தமிழ்நாட்டிற்கு அரசியல் பல்ஸ் பார்க்க வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா இங்குள்ள சில முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்துள்ளார். இது தவிர, சில தொழிலதிபர்கள், வியாபாரிகள் சந்தித்து அரசியல் நிலவரங்களை கேட்டறிந்துள்ளார். இந்நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இருவரும் சந்திக்க நேரம் கேட்டார்கள். ஆனால், அவர்களை சந்திப்பதற்கு பிஜேபி தலைவர் அண்ணாமலை ஏற்பாடு செய்யவில்லை என்பது இரண்டு பேருக்குமே வருத்தம். அதனால்தான் எடப்பாடி பழனிசாமி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும்,
ஜெயலலிதா இறந்த பிறகு, தமிழ்நாட்டின் அரசியல் வெற்றிடமாக தான் அரசியல் கட்சிகள் பார்த்தன .அதிலும், பிஜேபி அதை தனக்கு சாதகமாக கொண்டு வர எடப்பாடியை கையில் வைத்துக் கொண்டு, தமிழகத்திற்கு அதிகப்படியான நிதியுதவி மற்றும் திட்டங்களை அள்ளிக் கொடுத்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக அமைச்சர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் அதை முறையாக இவர்களுக்குள் பங்கு பிரித்துக் கொண்டார்கள். ஆட்சி கை மாறிவிட்டது.
தற்போதுள்ள திமுக ஆட்சி ! மக்களின் வெறுப்பு அரசியல் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரே வார்த்தையில் சொல்ல போனால், இது சுயநல அரசியல் ,பொதுநல அரசியல் அல்ல. மேலும் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல், பா ஜ க தலைவர் அண்ணாமலை ஒரு பக்கம் வெளியிட்டு வந்தார்.
இது தவிர, செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தோட்டம் அவருடன் லிங்கில் இருந்த அத்தனை பேரும் வருமானவரித்துறை தோண்டி துருவி பார்த்து வருகிறது. அதிலும் தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை துணை இராணுவ பாதுகாப்புடன் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை நடத்தப்பட்டது.
( இது போன்ற நேரங்களில் நெஞ்சு வலி வரத்தான் செய்யும் .)
இதில் செந்தில் பாலாஜி தப்பிப்பதற்கு என்னென்ன வழிகளைப் பயன்படுத்தி தப்பிக்க முடியுமோ அதை எல்லாம் செய்துவிட்டார் .இருப்பினும், சிக்கலில் மாட்டி, வருமானவரித்துறை கைது செய்து விட்டது.மேலும், இதை முதல்வர் மு க ஸ்டாலின் இது பாஜகவின் பழிவாங்கும் அரசியல் என்று தெரிவித்திருந்தார்.
இது எல்லாம் அரசியல் லாபங்களுக்கு அரசியல் எதிர் கட்சிகளான காங்கிரஸ் முதல் திமுக வரை பல எதிர்க்கட்சிகள் இதை தான் சொல்லி வருகின்றன. மேலும்,
தமிழ்நாட்டின் அரசியல் ஒரு வித்தியாசமான அரசியல். இங்கே கிறிஸ்தவ, முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக மத அரசியலை கையில் எடுத்துக் கொண்டு செயல்படுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு அரசியல் பின்னணியில் எத்தனை பிராடு வேலைகளை செய்து கொண்டு இருந்தாலும், சாமியார்கள் வேஷத்தில் தமிழ்நாட்டில் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் பிஜேபி தமிழ்நாட்டில் வந்துவிடக் கூடாது இதுதான் ஒரே நோக்கம். இதற்காக மோகன் லாரன்ஸ் ஜெபம் கூட செய்வார்.
இவர்கள் கடவுளை கும்பிடுகிறார்களோ இல்லையோ தெரியாது. ஆனால், மதவாழிபாடு என்ற பெயரில் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் பிஜேபிக்கு ஒரு மிகப்பெரிய எதிர்ப்பு அரசியல் .காரணம், இந்த மத அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் இருந்து ஹவாலா பணத்தை மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கொண்டு வந்து இந்தியாவின் பொருளாதாரத்தை மறைமுகமாக சீரழிக்கும் வேலையில் ஈடுபட்டவர்கள்.அதை கண்காணித்து பிஜேபி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இது தவிர, மதமாற்று வேலை. இது எல்லாம் அவர்களுக்கு சுதந்திரமாக செயல்பட பிஜேபி ஒரு முட்டுக்கட்டையாக உள்ளது என்று ஒட்டுமொத்தமாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியாக தான் தமிழ்நாட்டின் இந்த மத அரசியல்வாதிகள் இருந்து வருகிறார்கள். இதை வெளியில் தெரியாமல் திமுக அரசியல் செய்து கொண்டிருக்கிறது .
இவர்கள் இந்து கோயிலை பூட்டினாலும், உடைத்தாலும் சந்தோஷப்படுவது இந்த கிறிஸ்துவ, முஸ்லிம் மத அரசியல்வாதிகள். இது தெரியாத வன்னியர் சமூகம், தாழ்த்தப்பட்ட சமூகமும் அடித்துக் கொண்டு நிற்பார்கள் .இவர்களை கொம்பு சீவி விட திருமாவளவன் மற்றும் ராமதாஸ் இருக்கிறார்கள். இந்த உண்மையும் இரண்டு சமூகங்களுக்கு தெரியாது. இந்த அரசியல் எல்லாம் தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு இன்னும் புரியவில்லை. இந்த அரசியல் இந்துக்களுக்கு தெரியாமல் இதை ஊடகங்கள் மறைத்து வருகின்றன .
மேலும், தமிழ்நாட்டின் அரசியல், மக்களுக்கு சேவை செய்வதை விட, தற்போது கொள்ளையடிப்பது தான் முக்கிய நோக்கமான அரசியல். கொள்ளை அடித்து விட்டு ,தேர்தல் வரும்போது இலவச அறிவிப்பும், பணமும், இலவச பொருட்களும் கொடுத்து, இந்த மக்களை எளிதில் ஏமாற்றி வாக்குகளை பெற்று விடலாம் என்பதுதான் திமுக, அதிமுகவின் அரசியல்.
இந்த அரசியல் தெரியாத மக்கள் !தமிழ்நாட்டில் இருக்கும் வரை, இந்த இரண்டு கட்சிக்கும் லாபம். அடுத்தது குடிகாரர்கள் இருக்கும் வரை இரண்டு கட்சிகளுக்கும் லாபம். அடுத்தது பணம் கொடுத்தால் எந்த கட்சிக்கும் வாக்களிக்கும் மகளிர் குழுக்கள் இருக்கும் வரை இரண்டு கட்சிகளுக்கும் லாபம் .இந்த நிலையில் பீல்டு ஒர்க் இல்லாமல் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்து விட பிஜேபி கனவு காண்கிறது. இவர்கள் எல்லாம் மீடியோவில் அரசியல் செய்தால், தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியாது.
மேலும், இங்கு உள்ள மக்கள் இந்த இரண்டு கட்சிகளுக்கும் ,அடிமைகளாக இருந்து பழக்கப்பட்டவர்கள். தவிர ,இங்கே கலாச்சாரம் சீரழிக்கப்பட்டுள்ளது.. கலாச்சார சீரழிவிற்கு சினிமா, தொலைக்காட்சிகள் முக்கிய காரணம்.அதனால் எப்படியும் பேசி, எப்படியும் வாழலாம் என்ற நிலைக்கு மக்கள் தற்போது இருந்து வருகிறார்கள்.
இந்த ஜெனரேஷன் மாறினால் தான், அதாவது இளைய தலைமுறைகள் நிச்சயம் இந்த அரசியலை ஏற்றுக் கொள்ளாது .அதில் எனக்கு 100% நம்பிக்கை உள்ளது. அதனால் பிஜேபி பீல்ட் வொர்க் செய்து மக்களை அணுகும் போது அடுத்த இளைய தலைமுறைகள் நிச்சயம் இவர்கள் பினனால், தமிழ் நாட்டில் பி ஜே பி ஆட்சிக்கு வர வெற்றியை ஏற்படுத்துவார்கள் என்பது உறுதி.
(பிரபல பத்திரிகை என்று சொல்லிக் கொள்ளும் இந்து பத்திரிகை இணையதளத்தில் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் அரசியல் என்று எதிர்க்கட்சிகளின் பிரதிநிதியாக செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் இது போன்ற பெரிய பத்திரிகைகள் என்று சொல்லிக் கொண்டு அவர்களுக்கு வக்காலத்து வாங்கி மக்களை முட்டாள்கள் ஆக்கும் வேலையை செய்வது பெரிய பத்திரிகைகள் ஆகிவிடாது. இது பத்திரிகையில் இருப்பவர்களுக்கு புரியும். மேலும், உண்மையை வெளிப்படுத்துவதற்கு தான் பத்திரிகையே, தவிர, ஊழல்வாதிகளுக்கு முட்டுக் கொடுப்பதற்கு பத்திரிகை தேவையில்லை.
பத்திரிகை என்பது பொதுநல நோக்கத்திற்கானது. சுயநல நோக்கத்திற்காக அல்ல. மேலும், சாதாரணமாக ஒரு திருடன் பிடிபட்டால் கூட தான், எந்த தவறும் செய்யவில்லை என்றுதான் காவல் நிலையத்தில் பேசுவான். நீதிமன்றத்தில் பேசுவான் . அவன் பேசுவதை எல்லாம் பத்திரிகையில் வெளியிட முடியாது.
அப்படிப்பட்ட செய்திகளை வெளியிட்டால் அது திருடனுக்கு ஆதரவான பத்திரிகை என்பது ஊர்ஜிதம் ஆகிவிடும். அது போல தான், தமிழ்நாட்டின் சில பத்திரிகைகள் மறைமுக ஆதரவாக செய்திகளை வெளியிடுகிறது என்கின்றனர் பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள்.)