நாட்டுக்கு எதிரான சக்திகளால் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் – முன்னாள் நீதிபதிகள் அதிகாரிகள் கவலை.

அரசியல் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி ட்ரெண்டிங் தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு அச்சுறுத்தும் வகையில் அந்நிய சக்திகள் மறைமுகமாக முயற்சிக்கின்றன. இது பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரிசா ரயில் விபத்து சம்பவம் தொடர்பாக, முன்னாள் நீதிபதிகள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் ,முன்னாள் ராணுவ அதிகாரிகள், ஆகியோர் கூட்டாக எழுதி உள்ள கடிதத்தில் பயங்கரவாத அமைப்புகளின் உத்தரவால் நடைபெற்ற சதி வேலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதற்குரிய காரணங்கள் உள்ளன.

 மேலும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் முதல் கட்ட தகவல்களின் அடிப்படையில் சம்பவம் உள்நோக்கத்துடன் நடைபெற்ற மனித குறுக்கீடு காரணமாக இருக்கலாம். தவிர ,எங்களில் சிலர் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றியவர்கள். அப்போது, ரயில்வே கட்டமைப்பின் சமூக செயல்பாட்டை கெடுக்கும் நோக்கில் நடைபெறும் சதி வேலைகளை நாங்கள் ஏற்கனவே எதிர்கொண்டு உள்ளோம். இத்தகைய பகுதிகளில் ரயில் இயக்கத்தை சீர்குலைப்பதற்கான இது போன்ற முயற்சிகள் நடந்திருக்கின்றன.இதனால், உயிர் சேதங்களும் நிகழ்ந்துள்ளது.

 மேலும், ஜம்மு காஷ்மீரில் 1990 மற்றும் 2000 தொடக்க ஆண்டுகளில் ரயில் தண்டவாளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அவை சேதப்படுத்திய பல சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும், நாட்டின் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு உயிர்நாடியாக ரயில்வே இருந்து வருகிறது. இது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான சக்திகள் ரயில்வே இயக்கத்தை சீர்குலைக்க விரும்பி உயிர் இழப்பு மற்றும் பேரழிவு உருவாக்க வேண்டும் என்பது அவர்களுடைய நோக்கம்.

 இதனால் ஒட்டுமொத்த ரயில்வே கட்டமைப்பும் வடகிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் பாதிக்கக் கூடியதாக உள்ளது. இந்த நாச வேலைகள் செய்பவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, ரயில் தண்டவாளங்களை ஒட்டி வசிப்பவரை அப்புறப்படுத்தி தண்டவாளங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும்,

இக்கடிதத்தில் 14 முன்னாள் நீதிபதிகள், 115 ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், 141 ராணுவ மற்றும் காவல் துறை முன்னாள் அதிகாரிகள் என 270 பேர் இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர். அவர்களில் குறிப்பிட்ட சிலர் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அணில் தேவ் சிங், குஜராத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ் எம் சோனி, உத்தரப்பிரதேச முன்னாள் டிஜிபி விக்ரம் சிங், மகாராஷ்டிரா முன்னாள் டிஜிபி பிரவீன் தீக்ஷித், சிபிஐ முன்னாள் இயக்குனர் நாகேஸ்வரராவ், பாதுகாப்பு துறை முன்னாள் செயலர் யோகேந்திர நாராயன்,  தேசிய புலனாய்வு முகமையின் முன்னாள் இயக்குனர் யோகேஷ் சந்தர் மோடி உள்ளிட்ட பலர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதிலிருந்து நாட்டு மக்கள், இந்த நாட்டுக்கு எதிரான அந்நிய சக்திகள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்? மேலும், பல தீவிரவாத அமைப்புகள் ,தேசவிரோத சக்திகள், பயங்கரவாத அமைப்புகள், இவை எல்லாம் அந்நிய சக்திகளின் கைக்கூலிகளாக இந்தியாவுக்குள் எப்படி ஊடுருவி உள்ளது? இதற்கு பின்னணியில் உள்ள அரசியல் கட்சிகளின் பின்புலம்? அல்லது அமைப்புகளின் பின்புலம்? இவை எல்லாம் NIA, CBI, Rao Central investigation agency போன்ற பல அமைப்புகள் இந்தியாவை கண்காணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மேலும்,

 இந்த தீவிரவாத அமைப்புகளுக்கு பின்னால் ஏதோ ஒரு அரசியல் கட்சி பின்புலமாக இயங்குகிறது .அதை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .மேலும், நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த தீவிரவாதம் கொடுக்கப்பட்டு வந்தாலும், அதற்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்பது தான் இது போன்ற சம்பவங்கள், திடீர் என்று அரங்கேறி வருகிறது.

 இது இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு முக்கிய காரணமே காங்கிரஸ் கட்சி தான். இதை பற்றி உளவுத்துறை ரிப்போர்ட்டுகளில் ஆய்வு செய்து பார்த்தால், எந்தெந்த ஆட்சியில் இந்த தீவிரவாதம் வளர்ந்துள்ளது? எந்தெந்த ஆட்சியில் அது ஒடுக்கப்பட்டுள்ளது ?என்பது புலனாய்வு அமைப்புகளுக்கு நன்கு தெரியும்.

மேலும்,இதை தான் மக்கள் அதிகாரம் மக்களுக்கு மறைக்கப்பட்ட பல உண்மைகளை எடுத்துரைக்கிறது .காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எதையும் உருப்படியாக செய்யவில்லை. நான் பழைய காங்கிரசை சொல்லவில்லை. இந்திரா காங்கிரஸ் கட்சியை மட்டும் தான் குறிப்பிடுகிறேன். இதனுடைய 50 ஆண்டுகால அரசியல் நாட்டை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளிவிட்டது. இதையெல்லாம் புரியாமல் மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்து, நாட்டின் பாதுகாப்புக்கு மற்றும் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலான ஒரு அரசியல் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை எப்படி மக்கள் தேர்வு செய்கிறார்கள்? பணத்திற்காக, இலவச பொருளுக்காக, சுயநலத்திற்காக இந்த தேசத்தின் பாதுகாப்பு ,வளர்ச்சி பற்றி சிந்திக்காமல் வாக்களித்தால், ஒரு வலுவான தேசத்தின் எதிரான சக்திகள், எதிர்கால இளைஞர்களின் வாழ்க்கையை பாழாக்கி விடும் என்பதை ஒவ்வொரு இந்தியரும் புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *