வழக்கறிஞர்கள் 75% பல அரசியல் கட்சிகளின் பின்னணியில்தான் இருக்கிறார்கள். அது ஜாதி ரீதியான கட்சியோ அல்லது அரசியல் கட்சியோ அல்லது மத ரீதியான கட்சியோ எதுவாக இருந்தாலும், அவர்கள் மறைமுகமாகவோ அல்லது நேர்முகமாகவோ அதில் ஈடுபட்டு இருக்கிறார்கள். சிலர் அந்தந்த அரசியல் கட்சிகளின் வழக்கறிஞர்களாக கூட இருக்கிறார்கள்.
ஆனால், அது விட முக்கியமானது .அவர்கள் சட்டத்தை பாதுகாத்து, குற்றத்தை நிரூபிப்பது தான் வழக்கறிஞரின் முக்கிய பணி. ஒருவர் தன் பணியில் சரியாக இருக்கிறாரா? என்பதுதான் கொலுஜியத்தின் முக்கிய வேலை. ஆனால் ,ஒவ்வொரு வழக்கறிஞருக்கும் தனிப்பட்ட சில கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் பிடித்திருக்கலாம் .ஆனால் அது முக்கியமல்ல, அவர் வழக்கறிஞர் தொழிலை நேர்மையாக, நீதியாக, மனசாட்சியுடன் செயல்படுத்தி வருகிறாரா? என்பது தான் முக்கியம் .
கோட்டு போட்டவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் இல்லை என்று சில ஆண்டுகளுக்கு முன்னே எழுதி இருக்கிறேன். சட்டம் நான்கு பயின்று இருக்க வேண்டும் .அதில் ஆழ்ந்த புலமை இருக்க வேண்டும். நீதியை நிலைநாட்டி இருக்க வேண்டும். இந்த தகுதிகள் மிக முக்கியமானது. ஒரு நீதிபதியாக நியமனம் செய்வதற்கு அவசியம் தேவையானவை.
ஆனால் இவர் அரசியல் கட்சிகளில் பணி செய்யக்கூடாது. அது மிகவும் முக்கியமான ஒன்று. எந்த ஒரு வழக்கறிஞரும் ,அரசியல் கட்சி பணியை செய்து கொண்டு, நீதிபதியாக தேர்வு செய்யக் கூடாது. அது தவறுதான். இவர்கள் ஒரு காலத்தில் இருந்திருக்கலாம், தற்போது என்ன நிலைமை? என்பது மட்டும் தான் மிக முக்கியமானது.
இதையெல்லாம் மீறி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்றால், இவர்கள் சட்டத்தின் மீது, இந்த சமூகத்தின் மீது, நீதியை காப்பாற்றுவதன் மூலம் இவர்களுடைய தனித் திறமையை ஆய்வு செய்துதான், இவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
ஆனால், அதை எதிர்த்து சில வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடையானை கொடுக்க வழக்கு தொடர்ந்தார்கள், அவருக்கு நீதிபதி என்ற ஒரு தகுதி இல்லை என்பது தான் அவர்களுடைய குற்றச்சாட்டு .இது தவறான கருத்து. நீதிபதிக்கு என்ன தேவை ?அது அவரிடம் இருக்கிறதா?
கொலிஜியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட நீதிபதி விக்டோரியாவை ஏன் குறிப்பிட்ட சில வழக்கறிஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள் ?இது தனிப்பட்ட காழ் புணர்ச்சியாக கூட இருக்கலாம். மேலும், ஒரு பக்கம் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு,கி.வீரமணி அறிக்கை எதிர்ப்பு, மறு பக்கம் விக்டோரியா நீதிபதியாக பதவி பிரமானம்.
தவிர,ஒரு வழக்கறிஞர் நீதிபதியாக நியமனம் செய்ய அவருக்குள்ள தகுதிகள் என்ன ?என்பதுதான் மிக முக்கியமானது. அவருடைய தனிப்பட்ட கருத்து முக்கியமானது அல்ல. மேலும்,வழக்கறிஞர்கள் முடிவு நீதிபதிகளை நியமனம் செய்ய முடியாது என்பதை இந்த சம்பவத்தின் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எடுத்துக்காட்டி இருக்கிறார்கள் என்பது உண்மை.