கோயில் நிலத்தை பட்டா போட்டு விற்பது இனி செல்லாது – உயர் நீதிமன்ற தீர்ப்பு. அதேபோல் பொது இடத்தை ஆக்கிரமித்து கடவுளின் பெயரால் ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்கள் நீதிமன்றம் ஒருபோதும் அதை ஏற்க முடியாது – உயர் நீதிமன்ற தீர்ப்பு.

செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

கோயில் அர்ச்சகர்கள் பலர் கோயில் நிலத்தை பட்டா போட்டு அனுபவித்து வந்திருக்கிறார்கள் .அதற்கு அரசாங்க தரப்பில் மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி அளித்திருக்கிறார்கள். இந்த சம்பவம் மதுரை அழகர் கோயிலில் பட்டராக பணிபுரிந்த லக்ஷ்மணா என்பவர் கோயிலுக்கு சொந்தமான 183 ஏக்கர் நிலத்தை தன் பெயருக்கு பட்டா பெயர் மாற்றி விற்பனை செய்துள்ளார் .இதை மாவட்ட ஆட்சியரும் நியாயமானது தான் என்று உறுதி செய்தார்.

ஆனால், கோயில் நிர்வாகம் தரப்பில் இது சென்னையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது லக்ஷ்மணப்பட்டர் இறந்துவிட்டார். இருப்பினும், இந்த வழக்கில் விசாரணை செய்து தீர்ப்பு அளித்த நீதிபதி எம். எஸ். சுப்பிரமணியன் கோயில் நிலத்தை அர்ச்சகர்களுக்கு சேவை செய்ய கொடுக்கப்பட்டதை ஒழிய, அவர்கள் பெயருக்கு பட்டா பெயர் மாற்றி ,விற்பனை செய்ய அல்ல என்று தீர்ப்பளித்தார்.

அதனால், கோயில் நிலம் எத்தனை ஆண்டுகள் அனுபவித்தாலும், அதை தன் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து அனுபவித்திருந்தாலும், இனி யாரும் கோயில் நிலத்தை விற்பனை செய்ய முடியாது. மேலும், பல கோயில் நிர்வாகிகள், தாக்கார்கள், கோயில் நிலத்தை குத்தகை எடுத்து அனுபவித்து வருபவர்கள், ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்கள், அனைவருமே இந்த சட்டத்துக்குள் வந்து விடுகிறார்கள். .அதனால், அப்படி கோயில் நிலத்தை வாங்குபவர்கள் ஏமாந்து போவார்கள்.

அதேபோல் பொது இடத்தை ஆக்கிரமித்து, புதிய கோயில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்கவில்லை. கடவுளின் பெயரால் ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்கள், நீதிமன்றத்தின் கண்களை மறைக்க முடியாது என்று நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அருள்மிகு மாரியம்மன் கோவில் பொது சாலையை ஆக்கிரமித்து கட்டுமானம் நடைபெற்றுள்ளது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்பாயி என்பவர் நாமக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது கோயிலுக்கு எதிராக உத்தரவு வந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கோவில் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் கோயில் நிர்வாகம் போது பாதையில் ஆக்கிரமித்து கட்டுமானங்களை கட்டியுள்ளது என்பது ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. .

மேலும், நீதிபதி பொது இடங்களில் கடவுளின் பெயரால் ஆக்கிரமிப்பு செய்தால், நீதிமன்றம் ஒருபோதும் அதை ஏற்க முடியாது என்று வழக்கை முடித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *