தமிழ் நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள், கடந்த காலங்களில் எப்படி பணியாற்றினார்கள்? என்பதை இப்போது உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் தெரிந்து கொள்வார்களா?

சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு அரசு செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஐஏஎஸ் படிப்பது ஒரு கடினமான பணி தான். அதிலும் வெற்றி பெறுவது அவர்களுடைய பூர்வ புண்ணியம். இதில் டைரக்ட் ஐ ஏ எஸ் மற்றும் கன் பேஃட் ஐஏஎஸ் இவர்கள் செய்ய வேண்டிய பணி ( இந்திய அரசாங்கம் இந்திய ஆட்சிப் பணி மட்டும் ,Indian administrative service) பொதுமக்களின் பிரச்சனைகள், அரசு திட்டங்கள், மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான், இவர்களுடைய முக்கிய பணி .

ஆனால், அரசியல்வாதிகளுக்கோ ,எம்எல்ஏ, எம்பி, மந்திரிகளுக்கோ, அவர்கள் சொல்வதை கேட்டு அப்படியே செய்வதற்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் தேவையில்லை. அதற்கு ஒரு கிளர்க் போதும் ,அவரே அந்த வேலையை செய்து விடுவார். அதனால், அவர்களுடைய முக்கிய பொறுப்புமிக்க அதிகாரத்தை அரசாங்கம் இவர்களுக்கு வழங்கி இருக்கிறது. அதனால் தான், இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திற்கும், இவர்களை மாற்றம் செய்வார்கள்.தேவைப்பட்டால் மத்திய அரசின் நிர்வாகத்திற்கும் எடுத்துக் கொள்வார்கள்.

இப்படிப்பட்ட ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவர்கள், கடந்த காலங்களில் எப்படி செயல்பட்டார்கள்? என்பதை மறக்க முடியாத சில ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல்பாட்டை மனசாட்சியுடன் தெரிவிக்கிறேன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த சந்திரமோகன் இன்றும், என்னால் அவரை மறக்க முடியவில்லை. அவர் ஒரு மாவட்ட ஆட்சியர் எப்படி பணியாற்ற வேண்டும்? என்பதற்கு ஒரு முன் உதாரணமாக இருந்தார். அதற்கு நடந்த ஒரு சம்பவத்தையும் இதில் குறிப்பிடுகிறேன்.

அது என்ன? என்றால், நான் அப்போது ஒரு செய்தியாளர். பத்திரிகை கூட நடத்தவில்லை. செய்தியாளராக இருந்தாலும், என்னுடைய கடமையில் நான் சரியாக பணியாற்றினேன். இப்போதும் பத்திரிகை நடத்தும் போதும், அந்த கடமையை தவறாமல் செய்து கொண்டிருக்கிறேன். அந்த மன திருப்தி எனக்கு இருக்கிறது.

ஒரு தகுதியான போலீஸ் அல்லது இன்ஸ்பெக்டர் அவர்கள் கண் முன் ஒரு தவறு நடந்தால், நிச்சயம் யாராக இருந்தாலும் அவர்களை நிற்க வைத்து கேள்வி கேட்பார்கள். அது அவர்களுடைய கடமை. இது தகுதியான காவல்துறையினருக்கு, அவர்களுடைய மனசாட்சி படி சிலர் வேலை செய்கிறார்கள்.

 அதே போல் தான் நானும், என்னுடைய கிராமத்தில் நடந்த ஒரு ஊழல் பிரச்சனையை கொண்டு சென்றேன். அதே ஊழல் பிரச்சனையை, அப்போதய எம்எல்ஏ ரவிராஜ் கொண்டு வந்து அவரிடம் நீட்டினார். அந்த பைலை தூக்கி எறிந்தார். நான் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்தார். இதுதான் அவருடைய நேர்மையான இந்திய ஆட்சிப் பணி எப்படி? என்பது இப்போதைய மாவட்ட ஆட்சியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

 தற்போது, பொதுமக்கள் கொடுக்கின்ற புகார்கள் மீது கூட நடவடிக்கை எடுப்பதில்லை. இதற்கு இவர்கள் அரசியல் பின்னணியில் நின்று கொண்டு அவர்களுக்கு பி ஏ வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கிஸ்க்கு, உங்கள் மந்திரி சபைகளில் உள்ள மந்திரிக்கு பி ஏ போஸ்டிங் கொடுங்கள். அதுதான் அவருக்கு பொருத்தமானது. இது போன்ற மாவட்ட ஆட்சியரை திருவள்ளூர் மாவட்டத்தில் வைத்திருப்பது, உங்கள் ஆட்சிக்கு தான் அது !அவ பெயரை மக்களிடத்தில் ஏற்படுத்தும், அதில் மாற்றுக் கருத்து இல்லை .மேலும், 

திருவள்ளூர் மாவட்டம் மற்ற மாவட்டங்களை விட, அதிகமான அரசியல் ஆதிக்கம் உள்ள மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு நீங்கள், எந்த மாவட்ட ஆட்சியரை போட்டாலும், பொதுநலத்தில் அக்கறை உள்ள ஒரு மாவட்ட ஆட்சியரை தேர்வு செய்து நியமனம் செய்தால், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்சிக்கு நற்பெயரை ஏற்படுத்தலாம். சொல்வதுதான் எங்கள் கடமை. இதனால், எந்த சுயநலமும் இல்லை என்பதை தமிழக முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும் .

மேலும், நீங்கள் உளவுத்துறை ரிப்போர்ட் எப்படி இருக்கிறது? என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவிர, திருவள்ளூர் மாவட்டத்திற்கு எத்தனையோ மாவட்ட ஆட்சியர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் பத்திரிகையாளர்களை, பத்திரிகைகளை மதித்து ஆலோசனை கேட்பார்கள். எத்தனையோ விஷயங்கள் அவர்களுக்கு புதிராக இருக்கும் போது, நாங்கள் சொன்ன கருத்துக்கள் வைத்து, நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் நாங்கள் வாரம் ஒரு முறை பிரஸ்மீட் வையுங்கள். அப்படித்தான் இருந்தது. பிறகு, மாதமாவது ஒருமுறை பிரஸ்மீட் வையுங்கள் என்ற நிலைமையில் இருந்தது. இப்போது எதுவும் இல்லை. இவர்கள் மாவட்டத்தில் என்ன செய்தார்கள்? இவர்களுடைய செயல்பாடு என்ன? என்பதை பற்றி எல்லாம் ஆய்வு கட்டுரை எழுதுவோம். அவையெல்லாம் இப்போதைய செய்தியாளர்களுக்கு என்ன என்று கூட தெரியாது.

அது மட்டுமல்ல, சந்திரமோகன் கலெக்டராக இருக்கும்போது, நான் ராஜ் டிவியில் செய்தியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன்.தினமும் காலையில் இருந்து இரவுக்குள் எப்படியும் ஆறு, ஏழு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவேன் .இப்போது உள்ள மாவட்ட ஆட்சியர்கள் தொலைபேசி கூட எடுப்பதில்லை.

அந்த அளவிற்கு அவர்களுடைய இந்திய ஆட்சிப் பணியில், வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? அப்படி இருந்தால், மக்கள் பிரச்சனைகள் ஒவ்வொரு மாவட்டத்திலும், எவ்வாறு தீர்த்து இருக்கிறார்கள்? எத்தனை புகார்கள்? ,அந்த புகாரின் மீது இவர்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? என்பதை தமிழக முதல்வராகிய நீங்கள் தான் கேட்க வேண்டும். ஏனென்றால், இப்போது தான் பிரஸ்மீட் என்பதே கிடையாது.

அந்தப் பிரஸ்மீட்டில் உட்காரக்கூடிய செய்தியாளர்களுக்கும் என்ன கேள்வி கேட்க வேண்டும்? என்று கூட இப்போது தெரியாது. அதனால் ,அதுவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒரு சவுகரியம் தான். மேலும், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு அடிமையாகாத ஒரு மாவட்ட ஆட்சியரை கொடுத்தால் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *