விவசாய விலை பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் விற்பனை செய்ய அமேசான் – கிசான் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் .

அரசியல் இந்தியா சமூகம் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

விவசாய உற்பத்தி விலை பொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்ய இடைத்தரர்களிடம் விவசாயிகள் ஏமாந்து வருகிறார்கள் அதில் இருந்து அவர்களை மீட்க மத்திய அரசு விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்து அமேசான் கிசான் உடன் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் புரிந்து உணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து உள்ளது.

மேலும்,அதிகப்பட்ச விளைச்சல் மற்றும் வருவாய்க்காக விஞ்ஞான ரீதியில் பல்வேறு பயிர்களை பயிர் செய்ய விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் அளிப்பதற்காகவும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்), அமேசான் கிசான் ஆகிய அமைப்புகளுக்கு இடையே கூட்டான பலத்தையும், ஆற்றலையும் உருவாக்குவதற்காகவும், புதுதில்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.மேலும்,

அமேசான் நெட்வொர்க் மூலம் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆதரவை ஐசிஏஆர் வழங்கும். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு பயிர்களின் விளைச்சலை அதிகப்படுத்த உதவும். அமேசான் ஃபிரஷ் உள்ளிட்டவற்றின் மூலமாக நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு உயர்தரமான புதிய உற்பத்திப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.மேலும்,

தொழில்நுட்பங்கள், திறன் கட்டமைப்பு, புதிய ஞானத்தை பரிமாறிக் கொள்ளுதல் ஆகியவற்றில் அமேசானுடன் ஐசிஏஆர் ஒத்துழைக்கும் என்று இதன் தலைமை இயக்குநரும், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் செயலாளருமான டாக்டர் ஹிமான்ஷு பதக் தெரிவித்தார். வேளாண் மற்றும் பருவ கால அடிப்படையிலான சாகுபடி திட்டங்களில் தகவல்கள் கிடைப்பதன் முக்கியத்துவத்தையும், பங்களிப்பையும் அவர் எடுத்துரைத்தார். தவிர,

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐசிஏஆர் சார்பில் டாக்டர் யு.எஸ்.கௌதம், அமேசான் ஃபிரஷ் விநியோகத் தொடர் மற்றும் கிசான் சார்பில் சித்தார்த்த டாடா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் விவசாயிகளுக்கு அமேசான் பயிற்சி அளிப்பதோடு அவர்களின் உற்பத்திப் பொருட்களை தனது இணையதளம் வாயிலாக சந்தைப்படுத்தும்; நுகர்வோர்களுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்தும் என்கின்றனர் விவசாய விஞ்ஞானிகள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *