நாட்டில் நான்கு முக்கிய துறைகளில்! பொதுப்பணித்துறை ,வனத்துறை, கனிமவளத்துறை, வருவாய்த்துறை இந்த நான்கு துறைகளை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டம் தோறும் சமூக ஆர்வலர்கள் குழு நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரி, சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூகப் பத்திரிகையாளர்கள் இணைந்து, இந்த குழு அமைக்கப்பட வேண்டும். இது ஏன் அமைக்கப்பட வேண்டும்? என்றால் இன்று நாட்டில் இயற்கை வளங்களும், கனிம வளங்களும், அரசியல் கட்சியினரால் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது .அதை தடுப்பது மிகவும் அவசியம் .
மாவட்ட ஆட்சியர்! ஆட்சியாளர்களின் எடுபிடிகளாக இல்லாமல், இயற்கை வளங்களையும் ,கனிம வளங்களையும், பாதுகாக்கும் பாதுகாவலராக இருக்க வேண்டும் .மேலும், இன்றைய அரசியல் வியாபாரத்தில் மந்திரிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் , உள்ளாட்சி நிர்வாகிகள், இவர்களெல்லாம் கிராமத்தில் உள்ள கனிம வளங்களும், இயற்கை வளங்களும் தங்களுக்கு உரிமையானதாக நினைக்கிறார்கள். இதையெல்லாம் இவர்கள்தான் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் மக்கள் இவர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
(ஏரி கரையை உடைத்து சவுண்டு மணி எடுக்கும் அவலத்தை எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா? ஈக்காடு ஏரியில் நடக்கின்ற பொதுப்பணி துறையின் கடமையை பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளட்டும் இங்கு எத்தனை லோடு என்பது போர்டு வைக்கவில்லை. எத்தனை சதுர மீட்டர் என்ற எல்லையும் ஏற்படுத்தவில்லை. அப்படி என்றால் இவர்களே தான் கொள்ளையடிக்க முக்கிய காரணமாக இருக்கிறார்கள் என்பது பொதுமக்கள் புரிந்து கொள்ளுங்கள். )
அந்த அறிவு கூட இல்லாதவர்கள், அந்த பதவிக்கு தகுதியானவர்களாக இருக்க மாட்டார்கள். அதையும் மீறி இப்படிப்பட்ட கனிம வளங்களை, இயற்கை வளங்களை கொள்ளை அடித்தால், மக்கள் வாக்களித்தது அவர்களுக்கு வீணானது.
தவிர, கிராமங்களில் இந்த பிரச்சனைக்காக, சமூக நன்மைக்காக போராடுபவர்களும், பத்திரிகையாளர்களும், அரசியல் கட்சி சமூகவிரோதிகளுடன் போராட வேண்டி இருக்கிறது. இந்தப் போராட்டத்திற்கு முக்கிய காரணம் அதிகாரிகள். இவர்கள் ஒழுங்காக, நியாயமான முறையில் சட்டப்படி இதை எல்லாம் ஏலம் விடுவது அல்லது சட்டப்படி கனிம வளத்தை குத்தகை விடுவது, இதனால் அரசுக்கு வருவாய் ஏற்படலாம்.
ஆனால் வருவாய் இழப்புக்கு, இவர்களே முக்கிய காரணமாக இருக்கிறார்கள்.
அதனால் தான் ,இது போன்ற மாவட்டம் தோறும் சமூக ஆர்வலர்கள் குழு நியமிக்கப்பட வேண்டும். அதில் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் ஒருவரும் இருக்கக் கூடாது. இப்படி அரசு நியமிக்கவில்லை என்றாலும், இது போன்ற சில அமைப்புகள் இன்றும் செயல்படுகிறது. விரைவில் மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு இப்போதுதான் கொஞ்சம் எட்டி உள்ளது.
ஆனால், இதையெல்லாம் ரவுடியிசத்தை கையில் வைத்து அல்லது அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு மிரட்டி தான் இது போன்ற கொள்ளைகள் பெரும்பாலும் நடந்து வருகிறது. இதற்கு நீதிமன்றம் ஒரு காலம் துணை போக கூடாது. நீதிமன்றம் தான் இயற்கை வளங்களையும், கனிம வளத்திற்கும், அரசு சொத்துகளுக்கும் ஒரு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும், சமூக ஆர்வலர்கள் சார்பிலும், வைக்கின்ற முக்கிய கோரிக்கையாகும்.