சட்டங்கள் காலாவதியான சட்டங்களாகத்தான் உள்ளது. அம்பேத்கர் இந்த சட்டத்தை 14 நாடுகளில் இருந்து காப்பி அடித்த ஒரு சட்டம். இதை தொடர்ந்து இந்தியா அதை வைத்துக்கொண்டு நல்லாட்சியை உழைக்கும் மக்களுக்கு கொடுக்க முடியவில்லை.
தற்போது இந்த சட்டம் ஊரை ஏமாற்றுபவர்களுக்கு சாதகமாக உள்ளது. ஆனால், உழைக்கும் மக்கள் முன்னுக்கு வர முடியவில்லை. இதற்கு என்ன முக்கிய காரணம்? இந்த பழைய ஓட்டை சட்டம் முக்கிய காரணம். இது சமூகத்தில் மட்டுமல்ல, பத்திரிக்கை துறையிலும் இந்த சட்டம் மாற்றப்பட வேண்டும். விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும். கால மாற்றங்களுக்கு ஏற்றவாறு சட்டத்தை மாற்றி அமைப்பது ஆட்சியாளர்களின் முக்கிய கடமை.
ஏனென்றால் 1947 இல் வாழ்ந்த மக்கள் அணிந்த சட்டை இப்போது யாரும் அணிவதில்லை. அப்போது சாப்பிட்ட உணவு, இப்போது யாரும் சாப்பிடவில்லை. அப்போது உழைத்த மக்கள், இப்போது யாரும் அந்த அளவிற்கு ஒழிப்பதில்லை. அந்த மக்களின் மனநிலை, இப்பொழுது வாழும் மக்களின் மனநிலையோடு ஒத்துப் போகாது .
அதனால், காலத்திற்கு ஏற்றவாறு சமூக மாற்றங்களும் நடைபெற்று வருகிறது. அதனால், இந்த மாற்றங்களுக்கு ஏற்றவாறு, சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அப்போது செல்போன் என்றால் தெரியாது. டிவி பார்த்ததில்லை. அந்த மக்களின் வாழ்க்கை முறை வேறு, தற்போதைய மக்களின் வாழ்க்கை முறை வேறு, அப்போது அரசியல் என்றால் உண்மை, வெளிப்படைத்தன்மை. இப்போது அரசியலென்றால் பொய் ஆகிவிட்ட நிலையில், அந்த மாற்றங்களை சட்டத்தின் அரசியலமைப்பால் மாற்றப்பட வேண்டும்.
அவையெல்லாம் மாற்ற படாததால் தான், நாட்டில் போலிகள் பெருகிவிட்டது. அதாவது போலி அரசியல் கட்சிகள், போலி அரசியல்வாதிகள், போலி பத்திரிகையாளர்கள் ,போலி பத்திரிகைகள், போலி வழக்கறிஞர்கள், எது எல்லாம் ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறதோ, அவை எல்லாம் அரசியலமைப்பு சட்டத்தால் திருத்தப்பட வேண்டும்.
இன்று, இங்கிலாந்து அரசின் தொலைக்காட்சியான பிபிசி பிரதமர் மோடிக்கு எதிராக ஒரு ஆவண படத்தை வெளியிட்டுள்ளது. இது இந்த தேசத்தின் 140 கோடி மக்கள் பிரதமர் மோடியின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு எதிரான ஒரு கருத்தை பரப்புகின்ற ஒரு செயல். மேலும், மோடி உலகத் தலைவர்களின் பட்டியலில் முதன்மையிடம் பெற்றவர். அவரையே விமர்சனம் செய்வது அந்நிய சக்திகள் நாட்டு மக்களிடையே குழப்பத்தை விளைவிக்கும் ஒரு வேலை தான் இது.
மேலும்,இந்த கார்ப்பரேட் நிறுவன பத்திரிகைகளுக்கு கொடுக்கப்படும் சலுகை, விளம்பரங்களால் , பொதுமக்கள்,உண்மைகள் தெரியாமல் போலிகள், அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறார்கள் .இதை மக்கள் அதிகாரம் தொடர்ந்து இக்கருத்தை வலியுறுத்தி வருகிறது .இதுபோன்ற இந்த கார்ப்பரேட் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளால், நாட்டில் ஊழல்வாதிகள், அந்நிய சக்திகள் தலையீடு, மறைமுகமாக ஊக்கு வைக்கிறது. இதையெல்லாம் தடுக்க வேண்டும் என்றால், பத்திரிகையின் சட்ட விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது .இது பற்றி மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதி வருகிறேன்.
என்னுடைய 35 ஆண்டுகால பத்திரிகைகளில், நான் பணியாற்றிய அனுபவங்கள், அதை ஆய்வு செய்ததில், இந்த விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மட்டுமே கொடுக்கப்படும் சலுகை, விளம்பரங்கள் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்படுகிறது. இது நாட்டின் மிகப் பெரிய தவறு.
இந்த பத்திரிகைகளின் விதிமுறைகள் என்ன? பத்திரிகைகளின் சுதந்திரம் என்று மறைமுகமாக ஊழல் வாதிகளை, அரசியலில் ஊக்கிவிப்பது, எப்படிப்பட்ட ரவுடி, பொரிக்கைகளையும் அரசியலில் பதவிகளை அடைவதற்கு பக்க வாத்தியம் வாசித்து உண்மை தெரியாமல், மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான், அவர்கள் அரசியல் என்றால் என்ன? அரசியல் கட்சி என்றால் என்ன? என்று தெரியாமல் ஆயிரம், ஐநூறு ரூபாய்க்கும், குவாட்டருக்கும்,,பிரியாணிக்கும் வாக்களிக்கும் மக்கள், எப்படி தகுதியானவர்களை தேர்வு செய்ய முடியும்?
அப்படி என்றால், அவர்களுடைய தகுதி தேர்வு என்பது தவறானது. இதை மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இது பற்றி தேர்தல் ஆணையம் இன்னும் எந்த ஒரு சரியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.மேலும், அரசியலில் ஊழலுக்கும், ஊழல்வாதிகளுக்கும் மறைமுகமாக முட்டுக்கொடுத்து, அவளுடைய பொய் பிரச்சாரங்களை விளம்பரப்படுத்துவது, கார்ப்பரேட் பத்திரிகைகளின் முக்கிய தவறு.
இதைவிட மிகப்பெரிய தவறு, மத்திய மாநில அரசுகளின் செய்தி துறை 50 ஆண்டு காலமாக செய்து வருகிறது. அது என்ன என்றால், கட்சி சார்ந்த பத்திரிகைகளுக்கும், வியாபார நோக்கம் கொண்ட பத்திரிகைகளுக்கும், ஜால்ரா பத்திரிகைகளுக்கும், கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணத்தை சலுகை, விளம்பரமாக கொடுத்து வருகிறது. இது தவிர, தினசரி பத்திரிகைகளுக்கு மட்டும் தான் அவை சொந்தம், பருவ இதழ் பத்திரிகைகளுக்கு இல்லை. இது போன்ற ஒரு தவறான விதிமுறை செய்தி துறையில் இருந்து வருகிறது. இவை அனைத்தும் மாற்றப்பட வேண்டும்.
மேலும், இன்றைய பத்திரிகையாளர்களில் பலர் உண்மை தெரியாமல் பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள், தமிழ்நாட்டில் உள்ள இந்த சங்கங்களுக்கும், அரசியல் கட்சிக்கும், எந்த வித்தியாசமும் இல்லை. இவர்கள், பத்திரிகைக்கான நோக்கங்கள் தெரியாமல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அதாவது இதையெல்லாம் ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், தங்கள் சுயநலத்திற்காக இவை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகை என்பது பொதுநலத்திற்கானது என்பதை மத்திய மாநில அரசின் செய்தித்துறை இன்று வரை அதை உணரவில்லை. அவர்களுக்கும், இந்த உண்மை தெரியவில்லை என்று தான் நினைக்கிறேன். ஆனால், தற்போது மத்திய அரசில் பணியாற்றும் செய்தித்துறை உயர் அதிகாரி இந்த உண்மையான கருத்துக்கு மதிப்பளித்து, அவர் உண்மையைஎன்னிடம் பகிர்ந்து கொண்டார். ஆனால், இதற்கு யார் மணி கட்டுவது? யார் இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது, இதுதான் முக்கிய கேள்வி? அதற்கான முயற்சியில் மக்கள் அதிகாரம் பத்திரிகை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மேலும் மத்திய மாநில அரசுகள்
சமூக நன்மைக்காக போராடும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எந்த சலுகை, விளம்பரங்களும் இதுவரை கொடுப்பதில்லை. இது செய்தி துறையின் மிகப்பெரிய தவறு. மேலும், இந்த சலுகை விளம்பரங்களுக்கு தகுதியான பத்திரிகைகள் என்று சர்குலேஷனை மையப்படுத்தி இருந்து வரும் ஒரு விதிமுறை, மிகப்பெரிய தவறு .
சர்குலேஷன் என்பது ஒருவருடைய பணத்தின் அல்லது பொருளாதாரத்தின் வலிமையை பொறுத்தது. ஆனால், அதனுடைய நோக்கம் தவறானது. அதாவது எந்த நோக்கத்திற்காக பத்திரிகைகள் இருக்க வேண்டுமோ, அதுதான் முக்கியமே தவிர, சர்குலேஷன் முக்கியமல்ல.
குப்பை செய்திகளை போட்டு, மக்களுக்கு பயனற்ற செய்திகளை போட்டு, மக்களுக்கு உண்மை தெரியாமல் இருக்க, வியாபார நோக்கத்திற்கான செய்திகளை போட்டு ,சர்குலேஷனை காட்டுவது,அந்த சர்குலேஷனும் மக்களின் வரிப்பணத்தில் காட்டுவது, இவையெல்லாம் இதுவரை சமூகத்திற்கு எதிரான தவறுகளை மத்திய மாநில அரசின் செய்தித்துறை செய்து வருகிறது .
அதனால், தொடர்ந்து தவறுகளை யாராலும், எந்த சமூகமும் ஏற்றுக் கொள்ளாது .அதைத்தான் இந்த பத்திரிகை சமூகம் சார்பில் மக்கள் அதிகாரம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், அதற்காகத்தான் இந்த சலுகை விளம்பரங்கள் கோடிக்கணக்கு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிகையில் மத்திய மாநில அரசுக்கு இக்கருத்தை தெரிவித்து வருகிறேன். இதற்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை .
மேலும், அரசியல் கட்சிகள் தேர்தலில் நிற்க வைத்து, வெற்றி பெற்று மக்களுக்கு சேவையாற்றுவதற்கு பதிலாக பல கோடிகளை ஊழல் செய்து சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் இந்த ஊழல் அரசியலுக்கும், ஊழல்வாதிகளுக்கும் மிகப்பெரிய ஜால்ராவாக இருப்பது இந்த கார்ப்பரேட் நிறுவன பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் .
தவிர, சிறிய பத்திரிகைகளில் அது பற்றி கருத்து சொல்ல கூட, தகுதி இல்லாத நூற்றுக்கு 99 சதவீதம் இருக்கிறது. அதனால், இந்த பத்திரிகை சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
கருத்து சுதந்திரம் பத்திரிகைகளுக்கு இருக்கிறது அது மறுக்க முடியாத உண்மை. ஆனால் சலுகை, விளம்பரங்கள் இந்த கார்ப்பரேட் நிறுவனம் பத்திரிகைகள் மட்டுமே சொந்தம் கொண்டாடுகிறது. இது ஒரு தலைப்பட்சமான தீர்ப்பு மட்டுமல்ல, ஒரு தவறான விதிமுறையும் கூட,அந்த விதிமுறை என்ன என்றால்? சர்குலேஷன் என்பது பணம் தான் சர்குலேஷன் ஆனால் பத்திரிகைக்கு முக்கியத்துவம் ஆனது கருத்து, கருத்தை விட சர்குலேஷனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ,இன்று நாட்டில் தவறான பிரச்சாரங்கள், தவறான கருத்துக்கள். அதனால், நாட்டில் அரசியல் என்பது ஒரு ஏமாற்று வேலை ஆகிவிட்டது.
மேலும் பத்திரிகை என்றால் கார்ப்பரேட் நிறுவன பத்திரிகை தான், தங்களை முதன்மை என்று சொல்லிக் கொண்டு விளம்பரப்படுத்திக் கொள்கிறது. இந்த பத்திரிகை பற்றி பல ஆண்டுகளாக ஆய்வு செய்து, என்னுடைய மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து எழுதி வருகிறேன் . அதனால், இந்த பத்திரிகைகளின் தரம் என்ன? என்பதை பிரித்து தான், அதற்கு சலுகை, விளம்பரங்கள் மத்திய மாநில அரசு கொடுக்கப்பட வேண்டும் .சமூக பாதுகாப்பு, முன்னேற்றம், வளர்ச்சி ,கருத்தியல், சுதந்திரம், மக்களின் உணர்வு போன்ற ஆரோக்கியமான கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் தான், மத்திய மாநில அரசுகளின் செய்தி துறை செயல்பட வேண்டும்.
ஆனால், இங்கு சர்குலேஷன் என்ற ஒரு தவறான விதிமுறையை 1947 இல் போடப்பட்ட சட்ட விதிமுறையை தொடர்ந்து செய்தி துறை நிர்வாகம் செய்கிறது. இது ஒரு தவறான சட்டம் மட்டுமல்ல, தவறான விதிமுறையும் கூட, பணம் இருந்தால் எத்தனை கோடி வேண்டுமானாலும், அச்சடிக்க முடியும். ஆனால், கருத்து சுதந்திரத்தை அல்லது உண்மையான செய்திகளை, தேவையான செய்திகளை வெளியிடாமல் ,வியாபார நோக்கத்திற்கும், அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகைகளின் வளர்ச்சிக்கும் என்று மக்களின் கோடிக்கணக்கான வரி பணத்தை செய்தித் துறையில் மத்திய மாநில அரசுகள் வீணடித்து வருகிறது .
இதை மக்கள் அதிகாரம் பத்திரிகையில் தொடர்ந்து இக்கருத்தை வெளியிட்டு வந்தும் கூட ,அதற்கான எந்த ஒரு ரியாக்ஷனும் இன்றி, மத்திய மாநில அரசு செய்தித்துறை நடவடிக்கை எடுக்காமல் மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடித்து வருகிறது. விரைவில் அது பற்றி சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் ஆர்டிஐ மூலம் பதில் கேட்க உள்ளனர். அதன் பிறகு, இது பற்றிய நீதிமன்றத்தின் கதவு மக்கள் அதிகாரம் சார்பில் நிச்சயம் தட்டப்படும் என்பதை மத்திய, மாநில அரசு செய்தித்துறைக்கு இந்த உண்மையை எடுத்துரைக்கிறேன் .
அதனால், சர்குலேஷன் என்பது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய காலத்தின் கட்டாயத்தில், இன்றைய செய்தித் துறையில் இருந்து வரும் மிகப்பெரிய தவறு. அதேபோல் தினசரி பத்திரிகைகளுக்கு மட்டுமே, இந்த சலுகை ,விளம்பரங்கள் என்று தீர்மானிக்கப்பட்டதும் மிகப்பெரிய தவறு. இவை அனைத்தும் சப்ஜெக்ட் என்ற ஒரு மைய புள்ளிக்குள் கொண்டு வந்து நிறுத்தப்பட வேண்டும். எந்த நோக்கத்திற்காக பத்திரிக்கை இருக்க வேண்டுமோ, அந்த நோக்கத்திற்கு எதிராக இருந்தால் அதற்கான சலுகை விளம்பரங்கள் கொடுக்கப்படுவது தவறு.
அவர்கள் கருத்து சொல்வதற்கு அல்லது வியாபாரம் நோக்கத்திற்கு, அவர்கள் கட்சி நோக்கத்திற்கு, எப்படி வேண்டுமானாலும், பத்திரிக்கை நடத்திக் கொள்ளலாம் .ஆனால், அரசின் சலுகை, விளம்பரங்கள் என்ற நேர்கோட்டிற்குள் வரும்போது, நிச்சயம் அதற்கான விதிமுறைகளை மத்திய மாநில அரசுகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
மேலும்,இதன் பின் விளைவு, நாட்டில் ஊழல் ,ரவுடிசம் ,அரசியல் ஊழல்வாதிகள் நல்லவர்களாக மக்களிடம் அங்கீகரிக்கப்படுகிறார்கள். இதையெல்லாம் தடுக்கப்பட வேண்டும் என்றால் பத்திரிகைத்துறை அவசியம் சீரமைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். இன்று நாட்டில் அங்கீகாரம் பெற்ற பத்திரிகைகளுக்கு ஆன்லைன் பத்திரிகைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அங்கீகாரம் இல்லாத வெப்சைட்டுகள், இணையதளங்களில் வெளிவரும் தவறான கருத்துக்களை அரசு கேள்வி கேட்க முடியாது. ஆனால் அவைகளை முடக்கம் செய்யலாம். ஆனால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகைகளின் செய்திகளை கேள்வி கேட்கும் உரிமை அரசுக்கு உள்ளது.
மேலும் இந்த தவறான விதிமுறைகளால், பத்திரிக்கை துறையில் கோடிக்கணக்கான மக்களின் வரிபனம் வீணடிக்கப்படுவதை மத்திய மாநில அரசுகள் தடுத்து, மக்கள் நலனுக்கு அதை கொண்டு செல்ல முடியும் என்பது சமூக நன்மைக்காக வெளிவரும் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்களின் முக்கிய கருத்து மற்றும் கோரிக்கை.