விடையூர் ஏரியில் இருக்கும் அடர்ந்த வேலிக்காத்தான் மரக் காடுகளை அதன் மதிப்பிற்கு தக்கவாறு வெளிப்படையாக ஏலம் விட தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் கோரிக்கை.

செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

விடையூர் ஏரி சுமார் 450 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் அடர்ந்த வேலி காத்தான் மரங்கள் உள்ளது. இதை மதிப்பீடு செய்யும் வனத்துறை மாவட்ட அதிகாரி மிகவும் குறைந்த, தவறான மதிப்பீடு தொகையை நிர்ணயம் செய்கிறார். இது பற்றி நான் நேரடியாகவே அவரிடம் பேசினேன் .

இதுதான் எங்களுடைய வழிமுறை என்று தெரிவித்தார் . அந்த முறை தவறானதாக உள்ளது. இதை மாற்றி அமைக்க வேண்டும். மேலும் இன்று ஒரு டன் வேலிக்காத்தான் மரத்தின் விலை ரூபாய் 3000திலிருந்து 3500 வரை சாதாரண கடைகளிலே வாங்கப்படுகிறது. ஆனால், இவர் ரொம்ப மிகவும் குறைந்த மதிப்பீட்டுத் தொகையை (9000)  என்னிடம் தெரிவித்தார் .

இதற்கு நான் சொன்னேன், கம்பெனிகளில் இதைவிட அதிகமாக கூட விலையை கூடுதலாக இருக்கலாம். அப்படி வாங்குகின்ற கம்பெனிகள் யார் அதிக விலைக்கு தங்களுடைய விண்ணப்பத்தை கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு முதல் வரவேற்பு கொடுக்கலாம். இது தவிர ,நீங்கள் எப்படி இந்த மதிப்பீடு செய்கிறீர்கள்? இதைப்பற்றி கேட்டதற்கு, ஏனென்றால் அடர்ந்த காடாக உள்ளது ,உள்ளே சென்று மதிப்பிட முடியாது. அந்த அளவிற்கு மரங்கள் அடர்த்தியாக உள்ளது. இல்லை நாங்கள் உள்ளே செல்வோம் .அப்படி என்றார்.

நீங்கள் உள்ளே சென்றாலும், வெளியே நின்று பார்த்தாலும், ஒரு தோராய மதிப்பீட்டில் போட்டால் கூட, ஒரு ஏக்கருக்கு 10 டன் குறைந்த பட்சம் இன்று 450 ஏக்கருக்கு கிட்டத்தட்ட சுமார் 5000 டன் மரங்கள் கிடைக்கும். இதில் ஏலம் எடுப்பவர்கள் ,கூலி அது எல்லாம் இருக்கிறது. செலவுகள் இருக்கிறது. இவை எல்லாம் கூட அடி மரத்தை இதற்கெல்லாம் அப்படியே கொண்டு விற்பனை செய்து கொண்டாலும், ஏலம் எடுப்பவர்களுக்கு லாபம் இருக்கிறது.

 இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால், இதில் முதல் தவறு வனத்துறை அதிகாரியை நிர்ணயிக்கும் மதிப்பீட்டு தொகை .அடுத்தது இதை ஏலம் விடும் பொதுப்பணித்துறை அதிகாரி அடுத்த தவறு. இவர்கள் இது பற்றி கேட்டால் வனத்துறை என்ன மதிப்பீடு செய்கிறதோ, அதை வைத்து நாங்கள் ஏலம் விடுவோம் என்கிறார்கள். ஆனால், இவர்கள் இருவரும் சேர்ந்து இந்த கிராம மக்களுக்கு தெரியாமல், தற்போது நான் கேள்விப்பட்ட வரை அரசுக்கு ஒன்றரை லட்சம் கட்டிவிட்டு, மீதி பங்கு போட இது ஒரு ரகசிய ஏலமாக தெரிய வருகிறது .

அதனால்,விடையூர் கிராம மக்கள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு இத்தகவலை தெரிவிக்கின்றனர். இதில் எந்த முறை கேடும் நடக்காமல், உண்மையான, நேர்மையான முறையில் மரங்களை மதிப்பீடு செய்தால், குறைந்தபட்ச தொகையாக ஒன்றரை கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.

 ஆனால், இதை இடைத்தரகர்கள் பங்கு போட நினைக்கிறார்கள். இப்ப பிரச்சனையை தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கிஸ்க்கு நேரடி கண்காணிப்பில் ,எந்த தவறும் நடக்காமல், உண்மையான ,நேர்மையான, வெளிப்படையான ஏலத்தை நிர்ணயம் செய்து, அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதுதான் விடையூர் கிராம மக்களின் முக்கிய கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *