தமிழக அரசின் செய்தித் துறை, கார்ப்பரேட் பத்திரிகைகளுடன் அரசியல் செய்து வருகிறது .இது ஏன்? என்பது பொதுமக்களுக்கு தெரியாது. இதைவிட கொடுமை, பத்திரிகை நடத்துபவர்களுக்கும் தெரியாது. இந்த உண்மைகள் ஒரு சிலருக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும் .மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால், நாங்கள் தான் பத்திரிகை. எங்களைத் தவிர வேறு சிறு பத்திரிகைகள் எல்லாம் வளரக்கூடாது.
நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் கேட்கிறோம். எங்களுக்கு தேவை சலுகை ,விளம்பரம் இது ஒரு ரகசிய அரசியல். இதனால் மக்களுக்கு வெளிப்படையான அரசியல் நிர்வாகம், ஆட்சி நிர்வாகம் போய் சேரவில்லை. மேலும், திட்டங்கள் பற்றி தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் படித்துவிட்டு மக்கள் ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியதுதான். தவிர,நடைமுறையில் அது எவ்வாறு செயல்படுத்தி இருக்கிறார்கள்? எப்படி செயல்படுத்துகிறார்கள்? இது பற்றி பொது மக்களுக்கு தெரியாது. இதனால்தான் இந்த பத்திரிக்கை துறை தற்போது விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறது.
இதற்கு யார் முக்கிய காரணம்? செய்தித்துறை அதிகாரிகள் மட்டுமே முக்கிய காரணம். மேலும் ,இந்த செய்தி துறை அதிகாரிகள் சொல்வதுதான் சட்டம் என்ற நிலைக்கு உருவாக்கி விட்டார்கள். இந்த லட்சணத்தில் சங்கம் என்ற பெயரில் ஆட்சியாளர்களுக்கு கூஜா தூக்கி, தனக்கு என்ன லாபம்? தங்கள் பத்திரிகைகளுக்கு என்ன லாபம்? இப்படி ஒரு சுயநலம். இதற்கெல்லாம் இந்த அரசு, மக்களுக்கே பொதுநலத்துடன் செயல்பாடு இல்லை. பத்திரிகைகளுக்கு இருக்குமா?
மேலும், இது பற்றி ஆர்டிஐயில் மக்கள் அதிகாரம் சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இதுவரை ஒரு பதிலும் தரவில்லை. கடந்த ஆட்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஒரு பதிலும் தரவில்லை. இதே போல், சில பத்திரிகை நண்பர்கள், எமது செய்தியாளர்கள் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும்,
இதுவரை எந்த பதிலும் தரவில்லை .அப்படி என்றால் செய்தித் துறை மிகப் பெரிய சுயநலத்துடன், ஒரு ஊழல் துறையாக செயல்பட்டு வருகிறது. இதை தற்போது வந்துள்ள இயக்குனர் மோகன் சரி செய்வாரா? அல்லது இதற்கு நீதிமன்றம் தான் தீர்வா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.