ஊடகத்துறை என்றாலே அது அச்சு ஊடகமாக இருந்தாலும் சரி, காட்சி ஊடகமாக இருந்தாலும் சரி, பல போராட்டங்கள் நிறைந்த ஒரு துறை. இதில் அவரவர் திறமைக்கும் ,தகுதிக்கும் ஏற்றவாறு தான் போட்டி போட முடியும். அது மட்டுமல்ல, வசதி வாய்ப்புகள், அரசியல் பின்னணி இவை அனைத்தும் இருந்தால் தான், ஊடகத்துறையில் வெற்றி பெற முடியும்.
இது கடும் சவால்களையும், போட்டிகளையும் உள்ள துறையாக இன்று மாறிவிட்டது .50 ஆண்டுகளுக்கு முன் சுமார் 4 (OR)5 பத்திரிகைகள் ஓரிரு தொலைக்காட்சிகள் இருக்கும். இப்போது தொலைக்காட்சிகளையும் எண்ண முடியவில்லை .பத்திரிகைகளும் என்ன முடியவில்லை .அந்த அளவிற்கு ஊடகத்தில் எண்ணிக்கை பெருகிவிட்டது .அதேபோல் செய்தியாளர்கள், பத்திரிகைகள், சங்கங்கள் எல்லாம் பெருகி இருக்கிறதே தவிர ,எந்த அடிப்படை நோக்கத்திற்கு செயலாற்ற வேண்டுமோ ,அதை தவிர்த்து திசை மாறி போய்க் கொண்டிருக்கிறது.
இது பற்றி மக்கள் அதிகாரம் பத்திரிகை தான் அதிக அளவில் செய்திகளை வெளியிட்டு, மத்திய மாநில அரசுக்கு எடுத்துரைக்கிறது. இருப்பினும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஊடகங்கள் அரசியல் லாபங்களுக்காகவும், தங்களின் வியாபாரம் நலன்களுக்காகவும், மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். ஊடகம் என்பது மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடிய ஒரு இடம் .அதற்கு செய்தியாளர்கள் பெண்களானாலும், ஆண்கள் ஆனாலும் சமூக குற்றவாளிகள் இடமும் ,அரசியல் கட்சி குற்றவாளிகள் இடமும் எதிர்ப்புகளை சந்தித்து போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் .
ஆனால், எந்த போராட்டமும் இல்லாமல், ஆட்சியையும் ,அரசியல் கட்சியையும் பாராட்டி, அவர்களுக்கு எந்த உண்மையும் தெரியாமல் மறைத்து, பத்திரிகை தொலைக்காட்சிகளை நடத்தி, அரசின் சலுகைகளும், விளம்பரங்களும் கோடிக்கணக்கில் சில பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் பெற்று வருகின்றன .இது பத்திரிகை விதிமுறையில் இருக்கின்ற தவறு. அந்த தவறு பற்றி பலமுறை மக்கள் அதிகாரம் பத்திரிகையில் வெளியிட்டு இருக்கிறேன். சர்குலேஷன் என்பது பணம் சார்ந்தது ,கருத்து சார்ந்தது அல்ல. இன்று கூட இந்த நிகழ்ச்சி ஒரு கருத்தியல் சார்ந்த நிகழ்ச்சியாக தான் மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் நடத்தி இருக்கிறது. அப்படி என்றால் கருத்துக்கு முக்கியத்துவம் உண்டு என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலமே அனைவருக்கும் இதை தெரிவிக்கிறேன்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கு ஊடகத்துறையில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி ஆய்வு நடத்திய போது, அதில் 73 சதவீதம் பெண்களுக்கு எதிராக இருப்பதாக தெரிவிக்கின்றனர். இந்த ஊடகத்துறை ஒரு ஆழமான கடல். இந்த கடலில் பயணிப்பது ஒரு போராட்ட குணம் உள்ளவர்களால் மட்டுமே எதிர்நீச்சல் போட முடியும். எதிர்நீச்சல் போடுபவர்கள் தான் இந்த பத்திரிகை துறைக்கு தகுதியானவர்கள். இதில் மக்கள் நலன் என்ற கோணத்தில் பத்திரிகை நடத்தும் போது அல்லது செய்தியாளர்களாக பணியாற்றும் போது பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். ஆனால் தன் சுயநலத்திற்காக அல்லது கூலிக்கு மாரடைக்கும் கூட்டமாக இருப்பவர்களுக்கு, எந்த பிரச்சனையும் இருக்காது. இந்த உண்மைகள் பலருக்கு தெரியாது .
அதேபோல், மத்திய மாநில அரசுகள் பத்திரிகையை தரம் பிரித்து அதற்கான சலுகை விளம்பரங்களை கொடுக்க வேண்டும். அப்போதுதான் அரசியல் என்பது மக்களுக்கானது என்பதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும். இங்கே பத்திரிகைக்குள் அரசியல் வந்துவிட்டால், ஏற்றத்தாழ்வுகளை வைத்து, பத்திரிகையின் தகுதி, பெருமை ,பெரிய, சிறிய என்ற நிலை வந்துவிட்டது. அந்த நிலை சர்குலேஷன் என்ற வியாபாரத்தை வைத்து அல்லது கணக்கிட்டை வைத்து இதனால் வரை, மத்திய மாநில செய்தி துறை பார்த்தது தவறு.
அதனால்தான் இன்று, அரசியலில், ஊழலும் ரவுடிசமும் பெருகியதற்கு இதுவும் மிக முக்கிய காரணம். இதை மாற்றாமல் இந்த பத்திரிகை துறையை சீர் செய்ய முடியாது. பத்திரிகை துறையை சீர் செய்தால் தான் போலிகளை களையெடுக்க முடியும். மேலும் ஊடகத்துறையில் பணியாற்றும் பெண்களைப் பற்றிய கருத்தரங்கு என்றாலும், இந்த உண்மைகள் அவசியம் அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். தவிர ,மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் உறுப்பினர் கௌதமி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .மேலும், இந்நிகழ்ச்சியில் சிறப்பு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தாம் தொடக்கத்தில் ஊடகத்துறையில் பணியாற்றியதை நினைவுகூர்ந்தார்.மேலும் தொடர்ந்து பேசிய அவர் காட்சி ஊடகத்தில் பெண்கள் அதிகம் உள்ளனர்.
அவர்களுக்கு சாதகமான சூழ்நிலை அங்கு இல்லை. ஆண்களுக்கு பல உரிமைகள் ஊடகத்துறையில் இருந்தாலும், பெண்களுக்கு இன்னும் அவை கிடைக்காத சூழலே நிலவுகிறது என்று குறிப்பிட்டார். மேலும் ,பல துறைகளைப் போல ஊடகத் துறையிலும் பெண்களுக்கு பல்வேறு விதமானசங்கடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதை எல்லாம் ஒதுக்கி தள்ளி முன்னேறிச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் .
மேலும், ஒரு ஆண் பாதிக்கப்பட்டால் அவருடைய குடும்பம் ஆதரவளிக்கிறது என்றும், ஒரு பெண் பாதிக்கப்பட்டால் தனது குடும்பத்தை அவரே பாதுகாக்க வேண்டிய உள்ளது என்றும் அவர் கூறினார். இந்த இரட்டை நிலை மாற வேண்டும் என்பது பெண்களின் விருப்பமாக உள்ளது என்று கூறிய கனிமொழி இத்தனை சவால்களையும் பெண்கள் எதிர்த்து சாதிக்க வேண்டி இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு உரையாற்றிய கௌதமி ,பெண்கள் குழந்தையாக இருக்கும்போது குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு மிக்கவர்களாக வளர்க்கப்பட்டு வந்தபோதிலும், அவர்கள் இந்த சமூகத்தில் தங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளும் உத்வேகத்துடன் இருக்கிறார்கள் என்றார். குழந்தைகளையும், குடும்பத்தையும் கவனிக்கும் மென்மை பெண்களிடம் இயல்பிலேயே உள்ள போதிலும், சவால்களை எதிர்கொள்ளும் போது, அவற்றை துணிச்சலுடன் எதிர்த்து நிற்கும் திறனும் பெண்களுக்கு இருக்கிறது என்று தெரிவித்தார் .பல நேரங்களில் பெண்கள் தைரியமிக்கவர்களாக உள்ளனர் .
மேலும் அதிகாரம் அளித்தல் என்பது யாரும் வழங்கி பெறுவது அல்ல என்று குறிப்பிட்ட அவர் பெண்களின் கனவுகளை நினைவாக்கும் உரிமையை யாரும் அழிக்க முடியாது ,அது அவர்களது உரிமை என்று குறிப்பிட்டார். முதலில் நம்மை புரிந்து கொண்டு நமக்கு என்ன தேவை என்பதை தெரிந்து கொண்டு அதனை அடைய முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட கௌதமி, சக மனிதர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் எம் அண்ணாதுரை, இந்த கருத்தரங்கில் பெண் ஊடகவியலாளர்கள் சிறந்த முறையில் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், இந்தியாவிலும் ,தமிழகத்தில் பெண்கள் பல சாதனைகள் படைத்த போதிலும், வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை இன்னும் எட்டா தனியாகவே உள்ளது என்றும் அவர் கூறினார். நீண்ட கால போராட்டத்திற்கு பின்னர் சொத்துரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும், நடைமுறையில் அது சாத்தியம் இல்லாமலே இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய முதன்மை தலைமை இயக்குனர் எஸ் வெங்கடேஸ்வரர் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறையில் உள்ள பெண்களுக்கான கருத்தரங்கை, பத்திரிகை தகவல் அலுவலகம் நடத்துவது பெருமைக்குரியது என்று குறிப்பிட்டார். மேலும் கொள்கை வகிப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் கனிமொழியின் அக்கறையை அவர் பாராட்டினார். தவிர, தகவல் அலுவலகத்தின் இணைய இயக்குனர் அருண்குமார் வரவேற்புரை ஆற்றினார். மேலும் பேச்சாளரும் மூத்த பத்திரிகையாளருமானுடைய இந்து நாளிதழின் ஆசிரியர் குழுமத் தலைவர் ரம்யா கண்ணன் பெண்கள் பிரச்சினைகளை வெளியிடுதல் நெறிமுறைகள் பரிசீலனை மற்றும் பாலின வன்முறை வெளியிடுதல் உணர்வு பூர்வ செய்திகளுக்கான உத்திகள் குறித்து உரையாற்றினார்.
மேலும், அகில இந்திய வானொலி இணைய துணை லீலா மீனாட்சி இந்திய ஊடகத்துறையை ஒழுங்குபடுத்துவதில் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் பங்கு பற்றி எடுத்துரைத்தார் .மூத்த பத்திரிகையாளர் ஜெனிபர் அருள் செய்தி அறைகளில் பெண்களின் தலைமைத்துவம் பெண்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் துன்புறுத்தல் என்ற தலைப்பில் தனது அனுபவங்களை எடுத்துரைத்தார் .தவிர பெண்களுக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள் ஊடகத்துறையில் பெண்களுக்கான டிஜிட்டல் பாதுகாப்பு சமூக ஊடக யுகத்தில் பாதுகாப்பாக இருத்தல் என்பது குறித்த விவாதத்தில் பெண் பத்திரிகையாளர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியை பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் விவாதத்தை நெறி ஆளுகை செய்தார்.