திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரால் பொதுமக்கள் படும் அவதிக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மாவட்டத்திலிருந்து மாற்ற திருவள்ளூர் மாவட்ட மக்கள் கோரிக்கை.

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஒரு மாவட்ட ஆட்சியர் எப்படி செயல்பட வேண்டும்? என்ற முறை தெரியாமல் அவருடைய பெயரில் (ஐஏஎஸ் என்கிற இந்திய ஆட்சிப் பணிக்கு மட்டும்) என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு தகுதியற்றவர்கள் .படித்து பட்டம் பெறுவது பெருமை அல்ல, அந்த பட்டத்திற்குரிய தகுதியை செயல்பாட்டில் பெறுவது தான் பெருமை.

 அந்த வகையில் திருவள்ளூர் கலெக்டர் ஆஃபின் ஜான் வர்கீஸ் அதற்கு தகுதியானவர் தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது .நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், விடையூர் கிராமத்தில் இருந்து சுமார் 20 பேர் கொண்ட பொதுமக்கள் கிராமத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து புகார் மனுவாக அளித்து கேட்டனர்.

அதற்கு ஒரு மாவட்ட ஆட்சியராக அவர் பதில் சொல்லவில்லை. முறை கேடுகளுக்கு ஆதரவாக பேசி உள்ளாரே என்று கிராமத்தில் படிக்காத மக்கள் கூட அவரைப் பற்றி வேதனைப்பட்டு கொண்டனர். ஒரு கிராமத்தில் என்ன நடக்கிறது? என்பது அந்த கிராம மக்களுக்கு தெளிவாக தெரியும். அப்படி இருக்கும்போது, கிராமத்தில் சுமார் நூற்றுக்கணக்கானவர்கள் அந்த புகார் மனுவில் கையெழுத்திட்டு, அவரிடம் எதற்கு கொடுத்தார்கள்? என்பதை கூட தெரிந்து கொள்ளாமல் ,நாங்கள் கருவேல மரத்தை சும்மா வெட்டிக் கொள்ள பஞ்சாயத்து தலைவர்களுக்கு அதிகாரம் கொடுத்துள்ளோம் என்கிறார்.

அப்போது கிராம மக்கள் நாங்களே வேண்டிக்கொள்கிறோம் என்றனர். அதற்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் நீங்களும் மனு கொடுங்கள் அப்படி இருந்தால் பார்க்கிறேன். மக்கள் ஓட்டு போட்டதால் தலைவர் அதிகாரம். இல்லையென்றால் ரோட்டில் போகிறவர்களில் ஒருவர். அப்படிப்பட்ட மக்களே புகார்களை கொடுக்கும்போது இவர் எப்படி அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு இருக்கிறார என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

 இந்த அதிகாரத்தை இவராக கொடுத்து விடுகிறார? இல்லை அரசியல் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறதா? மேலும், இந்த மரத்தினுடைய மதிப்பு கூட தெரியாமல் மாவட்ட ஆட்சியர் இருக்கிறார். நேற்று வனத்துறையை சேர்ந்த ஒரு மாவட்ட அதிகாரியை நான் சந்தித்து பேசினேன். அவர் சொல்கிறார். இந்த கருவேலம் மரம் மதிப்புமிக்க ஒன்று. இதை நீதிமன்றம் எடுக்க சொல்லி இருக்கிறது .

ஆனால், இதனுடைய மதிப்பு தெரியாமல் தான் அரசாங்கமும் இருக்கிறது. மாவட்ட ஆட்சியர்களும் இருக்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் இதை கரியாக்கி ஏற்றுமதி செய்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த மரத்தின் விலைமதிப்பு உள்ளது .இது பொது மக்களுக்கு தெரிந்து இருந்தும் கூட, இவர்களுக்கு தெரியாமல் இருப்பது அந்த வேலைக்கு இவர்கள் தகுதி தானா? என்பது கிராம மக்களின் முக்கிய கேள்வி?

 மேலும், நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் ஒன்று லட்சத்திற்கு ஏலம் விட்டு அந்த பணத்தை  D/D மூலம் வசூல் செய்துள்ளார்கள். இவர் சும்மா வெட்டிக்கொள்ள சொல்லி உள்ளோம் என்கிறார். இதே கருவேல மரம் கிராமத்தில் விஏஓ முன்னிலையில் 15 பெயரை வைத்துக் கொண்டு நீர்வளத்துறை அதிகாரியான ரமேஷ் ஏலம் விட்டுள்ளார்.

இப்படிப்பட்ட ஏலத்தில் சுமார் மூன்று கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக கிராமத்தில் பேசி வருகின்றனர். இது தவிர, இந்த ஏரிகளில் மண் எடுத்து விற்கத் திட்டம் போடப்பட்டுள்ளது. இந்த திட்டம் அதிமுக ஆட்சியில் ஆவது முறைப்படி அதற்கு கனிமவளத் துறையில் அனுமதி வாங்க வேண்டும். இந்த ஆட்சியில் மாவட்ட ஆட்சியர்களே, அந்த கிராமத்தில் உள்ள ஏரிகளில் மண்பாண்டம் செய்வதற்கும், விவசாயத்திற்கு எடுத்துக் கொள்வதற்கும் உத்தரவு வழங்கியிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

 இதை வைத்து இந்த மண்ணை கொள்ளை அடித்து செல்லும் ஒரு ஊழல் வேலை .இதை எதிர்க்கட்சிகளான அதிமுகவும், பிஜேபியும் இந்த ஊழல் முறைகேட்டை தடுக்க வேண்டும். இவர்கள் மண்பாண்டம் செய்வதற்கும், விவசாயத்திற்கும் ,ஒரு ஏரியை காலி செய்து விடுவார்களா ?அப்படி என்றால் இது ஒரு ஊழல் உள்ளடி வேலை, இதற்கா மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு? என்கிறார்கள்.

 எல்லாமே கிராமத்தில் ஆடு ,மாடு மேய்த்துக்கொண்டு ,எதுவும் தெரியாமல் இருப்பவர்களுக்கு தான் இவர்களுடைய சட்டம் செல்லும். அதனால், முறைப்படி கனிமவளத் துறையில் அனுமதியில்லாமல் மண் எடுப்பது கிராம மக்களை ஏமாற்றுவது மட்டுமல்ல, நாட்டில் மிகப்பெரிய ஊழலுக்கு அஸ்திவாரமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதைப் பற்றி நீதிமன்றம், அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் முக்கிய கருத்து.மேலும்,

ஒரு விவசாயி கிராமத்தில் உள்ள மண்ணை எடுத்து என்ன விவசாயம் செய்துள்ளார்கள் ?இதுவரையில் தமிழ்நாட்டில் எத்தனை விவசாயிகள் ஏரி மண்ணை எடுத்து என்ன விவசாயம் செய்திருக்கிறார்கள் ?அந்த பட்டியல் மாவட்ட ஆட்சியர்கள் கொடுப்பார்களா? எதற்காக இந்த மண் எடுத்து ஏரிகளை தூர்வார்கிறார்கள்? எதற்காக மண்ணை வெளியில் எடுக்க வேண்டும்? வெளியில் எடுப்பது விற்பனைக்கா? அல்லது தூர் வார்தற்கா? கிராம பொது மக்களுக்கு இந்த உண்மை புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *