தமிழக அரசின் செய்தி துறையில் நடக்கின்ற ஊழலும், மோசடிகளும் அரசியலை மையப்படுத்தி தான் நடக்கிறது. பத்திரிகை துறையில் அரசியல் உள்ளே வரக்கூடாது. அரசியல் உள்ளே வந்தால் ,அது பத்திரிகையாக இருக்க முடியாது.
(செய்தித் துறையில் மிகப்பெரிய ஊழல்! மோசடிகள் எப்படி நடக்கிறது ?)
ஆனால் இதற்குள் அரசியல் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது .இந்த விவகாரம் பொதுமக்களுக்கும் தெரியாது. அடிமட்டத்தில் உள்ள பத்திரிகை நடத்துபவர்களுக்கும் ,பத்திரிகை செய்தியாளர்களுக்கும் தெரியாது .இங்கே அரசியல் என்ன முடிவு எடுக்கிறதோ, அதன்படி தான் எந்தெந்த பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் என்று தீர்மானிக்கப்படுகிறது. அது இவர்கள் சொல்லும் விதிகள் எல்லாம், எந்த பத்திரிகைகளுக்கு பொருந்துகிறது? எதற்கு பொருந்தவில்லை ?என்பதெல்லாம் கிடையாது. அவர்களுக்கு தேவையான பத்திரிகைகளுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு எந்த விதிமுறையும் கிடையாது.
மேலும், மக்களின் வரிபணம் குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் கோடி கணக்கில் இந்த விளம்பரங்கள் மூலம் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. மக்கள் அதிகாரம் பத்திரிகை தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், இதுவரை எந்த பயனும் அதற்கு இல்லை. தற்போது இரண்டு ஆண்டு நல்ஆட்சி, நாடே சாட்சி என்ற ஒரு பொய் விளம்பரத்தை திமுக அரசு கையில் எடுத்துள்ளது. இதற்காக குறிப்பிட்டு சில பத்திரிகைகளுக்கு மட்டும் விளம்பரங்கள் கொடுத்துள்ளது. அதன் விவரம்,
தினத்தந்தி – 52,33,800 ,டெக்கான் கிரானிக்கல் – 28,78,366,தினகரன் 51,51,432 ,தினமணி – 25,74,000 ,தி இந்து (இங்கிலீஷ்) – 99,59,654 ,இந்து தமிழ் – 26,56,368 ,இந்துஸ்தான் டைம்ஸ் – 34,49,160 இந்தியன் எக்ஸ்பிரஸ் – 1,58,35, 248 ,மாலை மலர் – 11, 08,538 ,மணிச்சுடர் – 1,02,960 ,மலையாள மனோரமா – 35,00,000 ,மாத்ரூபூமி – 35,00,000 முரசொலி – 28,31,400, தமிழ் முரசு – 22,27,368,
தீக்கதிர் – 1,56,264, டைம்ஸ் ஆப் இந்தியா – 1, 33, 50,480,
விடுதலை 1, 53, 406 ,ஆக மொத்தம் – 7,55,41,264 .
இதுவும் இந்த கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டும் தான் என்று அரசியல் சாசனம் எழுதி வைக்கப்பட்டுள்ளதா? இது தவிர, தினசரி பத்திரிகைகளுக்கு மட்டும் தான் இந்த பொய்யை உண்மையான திராவிட மாடலாக கொண்டு செல்லும் திறமை இருக்கிறதா?இது அரசியல் அதிகாரத்தின் உச்சம். மேலும்,
பொதுமக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் .கடந்த அதிமுக ஆட்சியில் வெற்றி நடை போடுகிறது தமிழகமே என்ற பொய்யை, உண்மை போல் சொல்லிய பத்திரிகைகளின் விளம்பரத்தை பார்த்து, அதிமுகவிற்கு மக்கள் வாக்களிக்கவில்லை. தோற்கடித்தார்கள். ஆனால் மக்களின் வரிப்பணம் தான் 2000 கோடிக்கு மேல் வீணடித்தார்கள். இப்போதும் அதே நிலைதான். அப்போது திமுக வின் வழக்கறிஞர் ஆர் எஸ் பாரதி இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். தற்போது இதை எதிர்த்து எந்த அரசியல் கட்சி வழக்கு தொடரும்? என்று தெரியவில்லை.
மேலும், இதை உயர் நீதிமன்றம் பொதுநல வழக்காக கூட தானே ஏற்று வழக்கு விசாரணை தொடரலாம். அந்த அளவிற்கு மக்களின் வரி பணம் வீணடிக்கப்படுகிறது. தவிர,
பத்திரிகைக்கு வெளியில் இருக்க வேண்டிய அரசியல், பத்திரிகைக்குள் அரசியல் வந்துவிட்டது. இது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது. கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. பத்திரிகை மற்றும் பத்திரிகை நலன்களுக்கு எதிரானது. குறிப்பாக, சமூக நலன் சார்ந்த பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இது மிகவும் எதிரான ஒன்று. இது பொதுமக்களுக்கும் எதிரானது. உண்மையான செய்திகள் பொதுமக்களுக்கு செல்லவில்லை. அதனால், அரசு நிர்வாகத்தில் வெளிப்படத் தன்மை இல்லாமல் போனது.
இது தவிர, இன்றைய பத்திரிகைகளுக்கு அரசியல் என்ன முடிவு எடுக்கிறதோ, அதன்படி தான் அந்தந்த பத்திரிகைகளுக்கு சலுகை விளம்பரங்கள் தீர்மானிக்கப்படுகிறது. இதுவும் தவறு. அதேபோல் சர்குலேஷன் அடிப்படையில் இந்த பத்திரிகைகளுக்கு சலுகை விளம்பரங்கள் கொடுப்பது தவறு. மேலும், எந்த நோக்கத்திற்காக பத்திரிக்கை இருக்க வேண்டுமோ, அந்த நோக்கத்தை தவிர்த்து, நீ எத்தனை கோடி சர்குலேஷன் அடித்தாலும், அது வீணானது. இதை நீதிமன்றம் புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்தது வியாபார நோக்கம் கொண்ட பத்திரிகைகளின் சர்குலேஷன் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அதேபோல், அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகைகளின் சர்குலேஷன் கணக்கெடுத்து, இவைகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்கள் கொடுப்பது ஒரு தவறான விதிமுறை. மேலும், மக்கள் நலன் சார்ந்த பத்திரிகைகள், சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள் இதில் தினசரி, வார ,மாத என்ற கணக்கு இல்லாமல், அந்த பத்திரிகைகளுக்கு மட்டும் தான், சலுகை விளம்பரங்கள் கொடுக்க வேண்டும், அதேபோல், அந்த பத்திரிகையின் செய்தியாளர்களுக்கும், இந்த சலுகை விளம்பரங்கள் கொடுக்கப்பட வேண்டும். இதுதான் உண்மையான பத்திரிகை சுதந்திரம் ,இதுதான் உண்மையான கருத்து சுதந்திரம், எல்லாம் மக்கள் நலன் சார்ந்ததுக்கு மட்டும்தான், இந்த பத்திரிகை சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
தவிர ,இவர்கள் சொல்லும் எல்லா பொய்களையும் திரித்து, மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு மக்களுடைய வரி பணமே, அதற்கு பக்க பலமாக இருப்பது, இந்த பத்திரிகை மோசடி, ஊழல், இதில் தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும் சாமானியர்கள் நடத்தும் பத்திரிகைகளுக்கு, எந்த சலுகை, விளம்பரங்களும் கொடுக்கப்படுவதில்லை. அது உண்மையை மக்களிடம் கொண்டு சென்றாலும், அதற்கான அங்கீகாரம் அரசு கொடுப்பதில்லை.
இது தவிர, இன்றைய சலுகை, விளம்பரங்கள் அரசு கொடுக்கும் பத்திரிகைகளுக்கு அதன் கொள்கை முடிவு, எதன் அடிப்படையில் இந்த கொள்கை முடிவு அரசாங்கம் எடுக்கிறது? அப்படி என்றால், பத்திரிகையின் சுதந்திரம், வெளிப்படுத்த தன்மை எல்லாம் பேசுவதற்காகவா ?அல்லது எழுதுவதற்காகவா? எது என்பதை நீதிமன்றம் தான், இதை தீர்மானிக்க வேண்டும். அரசியல் சாசனம் இதை தான் பத்திரிகைகளுக்கு எழுதி வைத்துள்ளதா?
தவிர, தினசரிக்கு மட்டும்தான் கொடுக்க வேண்டும் மற்ற பத்திரிகைகளுக்கு கொடுக்கக் கூடாது என்ற விதிமுறையும் கிடையாது. ஆனால், எல்லா விதிமுறையும், இவர்களாகவே ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அது மட்டுமல்ல, அரசு அடையாள அட்டை கொடுப்பதற்கு கூட ,மத்திய அரசு கொடுக்கின்ற ஆர் என் ஐ RNI சென்னையில் பத்திரிகை நடத்துபவர்களுக்கு தான் என்று அவர்கள் கொடுக்கவில்லை .
ஆனால், இவர்களாக தான் சென்னையில் பத்திரிகை நடத்துபவர்களுக்கு மட்டுமே கொடுப்போம் என்கிறார்கள். அப்படிப்பட்ட அரசாங்க G.O கிடையாது. அப்படி போட்டாலும் அது தவறானது. அது மத்திய அரசின் சட்டத்திற்கு எதிரானது. மேலும், இந்த பத்திரிகை துறையை சீர் செய்ய முடியாமல் செய்தித் துறை திணறிக் கொண்டிருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் இவர் சொல்வது போல் 20% கமிஷன் அரசியல்வாதிகளுக்கு செல்கிறது. குறைந்த கமிஷன் அதிகாரிகளுக்கும் செல்கிறது. அதனால் ,இந்த கமிஷனுக்காக இந்த ஊழலும், மோசடிகளும் தொடர்கிறது. அடுத்தது இந்த சலுகைகளும், உரிமைகளும் மற்ற பத்திரிகைகளுக்கு மறுக்கப்படுகிறது. அந்த பத்திரிகைகள் தகுதியான பத்திரிகைகளாக இருந்தாலும் ,இதை அரசு அதிகாரிகள் கவனத்தில் கொள்வதில்லை. இதை தடுக்க வேண்டும் என்றால் நீதிமன்றம் தான் ஒரே வழி. அங்கேயும் நடுநிலையான, உண்மையான, நேர்மையான நீதிபதி தான் இதற்கு சரியான தீர்ப்பு வழங்கக்கூடிய தகுதியானவர்.
சிலர் அரசுக்கு சாதகமாகவும், கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகளுக்கு சாதகமாகவும் தீர்ப்புகளை வழங்கி விடுகிறார்கள். இதில் ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், இவர்கள் சர்குலேஷன் வைத்து முடிவெடுப்பது ஒரு தவறான விதிமுறை. இந்த விதிமுறையை மத்திய அரசு மாற்றி அமைக்க வேண்டும். அங்கே மாற்றி அமைத்தால், இந்த ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.மேலும்,
தகுதியான பத்திரிகைகளுக்கு மட்டுமே, இந்த சலுகை விளம்பரங்கள் போய் சேரும். அது வரையில் தகுதியற்ற பத்திரிகைகளுக்கு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இதை தடுக்க சமூகம் நலன் சார்ந்த பத்திரிகையாளர்கள், பத்திரிகைகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். நீதிமன்றம் இதற்கு சரியான தீர்ப்பு வழங்கினால் தான், செய்தித் துறையில் நடக்கின்ற இப்படிப்பட்ட ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது உறுதி.