சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் வரலாற்று சிறப்புமிக்கவை. அது இன்று சிவஸ்தலமாக விளங்கி வருகிறது. அப்படி அமைந்தது தான் திருச்சி அருகே உள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில்.
இக் திருக்கோயிலின் வரலாறு என்னவென்றால், முற்பிறவியில் சிலந்தையாய் பிறந்து ,சிவபூஜை செய்து, சிவனை மகிழ்வித்த காரணத்தால், அடுத்த பிறவியில் மாசி சதயம் நட்சத்திரத்தில் திருச்சி திருவானைக்காவல் ஊரில், சோழ மன்னன் சுக தேவன் மற்றும் கமலாவதி தம்பதிக்கு வன்னிய குல சத்திரிய பேரரசர் சோழன் சக்கரவர்த்தி நாயனார் பிறந்தார்.
இவர் சோழ நாட்டை சிறப்பாக ஆண்டு 78க்கும் மேற்பட்ட மாட கோயில்களை அமைத்து, இன்று நாயன்மாராக போற்றப்படுகிறார். அவருக்கு திருச்சி திருவானைக்காவல் ஜம்முகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தனி சன்னதி உள்ளது.
அவர்கள் ஆன்மீகத்தையும், அரசியலையும் சிறப்பான முறையில் ஆட்சி செய்த,அவருடைய வரலாற்று பெருமைகளை பேரரசர் சோழன் சக்கரவர்த்தி நாயனார், பிறந்தநாளில் நினைவு கூறுவோம் .