1260 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்தில், கட்டப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காந்தியின் பயணம் என்ற புத்தகத்தை அவருக்கு பரிசாக கொடுத்தார். மேலும் இந்த விமான நிலையத்தை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி
சென்னையில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில், இந்த விமான நிலையம் ஆண்டுதோறும் 3.5 ஐந்து கோடி பயணிகள் இதை பயன்படுத்தி நன்மை அடைய முடியும்.
மேலும் தமிழ் கலாச்சாரத்தின் அடையாளங்கள் வரையப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் ,பயணிகளின் வசதிக்காக என்னென்ன செய்யப்பட்டுள்ளது என்பதை புகைப்படங்கள் வாயிலாக பிரதமர் மோடி பார்வையிட்டார்.
தவிர ,விமான நிலையத்தை திறந்து வைத்த பிறகு அங்கிருந்து கார் மூலம் சென்ட்ரல் வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு பாஜகவினர் கொடுத்துள்ளனர். மேலும்,
ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.,