கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அங்குள்ள லிங்காயத் சமுதாயமும், வொக்கலிகர் சமுதாயமும் இரண்டுமே தனிப்பெரும்பான்மை சமூகம் .இந்த சமூகங்கள் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது. மேலும் முன்னாள் மெட்ரோ குடிநீர் வாரிய என்ஜினியர் சி ஆர் ராஜன் தெரிவிப்பது, நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அங்குள்ள மக்கள், அரசியல் கட்சியை தாண்டி ,சமூகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாக்களித்து வெற்றி பெற செய்திருக்கிறார்கள் .
எந்த கட்சியில் யார் போட்டியிட்டிருந்தாலும், அந்த சமூகத்தை சார்ந்தவர் மட்டும்தான் வெற்றி பெற்று இருக்கிறார்கள். என்பதை கர்நாடகா தேர்தல் முடிவு எடுத்துக்காட்டுகிறது என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். மேலும் ராமசாமி படையாட்சியார் 1952 முதல் 1962 வரை உருவாக்கிய அரசியல் மாற்றம் தான், தமிழ்நாட்டில் வன்னியர் வாக்கு அன்னியருக்கு இல்லை என்று குரல் கொடுத்தவர் . இதைதான் வன்னியர் சமூகம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
எத்தனையோ பேர் இந்த சமூகத்தை ஏமாற்றி பெரிய அளவில் வந்திருக்கலாம். தவிர சமூகம் தொடர்ந்து இவர்களிடம் ஏமாறுமா? மேலும், சமூகத்திற்கு இனி சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் பல ஏமாற்றங்களைக் கடந்து, உண்மையான சமூகத்தின் அமைப்புகளையும், தலைவர்களையும் தேடி ,அதன் பின்னால் நிற்க வேண்டும் என்பதுதான் இப்போது சமுதாயத்தின் முக்கிய எதிர்பார்ப்பு .
அதற்கு உரிய பங்களிப்பு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இதுவரையில் வன்னியர் சத்ரியர் சாம்ராஜ்யம் நிறுவனத் தலைவர் சி ஆர் ராஜன் செய்து வருவது சமூகத்திற்கு புரிந்து இருக்கும் .மேலும் ,சமூகத்தின் ஒற்றுமை தான் அரசியல் அடிப்படை உரிமைக்கு வெற்றியை ஏற்படுத்தித் தர முடியும் .அந்த உரிமையை ஏற்படுத்தித் தர நானும், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகமும், சேர்ந்து நடத்திய போராட்டத்தின் விளைவு தான் இன்று வன்னியர்களுக்கு 10 .5 சதவீத இட ஒதுக்கீடு, அதையும் திமுக அரசு கொடுக்கக் கூடாது என்று சூழ்ச்சி மேல் சூழ்ச்சி செய்து தடுத்து வருகிறது.
இதற்கு வன்னியர் சமுதாயம் என்ன முடிவெடுத்து? தங்களுடைய அரசியல் உரிமைப் பிரச்சனையை எப்படி தக்க வைத்து கொள்ளப் போகிறார்கள்? என்பது வன்னிய சமுதாயத்தின் கையில் தான் உள்ளது. மேலும், இப் பிரச்சனைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து போராடிதான் வருகிறோம். ஆனால், அதிகாரம் திமுகவின் கையில் இருப்பதால் ,அதை தடுப்பதற்கு எத்தனை வழி உள்ளதோ அத்தனை வழியும், திமுக செய்து கொண்டு இருக்கிறது.
இதற்கு ஒரே பதில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் வன்னியர்களின் பலம் என்ன என்பதை திமுகவிற்கு ஒரு பாடமாக காட்ட வேண்டும் என்பதுதான் சமுதாய மக்கள் ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய சமூக கடமை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் – சமூக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடும் வன்னிய சத்திரிய சாம்ராஜ்ய நிறுவனத் தலைவர் சி ஆர் ராஜன்.