பஞ்சாயத்துக்களில் வீட்டு வரி, தொழில் வரி மற்றும் வணிகவரி போட்டு இருப்பதில் மிகப்பெரிய ஊழலா? இது பற்றி தலைமை ஊராட்சிகள் செயலாளர் அமுதா தமிழகம் முழுதும் ஆய்வு செய்வாரா?

ட்ரெண்டிங் தமிழ்நாடு முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில் இது நாள் வரை பஞ்சாயத்து கணக்குகள் ஏடுகளில் இருந்தது. தற்போது கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இருப்பினும் அது இன்னும் முழுமை அடையவில்லை.

இந்த நிலையில் தற்போது வீட்டு வரி, தொழில் வரி மற்றும் வணிகவரி போன்றவற்றில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. அதாவது ஒருவருக்கு வீடு 800 ஸ்கொயர் பீட் என்றால், பஞ்சாயத்து விதிமுறைப்படி ஒரு ஸ்கொயர் பிட்டுக்கு எவ்வளவு விதிக்கப்பட்டிருக்கிறதோ அவருக்கு அதற்கான தொகையை அந்த பஞ்சாயத்தில் வசூல் செய்ய வேண்டும்.

 அதற்கு பதிலாக 300ரூபாய், 200ரூபாய், 100ரூபாய் என்று என்று வரி போட்டு வசூல் செய்திருக்கிறார்கள். அப்படி என்றால், மீதித் தொகை யாருக்கு ?எங்கே செல்கிறது? அடுத்தது, திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகருக்கு அருகில் உள்ள கேட்டர்பில்லர் என்ற கம்பெனிக்கு வரியே 485 ரூபாய் என்று போட்டு வரி வசூல் செய்கிறார்கள்.

 அப்படி என்றால், அது எத்தனை ஏக்கர்? அதனுடைய பரப்பளவிற்கு எவ்வளவு? எவ்வளவு பணம் கட்ட வேண்டும்? இவையெல்லாம் யாருடைய பாக்கெட்டுக்கு இதுவரை போனது? மேலும், இது பற்றி நிருபர் லீமா கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் அவர் வீடு 1108 ஸ்கொயர் பீட், வெங்கத்தூர் பஞ்சாயத்தில் உள்ளது.

 ஆனால் ,அவருக்கு 300 ரூபாய் வரி போடுகிறார்கள். இதனால் கோடிக்கணக்கில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இது அரசாங்கத்தை ஏமாற்றுகிற வேலையா? இதில் பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி செயலாளர் மற்றும் பஞ்சாயத்து B D O க்கள் சேர்ந்து நடத்தும் கூட்டணி கொள்ளையா? இந்த கொள்ளை திருவள்ளூர் மாவட்டம் தானா? அல்லது தமிழகம் முழுவதும் தானா? இது பற்றி தலைமை ஊராட்சிகள் செயலாளர் அமுதா நடவடிக்கை எடுப்பாரா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *