கலாச்சார மையத்தின் பிரதிபலிப்பு தான் ஜனசக்தி ஒரு கூட்டு சக்தி என்ற தேசிய நவீன கலைக்கூட கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி.

இந்தியா சமூகம் ட்ரெண்டிங் மத்திய அரசு செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

புது டெல்லி உள்ள தேசிய நவீன கலைக்கூடத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி ஜனசக்தி ஒரு கூட்டு சக்தி என்னும் கண்காட்சியை தேசிய நவீன கலைக்கூடத்தின் கண்காட்சியை பார்வையிட்டார். மேலும் பிரதமரின் வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது அத்தியாயத்தை குறிக்கும் வகையில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சி இந்தியாவின் கலைப் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதுடன்,  மனதின் குரல் நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்படும் கருப்பொருள்களால் ஈர்க்கப்பட்டுள்ளது. மேலும்

கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமரிடம் ,  கலைஞர்கள் தங்கள் கலைப் படைப்புகள் பற்றி விளக்கிக் கூறும் வாய்ப்பைப் பெற்றனர். ஜெய்ப்பூர் இல்லத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க குவிமாடத்தில் ஜன சக்தி கண்காட்சியின் அதிவேகத் திட்டக் காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார். கலைப்படைப்புகளைப் பார்த்த பிறகு, பிரதமர் ஜன சக்தி கண்காட்சி அட்டவணையில் கையெழுத்திட்டார், “மனக் கோயிலின் பயணம் சுகமாக அமைந்தது” என்று அதில் அவர் குறிப்பிட்டார். மேலும்,

13 புகழ்பெற்ற நவீன மற்றும் சமகால கலைஞர்கள் தங்களை வெளிப்படுத்த பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்தியுள்ளனர். பன்னிரண்டு கருப்பொருள்களில் தங்களது படைப்புகளை  பிரதமருக்கு விளக்கினர்.   நீர் பாதுகாப்பு, மகளிர் சக்தி, கோவிட் பற்றிய விழிப்புணர்வு, தூய்மை இந்தியா, சுற்றுச்சூழல் ; பருவநிலை மாற்றம், இந்திய விவசாயம், யோகா; ஆயுர்வேதம், இந்திய அறிவியல் ; விண்வெளி, விளையாட்டு , உடற்தகுதி, இந்தியா @ 75; அமிர்த காலம் , வடகிழக்கு இந்தியா மற்றும் இந்தியாவைக் கொண்டாடுகிறது ஆகியவை இதில் அடங்கும். மேலும்,

கண்காட்சியில்  மாதவி பரேக்,  மனு பரேக்,  அதுல் தோடியா,  ரியாஸ் கோமு,  ஜி.ஆர் இரன்னா,  அஷிம் புர்காயஸ்தா,  ஜிதன் துக்ரால்,  சுமிர் தக்ரா,  பரேஷ் மைட்டி,  பிரதுல் தாஷ்,  ஜகன்னாத் பாண்டா,  மஞ்சுநாத் ஹெச்காமத் மற்றும் விபா கல்ஹோத்ரா ஆகியோரின் கலைப் படைப்புகள் இதில் இடம் பெற்றிருந்தன. மேலும்

மத்திய கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு கோவிந்த் மோகன், கிரண் நாடார் கலை அருங்காட்சியகத்தின் நிறுவனர் திருமதி கிரண் நாடார், நிகழ்ச்சியின் கண்காணிப்பாளர் டாக்டர் அல்கா பாண்டே ஆகியோரும், புது தில்லியில் உள்ள கலாச்சார அமைச்சகம் மற்றும் தேசிய நவீன கலைக்கூடத்தின் மற்ற அதிகாரிகள்  பணியாளர்களுடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *